புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
குழந்தைத் தாய்மார்கள்

குழந்தைத் தாய்மார்கள்

லங்கா பட்டுணவில் புதிய அனுபவம்

நான் முன்னர் உங்களுக்கு எழுதிய கல்லடி பிரதேசத்தின் குழந்தைத் தாய்மார்களின் செய்தியானது மின்னல் வேகத்தில் நாடு முழுதும் பரவிச் சென்றுள்ளது. தொலைக்காட்சி அலைகளின் செய்திகளிலும் வானொலி அலைகளில், பத்திரிகை செய்தி விடயங்களிலும் பெரும் பிரபல்யத்தைப் பெற்றுக்கொடுத்தது.

வாசகர்கள் பல விடயங்களைக் கூறி என்னை ஊக்குவித்ததோடு சிலர் அந்த குழந்தைத் தாய்மார்களுக்கும் சின்னஞ் சிறுசுகளுக்கும் உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் தயாராக உள்ளனர்.

நான் நினைத்திருந்தது என்னவென்றால் கல்லடி பாஷான பப்பத விகாரை அன்று புலிகளின் குரல் வானொலி அலைவரிசை நடத்திச் சென்ற இந்த கண்டைனர் பெட்டியில் வசிக்கும் இரத்தினபுரி வைத்திய பிக்கு பற்றி எழுதவே நினைத்திருந்தேன். ஆனால் எனதும் உங்களுடையதுமான உணர்வுபூர்வமிக்க இதயங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக இத்தகைய விடயங்களை அறிந்துகொள்ள பெரும் ஆர்வத்துடன் இருப்பதை நான் அறிவேன். எனவே நான் அதன் இரண்டாம் அத்தியாயத்தை எழுதுகின்றேன். கல்லடி, புன்னடி கிராமங்களைக் கடந்து நீண்டிருக்கும் இந்த குறுகிய தார் பாதையில் நான் இன்னும் மூன்று மடங்கு தூரம் சென்றேன். பெருங்கடலும் ஆறும் எல்லைப்படுத்தப்படும் முகத்துவாரத்தில் இப்பாதை முடிவடையும்.

தூரத்தில் கற்பாதையின் உச்சியில் வானத்தில் பூத்திருக்கும் வெண் தாமரைப் பூவைப் போல் காணப்படும் யாழ்ப்பாண சந்தாகார விகாரை என் கண்களில் தெரிகின்றது. பெருங்கடலில் இந்த முகத்துவாரத்தின் குறுக்கே கல்லடிக்கும் லங்காபட்டுணவுக்கும் குறுக்காக மக்களுக்கு பயணம் செய்ய இருந்த கல்லடி பாலத்தை புலிகள் பல காலங்களுக்கு முன்பே அழித்து விட்டனர். அந்தப் பாலத்தை இப்போது இராணுவத்தினர் மிக விரைவாக மீளமைக்க ஆயத்தமாகின்றார்களென கடற் படை அதிகாரி ஒருவர் எம்மிடம் கூறினார். கடலைச் சூழ கட்டப்பட்டிருந்த ஒரு வேலியாக இருந்த இலங்கை கடற்படையானது கல்லடி பப்பத விகாரை, லங்கா பட்டுன விகாரையும், வடக்கே கடலுக்கு எல்லைப்படுத்தப்பட்ட சகல பெளத்த விகாரைகளையும் பாதுகாத்துக்கொள்கிறார்கள் என்பதை நான் அனுபவ மூலமாகக் கண்டு கொண்டேன். இலங்கை அரசாங்கம் இந்த விகாரைகளுக்கு கடற்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு பெற்றுக்கொடுத்துள்ளது. அங்கிருக்கும் பிக்குமாருக்கு உணவு வழங்குவதும் கடற்படையினரே.

லங்கா பட்டுணவின் அதன் வரலாற்றைப் பற்றி சிறிது ஞாபகமூட்ட வேண்டும். லங்கா பட்டுண பிரதேசம் பல தமிழ் கிராமங்களால் சூழப்பட்டது. எனவே வரலாற்று புகழ்மிக்க விகாரையும் இதற் குள்ளே அமைந்திருந்தது. தமிழ் மக்கள் இன்று சமாதானத்தைப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களிடம் காணப்படும் வறுமையை ஒழிக்க அவர்களின் பிரச்சினைகளை மிக ஆர்வத்தோடு தெரிந்துகொள்ள இன்னுமே அவர்கள் மறைத்து வைத்திருக்கும் ஏதோ ஒரு சக்தி அவர்களுக்கு இடங்கொடுக்காமல் இருக்கின்றது.

சகுந்தலா தேவி என்ற 33 வயதுடைய பாட்டியை நான் சந்தித்தது லங்கா பட்டுண கிராமத்தில் தான். கடலிலிருந்து சிறிது அப்பால் சுனாமி உதவிகளால் கட்டப்பட்ட ஒரு வீட்டில் வாழும் அவர்களின் கண்ணீர் கதையை நீங்களும் கேளுங்கள். கடற்படை அதிகாரி நபீக் என்பவர் மூலம் நான் அவர்களுடன் பேச்சுகளில் கலந்துகொண்டேன். நான் கேட்ட சில கேள்விகளுக்கு அவள் இவ்வாறு பதில் கூறினாள்.

என்னுடைய கணவன் பொன்னையா வடிவேல். நாங்கள் என்றுமே மீன் வியாபாரத்தைத்தான் செய்து வந்தோம். புலிகள் இருந்த காலத்தில் எங்களுக்குக் கடலுக்குச் செல்ல முடியாது. வேறு ஒரு தொழிலைச் செய்யப்போனாலும் பல பிரச்சினைகள். நாங்கள் பிடிக்கும் மீனுக்கும் அவர்களுக்கு வரி செலுத்தவேண்டும். எனக்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள் ஐயா. பெண் பிள்ளைகள் 4 பேரும், ஆண் பிள்ளைகள் 2 பேரும் இருக்கிறார்கள். பெரிய மகள் நளினி. அடுத்த வன் நளின்தன். மூன்றாவது நளின். நான்காவது நலாகினி. ஐந்தாவது சுனாமி. அவன் இல்லையென்றால் நாங்கள் யாரும் இன்று இல்லை.

ஏன்? அப்படி சொல்கிaர்கள். நான் பெரும் எதிர்பார்ப்போடு கேட்டேன். அவள் நிறைய விடயங்களைச் சொல்ல என் முன்னால் வீட்டு முற்றத்தின் நிலத்தில் உட்கார்ந்தாள். அந்த வீட்டில் இருப்பது கட்டடம் மாத்திரமே. உட்கார ஒரு கதிரை கூட இல்லை. நான் படிக்கட்டில் விரிக்கப்பட்ட ஒரு பாய் துண்டொன்றின் மேல்தான் உட்கார்ந்தேன். என்னோடு வந்தவர்கள் இன்னுமே முற்றத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள்.

அன்று 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி, சுனாமி நாடு முழுவதும் ஆட்கொண்ட நாள். அன்று காலை எனக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல ஒருவர் என் கணவருக்கு உதவினார். மற்ற பிள்ளைகளை கல்லடியில் ஓர் இடத்தில் தங்க வைத்தோம். நாங்கள் வாழ்ந்தது கரையோரமாக இருந்த ஒரு குடிசையில்.

பெரும் அலைகள் எங்கள் குடிசைகளை உடைத்துக்கொண்டு கரைக்கு வந்துள்ளது. இப்பிரதேசமே அமிழ்ந்து விட்டது. இங்கிருந்த பலர் கடலுக்கே அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் அன்று பிள்ளை கிடைக்க வருத்தப்பட்டு நாங்கள் வீட்டிலிருந்து சென்றமையால் எங்கள் குடும்பம் காப்பாற்றப்பட்டது. அதனால்தான் அந்தப் பிள்ளைக்கு சுனாமி என்று பெயர் வைத்தோம். இதோ இருப்பது சுனாமி. அவன் என் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு பிள்ளையாக இருக்கின்றான். அதன் பிறகு எனக்கு சித்ரசாளினி என்றொரு பெண் பிள்ளையும் கிடைத்தாள். இப்போது எனக்கு வயது 33. எத்தனை வயதில் திருமணம் செய்தீர்கள்? நான் அந்தக் கேள்வியைக் கேட்ட போது அவள் என்னோடிருந்த கடற்படை அதிகாரியையும் பொலிஸ் அதிகாரியையும் மிகவும் பணிவோடு பார்த்தாள்.

இல்லை. நாங்கள் குறைந்த வயதில் திருமணம் செய்திருப்போரை தேடிப்பிடிப்பது எங்கள் நோக்கமல்ல. உங்கள் பிள்ளையும் குறைந்த வயதில் தான் திருமணம் செய்திருக்கிறாள் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு வேண்டும் உங்களுக்கு உதவிகளைக் பெற்றுக்கொடுக்கவே என்று நான் கூறினேன். அவள் விக்கி விக்கி மெல்ல குளறிக்கொண்டு பயந்த ஒரு மான் குட்டியைப் போல அங்குமிங்கும் பார்த்த வண்ணம் பேசினாள். ஐயா எனக்கு அப்போதைக்கு 14 வயது மட்டும்தான். புலிகள் எல்லா இடத்திலும் அவர்களின் இயக்கத்துக்கு பிள்ளைகளை சேர்த்துக்கொண்டிருந்த போது ஒரு நேரம் சாப்பாடுகூட இல்லாமல் துன்பப்படும் நாம் ஒன்று சேர்ந்து அழுது கொண்டிருந்தோம். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரே வழி திருமணம் செய்வதுதான் என்று எங்கள் மேல் ஆர்வம் கொண்ட சில மூத்தோர் கூறி னர். நான் வடிவேலை திருமணம் செய்தேன் என்றார்.

மூலம்: உபாலி சமரசிங்க

தமிழில்: நிஷா ஆப்டீன்...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.