புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
உற்றுக் கேட்டனரே தவிர உறுதிமொழிகள் எதுவுமில்லை

உற்றுக் கேட்டனரே தவிர உறுதிமொழிகள் எதுவுமில்லை

இந்திய விஜயம் குறித்து செல்வம் MP கவலை

இந்தியாவுக்கான தமது விஜயம் இனப் பிரச்சினைத் தீர்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துமென தாம் நம்பிக்கை கொண்டுள்ள போதும் இந்தியத்தலைவர்கள் இனப் பிரச்சினை தீர்வில் காத்திரமாக உறுதி மொழிகளை வழங்குவதில் தயக்கம் காட்டுவதாக தமிழ்க்கூட் டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அனைத்து தலைவர்களும் தமிழர் பிரச்சினைகளை நன்கு கேட்டறிந்தனர். தற்கால அரசியல் நிலவரம் தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங் அவற்றை ஆவலாக கேட்டபோதும் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டு மென்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ்க் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பிலான பலாபலன்கள் என்னவென்று தமிழ்க்கட்சி யொன்றின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது இது எல்லாம் புளித்துப்போன கதை. நாங்கள் இதுவரையில் எத்தனை பேரைச் சந்தித்திருப்போம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிநாடுகளின் முக்கிய இராஜதந்திரிகளிடம் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியுள்ளோம்.

கூட்டமைப்பினர் அமெரிக்கா சென்றனர். தற்போது இந்தியா சென்று திரும்பிவந்துள்ளனர். ஏதோ நல்லது நடக்கும் என்று தான் நாம் நினைக்கின்றோம். ஆனால் வெளிநாடுகள் இந்தப் பிரச்சிணைக்கு தீர்வு பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கை குறைந்து விட்டது என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.