புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

உள்@ராட்சித் தேர்தல் முறையில் புகுத்தப்பட்டுள்ள திருத்தங்கள் காலத்துக்கு பொருத்தமானவையே

உள்@ராட்சித் தேர்தல் முறையில் புகுத்தப்பட்டுள்ள திருத்தங்கள் காலத்துக்கு பொருத்தமானவையே

அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன

எதிர்காலத்தில் எமது நாட்டில் சீனி இறக்குமதிக்குச் செலவாகும் வெளிநாட்டு செலாவணியில் 50 சதவீதத்தை குறைத்துக் கொள்வதே எமது நோக்கம் அந்த இலக்கை நோக்கி எம்மால் நகர முடியும் என நான் நம்புகிறேன். எமக்கு அந்த இலக்கில் வெற்றி பெற முடியுமாயின் பெருந் தொகையான பணத்தை எம்மால் மீதிப் படுத்த முடியும். இவ்வாறு அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்தார்.

தேர்தல் முறை மாற்றங்கள், உள்ளூராட்சித் தேர்தல் முறை திருத்தங்கள் மற்றும் நிகழ்கால அரசியல் விடயங்கள் பற்றி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்னவோடு நடத்திய பேட்டியை இங்கு தருகின்றோம்.

கேள்வி: விருப்பு வாக்கு முறை, விகிதாசார தேர்தல் முறை தொடர்பான விடயங்களே இந்நாட்களில் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இதன் ஆரம்பமாக உள்ளூராட்சித் தேர்தல் முறையில் திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இது உண்மையிலேயே காலத்தின் ஒரு தேவையாகவே எடுத்துக் கொள்ளலாம். இந்நாட்டின் உள்ளுராட்சி தேர்தல் முறைக்கு பெரியதோர் வரலாறு உண்டு. ஆனால் பிற்காலத்தில் வந்த பல திருத்தங்களினால் இந்த உள்ளுராட்சி முறை பெரும் அழிவுக்குட்பட்டது. இம்முறை மாற்றப்பட வேண்டுமென மக்கள் மத்தியில் கருத்து காணப்பட்டது. அதற்கு செவிசாய்த்தே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பொறுப்பு என்ற விடயம் மக்கள் பிரதிநிதிகளிடம் பெருமளவு பின்னிலையிலேயே காணப்பட்டது. எனவே இந்த திருத்தத்தை சிறந்த ஆரம்பமாக எடுத்துக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முறையில் தமது கிராமத்துக்கு பொறுப்பு சொல்லக் கூடிய ஒரு பிரதிநிதி இருக்கவில்லை. கிராமத்துக்கு தேவையற்ற, கிராமத்தாருக்கு வெறுப்பூட்டக் கூடியவர் பிரதிநிதியாகும் சந்தர்ப்பம் இல்லாமலாகிறது.

அதனை வேறு வகையில் கூறுவதானால் கிராமத்துக்கே தேவையில்லாத ஒருவர் கிராமத்துக்கு வெளியில் சென்று விருப்பு வாக்கைப் பெற்று உள்ளூராட்சிச் சபையில் நியமிக்கப்படலாம். அதற்குக் காரணம் இதற்கு முன்பிருந்த தேர்தல் முறையில் கிராமத்துக்கு அப்பால் சென்று விருப்பு வாக்குகளைப் பெற முடியுமாக இருந்தமையே, ஆனால் புதிய முறையில் இவ்வாறு தேர்தலில் வெற்றி பெற முடியாது. பிரதேசத்தில் பிரபல்யம் இருக்க வேண்டும். அதேபோல் நியமிக்கப்படுபவருக்கு மக்கள் சேவை தொடர்பான பெரும் பொறுப்பும் இருக்கின்றது. அதனால் இந்த புதிய முறையானது மக்கள் தொடர்பான பொறுப்பை முன்னெடுத்துச் செல்லும் மக்கள் மயப்பட்ட திருத்தமொன்றென நான் நினைக்கிறேன்.

கேள்வி: இந்த தேர்தல் முறை திருத்தத்தில் இதற்கு முன்பிருந்த இளைய பிரநிதிகளுக்கு 35சதவீதம் என்ற சட்டமானது நீக்கப்பட்டுள்ளது. அது ஒரு பாதகமான விடயமென்று விமர்சகர்கள் கூறுகிறார்களே?

பதில்: இல்லை. இந்த தர்க்கம் பிழையானது. அன்றிருந்தது இளைய தலைமுறைக்கு 35சதவீதம் என்ற நிபந்தனையே. ஆனால், புதிய திருத்தத்தினால் இந்த எல்லை நீக்கப்படுகிறது. இப்போது தேவையானால் ஒரு கட்சிக்கு 50சதவீதமும், 60சதவீதமும் இல்லாவிட்டால் 100 சதவீதம் கூட இளைய பிரதிநிதிகளுக்குப் பெற்றுக் கொடுக்க முடியும். எனவே அத்தகைய ஒரு விடயத்தை யாராவது கூறுவதானால் அந்த வாதம் பிழையானது. அதேபோல் எப்படித்தான் நல்லது செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு கிராமிய கதை இருக்கின்றது. கித்துல் மரத்துக்கு ஏறின வருக்கும் தனது சுதந்திரத்தை கூற விடயங்கள் உள்ளன என்று.

கேள்வி: விருப்பு வாக்கு முறை, விகிதாசார தேர்தல் முறை என்பவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டமை உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மட்டுமா? இத்திருத்தம் பொதுத் தேர்தலுக்கும் மாகாண சபை தேர்தலுக்கும் செல்லுபடியாகுமா?

பதில்: அரசாங்கம் இதை ஓர் ஆரம்பமாகவே எடுத்துள்ளது. எதிர்காலத்தில் இம்முறையை பொதுத் தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் உட்படுத்த முடியும். இன்று முழுமையாகவே தேர்தல் முறை மாற்றப்பட வேண்டுமென மக்கள் மத்தியில் கருத்து வெளிப்பட்டுள்ளது. அக்கருத்தை அரசாங்கமும் நன்கு உணர்ந்துள்ளது. நான் கூட தனிப்பட்ட வகையில் இத்தேர்தல் முறையில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இருக்கிறேன். இம்முறையில் காணப்படும் பிழைகள் சரிசெய்யப்படும் காலம் கனிகின்றது. இத்தேர்தல் முறையில் யுகத்தின் தேவைக்கேற்பவும் மக்களின் தேவைக்கேற்பவும் மிக விரைவில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: நீங்கள் ஒரு காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய ஐ.தே.க இன்று முகங்கொடுத்துள்ள நிலைமையைப் பற்றி உங்களுக்கு கவலை ஏற்படவில்லையா?

பதில்: ஐ.தே.க பற்றி எனக்கு கவலையில்லை. அக் கட்சியை அழிவுக்குக் கொண்டு சென்ற தலைவர்கள் பற்றியும் அவர்களின் நடத்தை பற்றியும் எமக்கு கவலை தான். நாம் அன்று ஐ.தே.கட்சியைவிட்டு விலகி வந்தது நாட்டுக்காகவும் மக்களுக்காகவுமே. சேவை செய்யும் எதிர்பார்ப்பில் இன்று நாம் மிக சந்தோஷத்துடன் அப்பொறுப்புக்களை செய்து கொண்டு வருகிறோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.