புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

இவ்வார பலன்

கிரகம் நிற்கும் ராசி நிலை


குரு : இடபம் (நட்பு)
கேது : இடபம் (நீசம்)
ராகு : விருச்சிகம் (உச்சம்)
சூரியன் : துலாம் (நீசம்)
சனி : துலாம் (உச்சம்)
புதன் : துலாம் (நட்பு)
சுக்கிரன் : கன்னி (நீசம்)
செவ்வாய் : விருச்சிகம் (ஆட்சி)
சந்திரன் : சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம்
சிங்கம், இடபம்

21.10.2012 முதல் 27.10.2012 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 7ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. கணவன் மனைவி பிணக்குகள், தந்தை மகன் பிணக்குகள் ஏற்படுவதற்கு இடம் உண்டு. திருமண பேச்சுக்கள் இழுபடும். 6ஆம் இடத்தில் உள்ள சுக்கிரன் காரணமாக எடுக்கின்ற காரியங்களும் தடங்கல் ஆகும்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடபராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 6ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் சந்தோஷமான காரியம் நிகழும், 5ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். பெரியவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்ப டும்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுனராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 5ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. பிள்ளைகளால் பலவித யோசனைகள் மனதை கவலையடைய செய்யலாம். குடும்பத்தில் சச்சரசு தோன்றலாம். 4ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக இனசன உறவினர்களின் ஆதரவு கிடைக்கலாம்.


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடகராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 4ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. சொத்துகளாலும் பிரச்சினைகள் ஏற்படலாம். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். வாகனங்களால் செலவு ஏற்படும். 3ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக பிரிந்த நண்பர்கள் ஒன்று சேரலாம். மனதுக்கு ஆறுதலான செய்தி கிடைக்கும்.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 3ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். புதிய சொத்துக்கள் சேரலாம். பல வழிகளாலும் பணம் வந்து சேரும். 2ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக அரச பதவி உயரலாம் அல்லது புதிதாக நியமனம் கிடைக்கலாம். குடும்ப சுகம் மேம்படும்.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 2ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. வைத்திய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்திலும் பிரச்சினைகள் தலைதூக்கும். சமூகத்தில் மதிப்பு குறையலாம். பெண் நண்பர்கள் கைகொடுப்பார்கள். விருந்துக்கு குறைவிருக்காது.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலாராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 1ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. தந்தையாரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். அலைச்சல் அதிகமாக இருக்கும். 12ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக ஆடைகள் ஆபரணங்கள் தொடர்புடைய வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படும்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 12ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. தந்தை வழியால் செலவு ஏற்படும். வெளிநாட்டு பிரயாணம் ஏற்படலாம். பிள்ளைகளால் மனதில் யோசனை ஏற்படும். இரும்புப் பொருட்களால் செலவும் உண்டு. 11ஆம் இடத்து சுக்கிரனால் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சுமுகமாக இருக்கும்.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 11ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தோன்றும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சுமுகமாக இருக்கும். 10ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்களால் மனம் பாதிப்படையலாம்.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 10ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. தொழில் பார்க்கும் இடங்களில் வீணான தகறாறுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை கைவிட்டு விடுங்கள். 9ஆம் இடத்து சுக்கிரனால் பெண் நண்பர்களால் உதவி கிடைக்கலாம்.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்பராசிக்காரர்களுக்கு இந்த வாரம் 9ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. பரீட்சை, வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை காணமுடியாது. எதிரிகளின் கரைச்சல்கள் கூடும். போக்குவரத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். 8ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்கள் கைகொடுப்பார்கள்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீனராசிகாரர்களுக்கு இந்த வாரம் 8ஆம் இடத்தில் சூரியனும் சனியும் துலாராசியில் அமைந்திருப்பது பலவிதத்திலும் நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாது. போக்குவரத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் எதனையும் தொடங்க வேண்டாம். 7ஆம் இடத்து சுக்கிரனால் பெண் நண்பர்களால் பிரச்சினைகள் தலைதூக்கலாம். 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.