புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
மண்டபம் முகாமில் இருட்டறையில் அடைக்கப்பட்ட இலங்கை அகதிகள்

மண்டபம் முகாமில் இருட்டறையில் அடைக்கப்பட்ட இலங்கை அகதிகள்

  • உண்ணாவிரதத்திற்கு முஸ்தீபு;
  • விடுவிக்க அதிகாரிகள் உறுதியளிப்பு

இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் 32 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்ட 65 தமிழர்கள் வியாழக்கிழமை முதல் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.

மூன்று பெண்கள், ஒரு குழந்தை உட்பட சுமார் 65 இலங்கைத் தமிழர்கள் கடந்த மாதம் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகில் அழைத்து செல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். இருப்பினும் இவர்களை முகவர், நாகபட்டினதிற்கு அருகில் நடுக்கடலில் கைவிட்டு சென்றுள்ளனர். நடுக் கடலில் தத்தளித்து

கொண்டிருந்தபோது நாகபட்டினம் மீனவர்களினால் காப்பாற்றப்பட்ட இவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டனர். சிறியதொரு விசாரணையின் பின் இவர்கள் மண்டபம் இடைத்தங்கல் முகாமிற்கு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டனர்.

மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 32 நாட்களாக இருட்டறையில் அடைத்து கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்துவதால் எங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று கோரி சிறப்பு முகாமுக்குள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதனையடுத்து முகாம் தனித்துணை ஆட்சியர் துரை தலைமையில் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இறுதியில் அவர்களது கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக துணை ஆட்சியர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதத்தை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.