புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

ஒபாமாவா? ரொம்னியா?

ஒபாமாவா? ரொம்னியா?

சூடுபிடிக்கும் அமெரிக்கத் தேர்தல் களம்

 

முழு உலகுமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், உலகின் வல்லரசான அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் இன்னமும் இரண்டே வாரங்களில் விடை கிடைத்துவிடும்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஒபாமாவா? ரொம்னியா? ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில், ஏற்படப்போகும் வெளியுறவுக் கொள்கை மாற்றங்களால் எந்தெந்த நாடுகள் எல்லாம் கிடுகிடுங்க வேண்டியிருக்கும் என்ற ரீதியில் எல்லாம் அனேக ஊடகங்கள் அலசி ஆராய்ந்த வண்ணமுள்ளன.

ஐக்கிய அமெரிக்காவின் 57வது ஜனாதிபதியே தேர';ந்தெடுக்கப்படவுள்ளார் கடந்த 2008ல் அன்றைய ஜனாதிபதியாக விருந்த ஜோர்ஜ் புஷ் i' எதிர்த்து நின்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா அமெரிக்க மக்களின் நன்மதிப்பை பெற்று அமோக வெற்றி பெற்றார் என்பதை உலகம் அறிந்ததே. குடியரசிக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ் 'pன்; வெளிநாட்டுக் கொள்கை, ஈராக் நாடின்மீது போர் தொடுத்தமை, இன்னும் பல நடவடிக்கைகள் மக்களை அதிருப்தி அடைய வைத்தன. அவர் தோல்வியை தழுவினார். அதைவிட, ஒபாமாவின் தேர்தல் பிரசார யுக்திகளும், பேச்சுகளும் அமெரிக்க மக்களுக்கு அவர்பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க அரசியல் வரலாற்றி லேயே முதல் தடவையாகஒரு கறுப்பு இனத்தை சேர்ந்த அதுவும் இஸ்லாமிய மத பின்னணியைக் கொண்ட பாரக் உசேன் ஒபாமா வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியாக வந்ததை உலகம் கொண்டாடியது

ஆனால், ஒபாமாவின் ஆட்சிக்காலமும், அவர் அமெரிக்க மக்களுக்கும், நாட்டுக்கும் செய்த சேவைகளும், அவரின் வெளியுறவுக் கொள்கைகளும் அமெரிக்க மக்களை திருப்திப்படுத்தியதா? என்பதே இன்றைய கேள்வியாக இருக்கிறது. அவரை தொடர்ந்து இன்னும் நான்கு வருட ஆட்சியில் அமரவைக்க அவர் ஜனாதிபதியாக இருந்து அமெரிக்க நாட்டுக்கு செய்த பங்களிப்பு கைகூடுமா என்பதை பார்க்கவே உலகம் தயாராகிறது. இப்பொழுது நேரடிதொலைக்காட்சி விவாதங்கள் நடைபெறுகின்றன.

ஒபாமாவை எதிர்த்து நிற்கும் குடியரசிக் கட்சியை சேர்ந்த முன்னாள் மாசாசு+செட் மாநில ஆளுநர் மிட் ரொம்னி மிக செல்வாக்குடையவராக காணப்படுகிறார், என்பதை முதலாவது விவாத மேடையில் காணமுடிந்தது. மொத்தம் நான்கு நேரடி விவாதங்கள் தொலைக்காட்சிஊடாக நடைபெறுவது வழக்கம். மூன்று விவாதங்கள்இதுவரை முடிந்திருக்கின்றன. இன்னும் ஒரு விவாதம் நாளை நடைபெற இருக்கிறது. மிக காரசாரமாக அது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் ஒபாமா சென்றமுறை அதிரடி வெற்றி பெற்றாலும் இம்முறை அவர் பல சவால்களை போட்டியாளர் ரொம்னியிடம் இருந்து எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளைப் பொறுத்துதான் அமெரிக்க அரசியல் நடைபெறுகிறது. அமெரிக்காவின் அரசியல் இ;நத இரண்டினுள்ளும் அடங்கி விடுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்க செனட் சபையின் ஒவ்வோர் உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என இருந்தாலும், மூன்றில் ஒரு பகுதியின ரின் தேர்தல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் மட்டுமே. அமெரிக்கக் கூட்டாட்சியின் மத்திய அமைப்புகளைத் தவிர மாநிலங்கள்தோறும் உள்ள ஆளுநர், மாநிலத்துக்கான செனட் பிரதிநிதி உறுப்பனர்களுக்கும் குறிப்பிட்ட பதவிக் காலத்திற்குப் பிறகு நடைபெறும் தேர்தல்கள், அமெரிக்க ஜனாதிபதி, செனட் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல்களுடன் இணைத்து ஒரே சமயத்தில் நடத்தப்படுகின்றன.

எல்லோருக்கும் சமமான மனித உரிமைகளை உள்ளடக்கியதாக அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் 1788ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் அமெரிக்காவில் குடியேற்றப் பட்டு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த கறுப்பு இனத்தவர்களுக்குக் குடிமக்கள் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 1964 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அமெரிக்கத் தேர்தலில் சில புதுமைகளும், தேர்தல் நுணுக்கங்களும் உள்ளன. ஜனநாயகக் குடியரசு ஆகிய இரு முக்கிய கட்சிகளைத் தவிர, அமெரிக்க மாநிலங்களில் உள்ள விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. அவற்றின் சார்பாக ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பெயர்களும் ஆங்காங்கு தமக்கு ஆதரவான மாநில ங்களில் நடைபெறும் தேர்தல்களில் அதிகாரபு+ர்வமாக வாக்குச் சீட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் 60 சதவிகிதத்திற்குக் குறையாமல் வாக்களிக்க முன்வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளருக்கு நேரடியாக வாக்காளர்கள் வாக்களித்தாலும், கடைசியில் 540 பேரைக் கொண்ட தேர்தல் குழுவினர் தரும் ஆதரவை வைத்துத்தான் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜனாதிபதிக்கான தேர்தல் குழு என்பது அமெரிக்காவில் ஒரு வினோதமான அமைப்பு. மக்கள்தொகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் குழு உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்படுகிறார்கள். இதன்படி கலிபோர்னியா 54, டெக்ஸாஸ் 34, இல்லினோய்ஸ் 32, நியு+யோர்க் 31, புளோரிடா 26 எனத் தொடங்கி அலாஸ்கா, டென்வர் போன்ற சிறிய மாநிலங்களுக்குக் குறைந்தபட்சமாக 3 உறுப்பனர்கள் வழங்கப்படுவர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கலி போர்னியா மாநிலத்தில் விழும் வாக்குகளில் 50.01 சதவிகிதம் கிடைத்த வேட்பாளருக்கு அந்த மாநிலத்திற்கான 54 ஜனாதிபதித் தேர்தல் குழு உறுப்பினர்களும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் முறை இருக்கிறது. இதனால் வாக்களித்தோரின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற அதிபருக்கான வேட்பாளர் தோற்றுவிடும் நிலை ஏற்படலாம்.

2000ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்கா முழுவதிலும் ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5 கோடி 10 லட்சத்துக்கு மேல். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ் பெற்ற மொத்த வாக்குகள் 5 கோடி 5 லட்சத்துக்கும் குறைவானது. இருப்பினும், தேர்தல் குழு கணக்குப்படி புஷ் 271 பேரின் ஆதரவையும், அல்கோர் 266 பேரின் ஆதரவையும் பெற்றதால் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புளோ ரிடா மாநிலத்தில் அல்கோர் பெற்ற வாக்குகள் 29,12,253; புஷ் பெற்ற வாக்குகள் 29,12,790. இதன் விளைவாக, 543 வாக்குகள் அதிகம் பெற்ற புஷ் புளோரிடா மாநிலத்தின் 26 தேர்தல் குழுவினரின் ஒட்டுமொத்தமான எண்ணிக்கையை கூடுதலாகப் பெற்று ஜனாதிபதி; ஆகிவிட்டார். இதைக் கவனிக்கும்பொழுது, அமெரிக்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கு அதிகமான வாக்குளை அல்கோர் பெற்றிருந்தா லும், புளோரிடா மாநிலத்தில் 543 வாக்குகள் குறைந்ததால், அவருக்கு ஜனாதிபதிப் பதவி கிடைக்கவில்லை.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட வினோதமான அதிபர் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து பலராலும் கூறப்பட்டு வருகிறது. இஸ்ரேல் விரும்பும் ஒருவரே அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்ததை அமெரிக்காவின் கடந்த 50 வருட கால வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவில் 5 மில்லியன் ய+தர்கள் வாழ்கின்றனர். பரக் ஒபாமாவுக்கான ஆதரவு ய+தர்களிடையே சரிந்து வரும் நிலையில் அதனைக் கைப்பற்றும் முயற்சியில் ரொம்னி ஈடுபட்டு வருகின்றார். இதேவேளை, யு+த தேவாலயங்களுக்குச் சென்று ய+தர்களின் மத வழிபாடுகளில் ஒபாமா பகிரங்கமாக ஈடுபட்டு வருவதும் ஊடகங்களின் பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் குதித்துள்ள இரு பிரதான வேட்பாளர்களும் தீவிர இறை பக்தி கொண்டவர்கள் போன்று தம்மைக் காட்டிக் கொள்ளத் துவங்கியுள்ளனர்.

அண்மையில் அnரிக்கப் பள்ளிக் கூடமொன்றுக்குச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி', சீனாவைப் போல தமது பொருளாதாரமும் ஆக வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

ஊடகங்கள் கூறுவதைப் போல அமெரிக்கத் தேர்தலோ அல்லது, அதன் மூலம் தெரிவாகும் தலைவர்களோ அதன் வெளிநாட்டுக் கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. என்பது 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தல் எமக்குக் கற்றுத் தந்த பாடம்.'மாற்றத்தில் நாம் நம்பிக்கை வைக்கிறோம்' என்ற கோ'த்தோடு 2008 தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றார்.

ஆனால் அவரது மாற்றங்கள் என்வென்பதை இக்குறுகிய காலத்தில் அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, முழு உலகுமே விளங்கிக் கொண்டு விட்டது. கடன் சுமை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் கீழ்நிலைக்கு தள்ளிவிட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இருந்த கடன் சுமையை விட இப்போது கடன் சுமை அதிகரித்துவிட்டது.

அமெரிக்க வரலாற்றில் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தவர்களால் உருவான கடன் சுமைகளில் இதுதான் பெரிய தொகை. மேலும், 2 கோடி அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். கடந்த 42 மாதங்களில் வேலை வாய்ப்பின்மை 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ரொம்னியா? ஓபாமாவா என்பதை மக்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்மானிப்பார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அமெரிக்கா இப்போது எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.