புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

சமுத்திர ஆய்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளவென தயாரிக்கப்பட்ட “சமுத்ரிகா” கப்பல் அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் செலுத்தி ஆரம்பித்துவைக்கப்பட்டது. அந் நிகழ்வில் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுவதைக் காணலாம். அமைச்சர்கள் சி.பி. ரத்நாயக்க, பிரியங்க ஜயரத்ன, மஹிந்த அமரவீரமற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
(படம் சுதத் சில்வா)


புனித ஹஜ்ஜுப் பெருநாள் 27ம் திகத

புனித ஹஜ் ஜுப் பெருநாளை சனிக்கிழமை (27) கொண்டாட அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர் பான கூட்டம் கடந்த செவ் வாய்க்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
.

விவரம் »

சரஸ்வதி பூஜை இன்று ஆரம்பம்

நவராத்திரியின் ஆறாம் நாளாகிய இன்று ஞாயிறு (21) சரஸ்வதி பூஜை ஆரம்பமாகிறது. இல்லங்களிலும், பாடசாலைகளிலும் விசேடமாக கல்விக் கதிபதியாம் சரஸ் வதிதேவிக்கு பூஜை வழிபாடு நடைபெறு கிறது. கடந்த 16ம் திகதி ஆரம்பமான கணிப்பின்படியான மாற்றத்தினால் இம்முறை எட்டுத் தினங்களாக அனுஷ்டிக்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று தினங்கள் லக்ஷ்மிக்கும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்குமாக ஒன்பது இரவுகள் பகிரப்பட்டுள்ளன. 
இதற்கமைய ஒன்பதாம் நாளாகிய 24ம் திகதி புதன் கிழமை விஜய தசமியன்று வாழைவெட்டு

விவரம் »

15 இலட்சம் குடும்பங்கள்: 27,000 அதிகாரிகளின் எதிர்காலம்

திவிநெகும : வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் விளையாட வேண்டாம்

நியாயமான விமர்சனங்களை முன்வையுங்கள் - பசில் வேண்டுகோள்

திவிநெகும வாழ்வெழுச்சி திணைக்கள சட்டமூலம் நாட்டில் 15 இலட்சம் குடும்பங்களினதும், 27,000 அரச அதிகாரிகளினதும் எதிர்காலம் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே இச்சட்டமூலம் தொடர்பாக தன்னிச்சையாக விமர்சனங்களை மேற்கொள்பவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..

விவரம் »

தோட்டத்தை நம்பி வாழும் மக்களின் எதிர்காலத்திற்கு

வாழ்க்கைச் சுமைக்கேற்ப தொழிலாளருக்கு சம்பளம்!

முதலாளிமார் சம்மேளனத்தை நெருக்க தொழிற்சங்கங்கள் முடிவு்

மலையகப் பெருந்தோட்டத் துறையையே நம்பி தொழில் செய்துகொண்டிருக்கும் மக்களின் எதிர்கால பொருளாதார வளத்தைக் கருத்திற்கொண்டே முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தை அமையுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

விவரம் »

அரசியல் கட்சிகளில் உயர் பதவி வகிப்பவர்கள் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளாக தெரிவாவதை தடுக்க பிரேரணை

இருபதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் உயர் பதவிகளில் அரசியல் கட்சிகளில் மேல்மட்ட பதவி வகிப்பவர்கள் போட்டியிடுவதை தடுக்குமாறு கோரி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 20க்கும் அதிகமான உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

விவரம் »

பிரபாவின தூரநோக்கு மனோவிடம் இல்லை;
தமிழ்தேசியம் பேசி காலத்தை வீணடிக்காது மக்களின் தேவையறிந்து செயற்படுங்கள்

காங்கிரஸ் செயலாளர் சுரேஸ் கங்காதரன் சாட்டை

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததன் மூலமாக பெறப்பட்டிருக்கும் எமது சமூகத்திற்கான நன்மைகளை கொழும்பு மாவட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் வெறுமனே வெளியிலிருந்து கூக்குரல் எழுப்புபவர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் . . . . . .

விவரம் »

 

மகாத்மா காந்திஜியின் 143வது நினைவுதின சொற்பொழிவு நிப்பன் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியும் செளமிய இளைஞர் நிதியமும் ஏற்பாடு செய்த நிகழ்வில் காந்திஜியின் உருவப்படத்திற்கு இந்திய உயர்ஸ் தானிகராலய அதிகாரி ஸ்ரீடினேஸ் உடேனிஜா மலர்மாலை அணி விக்கின்றார். தேசபந்து அ. முத்தப்பன் செட்டியார், பேராசிரியர் சோ. சந்திரசேகரன், புரவலர் ஹாசிம் உமர் ஆகியோரும் காணப்ப டுகின்றனர். (படம் ஏ.எஸ்.எம். இர்ஷாத்.)

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.