புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
திறனாய்வுக் கலையில்

திறனாய்வுக் கலையில்

வளர்ச்சிப் போக்கு

கலைகளுக்குரிய கோட்பாட்டு அடிப்படைகளைத் தேடுதல் திறனாய்வின் அடிப்படையான வினைப்பாடாகின்றது. பின்வரும் அறிதலைப்புகளில் திறனாய்வாளர் தமது குவிப்பை மேற்கொள்கின்றனர்.
 

* கலை இலக்கியங்களின் இயலர்பு

* கலை இலக்கியப் படைப்பின் உருவாக்கல் முறைமை

* ஆக்குனரின் வகிபாகம்

* நூலியத்தைப் பகுப்பாய்வு செய்தலும் பொருள் கோடலும்

* அழகியல் மற்றும் சமூகக் கண்ணோட்டங்களில் மதிப்பீடு செய்தல்

தொன்மையான கிரேக்கக் கல்வி மரபில் வரன் முறையான திறனாய்வு கால்கோள் கொண்டுவிட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. பிளேட்டோ கவிதையை “ஐயப்பாட்டுடன்” நோக்கினார். அது உலகைப் போலி வடிவாகச் சித்திரிக்கின்றதென்றும், நிஜஉலகைத் திரிபுபடுத்தி அரசுக்குரிய கடமைகளைச் செய்யவிடாது மனித மனங்களை மாசுபடுத்தி விடுகின்றதென்றும் குறிப்பிட்டார். பிளேட்டோ குறிப்பிட்ட போலி வடிவப் பதிலீடு (யிசீitation) என்ற கருத்தை ஒரு வகையில் மறுத்துரைத்த அரிஸ்டோட்டில் அந்த எண்ணக்கருவை நேரியல்புகளுடன் நோக்கினார். கிறிஸ்துவுக்கு முற்பட்ட ஐந்த நூற்றாண்டுக் காலத்தைக் கிரேக்கத் துன்பியல் நாடகங்களை அடியொற்றி அரிஸ்ரோட்டில் தமது திறனாய்வுக் கருத்துக்களை முன்மொழிந்தார். கலைகளால் உள்ளம் ஊறுபடுத்தப்படுத்தல் இல்லை என்றும் அது உள்ளத்தைப் புடமிடப்பட்டுச் சீர்மியத் தெளிவை ஏற்படுத்தி விடுகின்றதென்றும் விளக்கினார். அதனை விளக்குவதற்கு அவர் “கதாசிஸ்” (விathrsis) என்ற எண்ணக்கருவைப் பயன்படுத்தினார்.

கிரேக்கத்தின் செவ்வியற் சிந்தனைகளைத் தொடர்ந்து திறனாய்வுக்கலை என்பது கவிதைகளை அடியொற்றியே வளரலாயிற்று. அச்சுப்பொறி கண்டறியப்படுவதற்கு முற்பட்ட வரன்முறையான இலக்கியப் படைப்புகள் செய்யுள் வழியாகவும் கவிதை வழியாகவுமே முன்னெடுக்கப்பட்டு வந்தன. மனித நினைவுகளின் பதிவுகளை உள்ளடக்கிய கவிதைகளிலே சுவைகாணும் செயற்பாடுகள் திறனாய்வாளர்களிடமிருந்து மேலோங்கியிருந்தன. மொழியின் கலை வடிவப்பாங்கின் வற்புறுத்தலோடு திறனாய்வை முன்னெடுத்தல் குவின்டிலியன் மற்றும் லோங்கினஸ் போன்றோரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. கவிதைக்கலை வளர்ச்சி மற்றும் பேச்சுக்கலை வளர்ச்சி முதலியவற்றுடன் தொடர்புடைய சொல்லாடற்கலை (ஞிhலீtoriணீ) வளர்ந்ததுடன் அதனை அடியொற்றிய மதிப்பீடுகளும், மேற்கொள்ளப்படலாயின. மனங்கவரச் செய்தல், மனக்குவிப்பை ஏற்படுத்துதல், தருக்க வலியாக நிரூபணமாக்குதல் முதலியவற்றில் மொழியின் பயன்பாடு சொல்லாடற் கலையில் வலியுறுத்தப்பட்டது.

ஐரோப்பாவிலே தோற்றம் பெற்ற மறுமலர்ச்சிச் சிந்தனைகள் திறனாய்வு தொடர்பாக முன்னர் மொழியப்பட்ட செவ்வியற் சிந்தனைகளுக்கு மீள்வடிவம் கொடுக்கும் ‘நவசெவ்வியல்’ திறனாய்வு முறைமையை முன்னெடுத்தன.

இங்கிலாந்து, பிரான்சு, ஜேர்மனி, இத்தாலி முதலிய நாடுகளிலே தோற்றம் பெற்ற புதிய இலக்கியங்களுக்குப் பொருந்தக் கூடிய வகையிலே அரிஸ்ரோட்டில், ஹொரேஸ் மற்றும் தொன்மையான ஆய்வாளர்களின் கோட்பாடுகளை மீள்வடிவமைத்து நவசெவ்வியல் (னிலீoணீlassiணீisசீ) அல்லது புதிய செந்நெறிவாதம் உருவாக்கம் பெற்றது. மொழியும் வடிவமும், வகையியலும், எழுநடையும் என்ற துறைகள் கூடிய கவனக்குவிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளின் ஐரோப்பிய இலக்கிய அணுகுமுறைகளில் செவ்வியல் சிவப்பார்த்த நெறியாக முன்னெடுக்கப்பட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டில் செவ்வியல் திறனாய்வு மரபுக்கு எதிரான தகர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. செவ்வியலில் வலியுறுத்தப்பட்ட செம்மை, சமச்சீர்மை, சமநிலை, சமநிலை உறுபாவனை (கிalanணீலீனீ யிசீitation) முதலியவற்றைக் காட்டிலும் கற்பனை வலுவின் முக்கியத்துவத்தை ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த லீசிங் என்பார் வலியுறுத்தலானார். கற்பனை மேலோங்கல், உறுபற்று (ஷிலீntiசீலீnt) தனிமனித மேலோங்கற் பளிச்சீடுகள் முதலியவற்றை அடியொற்றி ‘உளக்கவர்ச்சியியல்’ (ஞிoசீantiணீisசீ) வளர்ச்சி பெறலாயிற்று.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.