புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
கீரிமலைக் கடற்கரை ஒரு மனோரம்மியமான இடம்

கீரிமலைக் கடற்கரை ஒரு
மனோரம்மியமான இடம்

பச்சைப் பசேலென்ற மரங்களும் செழிப் பாக வளர்ந்த புற்தரையும் வெள்ளை நிற அலைகளும் நாம் செல்லும் பயணத் தில் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக எனக்குத் தெரிவதெல்லாம் தூசியினால் வரண்டு போன இலைகுலைகளுக்கிடையில் ஓரளவு பச்சை நிறத்தில் மின்னிக் கொண்டிருக்கும் பலவிதமான சிறிய மரங்களின் வரிசையாகும். ஒரே நேருக்கு படர்ந்திருக்கும் பனந் தோப்புக ளைத் தவிர வேறெந்த விதமான உயர்ந்த மரங்களும் காணப்படாத ஒரு பிரதேசத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இக்கிராம வாசிகள் கடி எறும்புகளைப் போல சுறுசுறுப்பான ஒரு கூட்டமென்பதை நாம் உணர்ந்து கொண்டோம். தமது ஆடுகளின் கூட்டத்தை மேய்த்துக் கொண்டு பாதையின் குறுக்கே பாய்ந்து செல்லும் ஒருவர் புன் சிரிப்போடு எம்மைப் பார்த்தார். இன்னோர் இடத்தில் தமது பயிர்நிலங்களில் உடலை வருத்தி வியர்வை சிந்தி வேலை செய்யும் விவசாயிகள் கூட்டம் ஒன்று இருந்தது. இந்த செயற்றிறன் மிக்க பூமியில் அவர்கள் போராடு வது தமது வாழ்க்கையை வெற்றி கொள்வதற்குத் தானே என்று நான் நினைக்கிறேன்.

ஒரே வகையான சைக்கிள்களில் இங்குள்ள பெண்கள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் அரசின் அல்லது தனியார் காரியாலயமொன்றில் வேலை செய்யும் பெண்களாக இருக்கலாம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து செல்லும் (ஆண்கள் பாவிக்கும் ஒரு வகை சைக்கிள்) ஒரு சைக்கிளில் பெண் பின்னால் உட்கார்ந்திருப் பது இரு கால்களையும் ஒரு பக்கத்தில் போட்டு அல்ல. அவள் எப்போதும் உட்காருவது ஆணுக்குப் பின்னால் பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய இட மிருக்கும் ஒரு சைக்கிளில் நாம் உட்கார்ந்து செல்லும் முறையிலேயே தான் உட்காந்திருப்பாள். எனக்கு அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் அதிகாரி நிஸ்ஸங்க ஐயாவின் ஞாப கம் வந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீங்களும் பெருமளவு காணக்கூடிய தாக இருக்கும் இக்காட்சி பற்றி நான் அவரிடம் கேட்டேன். ஏன்? இந்தப் பெண்கள் இரு கால்களை யும் ஒரு பக்கத்துக்கு வைத்து பயணம் செய்வதில்லை என்று கேட்டேன்.

அது அவர்களின் கலாசாரம், குலத்தின் பழக்கவழக்கம், மானிட செயற்பாடுகள் நடைபெற்ற காலத்திலும் இவர்களைப் பாதுகாப் பான இடங்களுக்குக் கொண்டு சென்ற போதும் சிலருக்கிடையே இத்தகைய பழக்கவழக்கங்கள் கடுமையாகச் செல்வாக்குச் செலுத்திற்று. இவர் கள் உடல் தெரியக்கூடிய வகையில் உடை அணிந்ததை நீங்கள் கண்டீர்களா? அதுவும் அவர்களது கலாசாரம் தான்.

ஆனால் நீங்கள் அவ்வாறு கூறினாலும் யாழ்ப்பாண குடாநாட்டில் சில பிரதேசங்களில் மட்டுமல்ல சில சமயம் தீவுகளுக்கிடையேயும் சிறுவர் துஷ்பிர யோகம் காணப் படுகின்றது. எனினும் இந்த மக்கள் கீரிமலை யில் குளிக்கும் அந்த அபூர்வ தடாகத்திற்கரு கில் நாம் சிறிது நேரம் தங்கினோம். கடலுக்கருகாமை யில் இருந்தாலும் கீரிமலை குளத் தில் தண்ணீரில் உப்பு ருசி இருக்கவில்லை. அது ஒருவித களிம்பு ருசியைக் கொண்ட நன்னீரின் ருசிக்கு கிட்டிய ஒரு ருசியாகும். பெரும் கூட்டமாக வரும் மக்கள் இங்கு தண்ணீரில் மூழ்கிக் குளிக்கின்ற னர். ஆடிப்பாடி மகிழ்கின்றனர். நாம் அங்கு சென்ற போது கூட பெரும் கூட்டத்தினர் குளித்துக் கொண்டிருந்தனர்.

இந்த கீரிமலை குளத்தில் குளித்து சுத்தமடை யும் போது தமக்கு மருத்துவ குணாதிசயத்துடன் கூடிய ஒரு சுகம் கிடைப்பதாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

சிவன் கடவுள் பார்வதியோடு இவ்விடத்துக்கு வந்து இருக்கிறார். அது மிகப் பழங்காலத்தில், அங்கு பார்வதி தண்ணீர் தாகத்தால் வாடும் போது இப்பகுதியில் தண்ணீர் கிடைப்பதில்லை என்பதால் சிவன் கடவுள் இந்த அபூர்வ தடாகத்தை தோற்றுவித்தார். அவள் தனக்குப் போதுமானளவு தண்ணீரைக் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டாள். அதிலிருந்து இந்தத் தடாகம் இருக்கின்றது. அதனால் தான் இதில் மருத்துவ குணம் இருக்கின்றது. கீரிமலை தடாகத்தின் பக்கம் வரும் மக்களுக்கு குளிர் பானங்கள், நிலக்கடலை என்பவற்றை விற்கும் சிங்களம் நன்றாகப் பேசக்கூடிய வியாபாரி ஒருவர் தான் எனக்கு இவ்வாறு கூறினார். அத்தகைய தமிழ் பழங்குடிக் கதைகள் பெருமளவு இந்தக் குடாநாட்டில் பரவி இருக்கின்றது. மற்றொருவர் இந்நிகழ்வை இன்னுமொரு வகையில் கூறுகிறார். பழங்குடிக் கதைகள் அப்படித்தான். ஒன்றுக் கொன்று வேறுபட்டவை.

எமக்கென்றால் கீரிமலை தடாகம் இயற்கையன்னையின் மற்றுமொரு அபூர்வ படைப்பாகவே தெரிகின்றது. சூரியன் வானத்தில் எரிந்து கொண்டு இருக்கின்றது. இப்போது பகல் நேரம் நெருங்கி விட்டதென்பதை சூரியன் எமக்கு உணர்த்துகின்றது. வட்டுக் கோட்டை- பொன்னாலைக்குக் குறுக்கே வரும் பாதையில் காணப்படும் தமிழ் கடையொன்றில் நாம் பகல் உணவை உண்டோம்.

நாம் இப்போது போக வேண்டியது நாகதீப விகாரையின் அதிபதி தெமைலகஸ்வெவ அரியகித்தி பிக்கு வழிகாட்டிய புண்ணிய பூமிக்காகும். கடலானது தொடர்ச்சியாக இருளாக இருப்பதால் பாலைத்தீவு, எழுவைத் தீவுக்குச் செல்லும் பயணம் இன்னும் தாமதமாயிற்று.

ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூராம் ஆண்டுகளில் எல்.டீ.டீ.ஈ. இயக்கத்தின் அதிகார கோட்டையாக இருந்த அகிலா என்ற புலித் தலைவியின் இராசதானியான சம்பிலித்துறை எமது அடுத்த இலக்காகும். அது நீலநிற கடலால் சூழப்பட்ட அபூர்வ ஒரு பகுதியாகும். அது அப்பெயரால் அழைக்கப்பட்டாலும் பழங்காலத்தில் அது எமது தம்பகோளப் பட்டினமாகும்.

தம்பகோளப் பட்டினமென்பது ஜம்பு கோலப்பட்டன என்ற இடமாகும். விஜயபாகு என்ற அரசனின் காலத்தில் இந்நாட்டில் காணப்பட்ட பழைய ஒரு துறைமுகமாக ஆரம்ப நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பது இந்த இடத்தையேயாகும். தேவநம்பிய திஸ்ஸ அரசனின் ஆட்சிக்காலத்தில் தம்பதிவ விற்கும் இலங்கைக்குமிடையில் பெரும்பாலான நட்புறவுகளுக்கு இங்கிருந்த துறைமுகம் பாவிக்கப் பட்டிருப்பதாக வரலாற்று ஆதாரங்கள் எமக்குக் கிடைத்துள்ளன. சிங்கள மகாவம்சத்தின் படி மகா அரிட்ட இளவரசன் தேவநம்பியதிஸ்ஸ அரசனிடமிருந்தும் மஹிந்த தேரரிடமிருந்தும் பட்டோலையை எடுத்துக் கொண்டு தம்பகோல பட்டினத்தில் கப்பலேறி இந்தியாவின் குலுஹுல் என்று அழைக்கப்பட்ட இடத்துக்குச் சென்றது இந்த துறைமுகத்திலிருந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரம்மியமான இடத்தின் அழகை இரசித்துக் கொண்டே நாம் விகாரையை தரிசித்தோம். இலங்கை கடற்படையினரால் மிகவும் சிறந்த முறை யில் பராமரித்துக் கொண்டு செல்லும் இப்புண்ணிய பூமி உண்மையில் மிகவும் இனிமையானது. நான் அந்த நீல நிற கடற்கரையின் நீரலைகளுக்கிடையே எட்டிப் பார்த்தேன்.

அன்று தர்மாஷோக பேரரசன் சாசனத்துக்குப் பூஜை செய்த அந்த மகள் சங்கமித்தை இன்று அநுராதபுரத் தில் காணப்படும் மகா போதி கிளையை தங்க தட்டில் வைத்து இங்கு கொண்டு வரும் காட்சி எனக்கு தெரிகின்றது. பேரரசன் தேவநம்பியதிஸ்ஸ அந்த தங்கத் தட்டிலிருந்த மகா போதிக் கிளையை ஏற்றுக் கொள்ள முன் ஒரு முறை கழுத்து வரை கடலில் முழ்கி முழு மனதோடு ஏற்றுக் கொண்டார். அந்தக் காட்சிகள் ஒரு நிமிடத்துக்கு என் கண் முன்னே வந்து பின்னர் மறைந்து போயிற்று.

நாம் இப்போது வந்திருப்பது ஸ்ரீ மகா போதிக் கிளையை எடுத்துக் கொண்டு சங்கமித்தை வந்த புண்ணிய பூமிக்குத் தானே என்று நினைக்கிறேன். ஆனால் அந்தப் புண்ணிய பூமி சில காலத்துக்கு முன் புலிகளின் ஒரு தரிப் பிடமாகும். அன்று எமது கடற்படையி னர் காங்கேசந்துறை யிலிருந்து காரைநகர் தீவுக்கு பயணம் செய்தது கடல் மார்க்கமாகவாகும். அந்தளவுக்கு அகிலா வின் அதிகாரம் பிரபல்யமடைந் திருந்தது.

அதனால் சரியான முறையில் மரங்கள் கூட இல்லாதிருந்த இப்புண்ணிய பூமியை மரங்களி னால் நிறைத்து மனதை ஈர்க்கக் கூடிய ஒரு இடமாக மாற்றியதையிட்டு கடற்படையினருக்கு எமது நன்றி உரித்தாக வேண்டும். மானிட செயற்பாடுகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் அகிலாவும் அவளது படையினருக்குமிடையே நடைபெற்ற பெரும் போராட்டத்தின் பின் இப்பிரதேசத்தை பாதுகாத்துக் கொண்ட போது எமது பெளத்த உரிமைகளில் இங்கு வழிபாட்டுக்குரிய இடமொன்றை அமைக்க அரசு முயற்சியெடுத்தது. பிரபாகரனின் மரணத்தின் பின்பு 2009 ஜுன் 05ம் திகதி ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையாரின் தலைமையில் இங்கு கந்தாகார விகாரை தொடக்கி வைக்கப்பட்டது.

அழகான தம்பகோசிப் பட்டினம் நெடுங்கால மாக நாம் இழந்திருந்த பெளத்த உரிமைகளைக் கொண்ட ஒரு இடமாகும். இதற்கு கொஞ்சம் அப்பால் மிக நெடுங்காலமாக காணப்படும் சிவன் கோயிலொன்றும் இருக்கின்றது. இங்கு வாழும் தமிழ் மக்கள் இந்த சிவன் கோயிலுக் குப் போலவே தம்பகோளப்பட்டினத்துக்கும் வந்து வணங்குகிறார்கள். இது எந்தளவுக்கு சமாதானமான ஒரு மத சூழலைக் கொண்ட சமூக சகவாழ்வு என நான் நினைக்கிறேன்.

நாகதீப விகாரையும் நாகபூரண அம்மன் கோயிலுக்குமிடையே தொடர்பு இருப்பது போல இந்த சிவன் கோயிலின் பூசாரிக்கும் இந்த மத வழிபாட்டிடத்துக்குமிடையே மத ரீதியான ஒரு சகவாழ் வுத் தன்மை ஏற்பட்டிருப் பது சந்தோஷப்படக் கூடிய ஒரு விடயமாகும்.

அன்று நாட்டை ஒரு கொடிக்குக் கீழ் கொண்டு வந்த அரசன் (கி.பி. 161) துட்டகைமுனு ஏற்படுத்தியது சாசனமாகும். சிதுல்பவ்வ ஆகாஷ தூபிக்கு செங்கற்களை இழுத்து அமிழ்த்திய அந்த சாமனேர் இறக்கும் தருவாயில் அதற்கு முன் விகாரமகாதேவி அவருக்கு பல நகைச்சுவைகளை சொல்லி இந்நாட்டை ஆக்கிரமிப்பளார்களிடமிருந்த பெளத்த சாசனத்தை பாதுகாக்க தனது வயிற்றில் பிறக்கும் படிக்கு அழைப்பு விடுத்தாள். துட்டகைமுனு நல்லவராக இந்த சாசன புத்திரராகப் பிறந்தார். தம்பகோல பட்டினமும் பிக்குணிகளின் சாதசனத்தைப் போல பெளத்தர்களின் உயர்வான மகா போதியை இந்நாட்டுக்குக் கொண்டு வந்த துறைமுகமாகும். அந்த பெளத்த உரிமையை பாதுகாக்க மானிட செயற்பாட்டின் போது இப்புனித பூமியின் புனிதசக்தியும் ஒரு காரணமாக இருந்ததில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் அன்று பலம்மிக்க அகிலா என்ற பெண் புலித் தலைவியின் இந்த அதிகாரப் பிரதேசம் இன்று எமது பெளத்தர்களுக்கு வணங்க சந்தர்ப்பம் எவ்வாறு கிடைக்கும்?

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.