புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

இலங்கையில் வனவளப் பாதுகாப்பிற்காக

இலங்கையில் வனவளப் பாதுகாப்பிற்காக

Ford 10,000 டொலர் நன்கொடை

இலங்கையில் தான் முன்னெடுக்கும் சூழல் பாதுகாப்பு மற்றும் நன்கொடைத் திட்டத்தில் வெற்றி பெற்ற திட்டத்தை ஃபோர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி நக்கிள்ஸ் மலைத் தொடர் வனப் பாதுகாப்புத் திட்டத்தின் தீ தடுப்புத் திட்டமானது. (The Fire Prevention in Knuckles Forest Reserve) Ford Motor Company  வழங்கும் 10,000 டொலர் நன்கொடைத் திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

ஃபோர்ட் மோட்டார் கம்பனி நடத்தும் சூழல் நன்கொடைத் திட்டம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் வருடந்தோறும் இடம்பெறும் நிகழ்வாக மாறியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் வெற்றி பெறும் செயற்திட்டங்கள் ஊடாகப் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு நிதியுதவிகளை வழங்கி வந்துள்ளது.

“இந்த நிகழ்ச்சித் திட்டமானது ஃபோர்ட் நிறுவனம் சுற்றாடல் பாதுகாப்பிற்காகவும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பல முன்னெடுப்புக்களில் ஒன்று” என ஃபோர்ட் ஏற்றுமதி மற்றும் வளர்ச்சி நடவடிககைகள் பிரிவின் பிராந்திய முகாமையாளர் டேவிட் வெஸ்டர்மன் தெரிவித்தார். “சூழல் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அது பற்றிய அறிவூட்டும் செயற்திட்டங்கள் எமது வணிக முயற்சிகளின் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றது’ என இவர் மேலும் கூறினார்.

அரசு மற்றும் தனியார் துறை உள்ளிட்ட பல தரப்பினரின் ஆதரவைப் பெற்ற இத்திட்டம் சுற்றாடல் பாதுகாப்பை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. நடுவர் குழு எந்த வகையிலும் ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்துடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டவர்கள் அல்ல.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.