புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

ஸினி தீர்மானத்தை தகர்த்தெறிய அதிரடி நடவடிக்கை;

ஆதரவைத் தேடுவதில் அதிகாரிகள் தீவிரம்!

மேலும் பல நாடுகள் ஒத்துழைப்பு வழங்க முடிவு

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவு பெற்றுத்தரும் நடவடிக்கை மேலும் வலுப்பெறும். ஜெனீவா மாநாட்டில் இடம்பெறும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தகர்த்தெறிந்து அதற்கு ஆதரவு பெற்றுத் தரும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படுவதற்கு இலங்கைப் பிரதிநிதிகள் குழு திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிலைமை இல்லையென ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் கூறி இருந்தார். இந்த வகையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கவும் இலங்கைக்கு ஆதரவு பெற்றுத்தரவும் பல நாடுகள் முன்வந்துள்ளன.

விவரம் »

நேற்று முளைத்த அரசியல் கத்துக்குட்டிகள் திடீரென பெருந்தலைவராக கடும் முயற்சி !

வன்னி மக்களுக்கு தமது உண்மையான தலைமை யாரென்பது தெரியும்

ஆசிரிய தொழிலை பார்க்க வேண்டியவர் அரசியல் என்ற போர்வையில் சுயலாப தேடல் என்கிறார் TULF தலைவர் சங்கரி ஐயா

கிளிநொச்சி மாவட்டத்தில் அரசியல் என்ற போர்வையில் பணிபுரிந்து வருபவர்கள் வெறும் அரசியல் கத்துக்குட்டிகளேயென்றும் மக்கள் பணியை விட தங்கள் சுய இலாபத்திற்காகவே அவர்கள் பாடுபடுவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

விவரம் »

மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை பல்கலைக்கழக மகளிர் சங்கம் நேற்று நாரஹென்பிட்டியில் ஏற்பாடு செய்திருந்த “விஸ்டம் ஒப் வுமன்” (பெண்ணின் ஞானம்) சஞ்சிகை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கையின் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ சஞ்சிகையின் பிரதியை கேர்னல் கலாநிதி உதுல கிருஷ்ணவிடம் கையளிப்பதைப் படத்தில் காணலாம். சங்கத்தின் தலைவி கலாநிதி நிர்மலின் அருகில் நிற்பதையும் காணலாம். (படம்: விபுல அமரசிங்க)
 

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி; அகாஷிக்கு நாமல் எடுத்துரைப்பு

டோக்கியோ மாநாட்டில் இரு தரப்பு பேச்சு

பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான நாமல் ராஜபக்ஷ, டோக்கியோவில் இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதியான யசூஷி அகாஷியுடன் இரு நாட்டு உறவுகள் தொடர்பாக விசேட பேச்சு நடத்தினார்.

விவரம் »

யுத்தகாலத்தில் மக்களுக்கு உதவிய ஆண்டகை;

மன்னார் ஆயரை விமர்சிக்க JHU க்கு அருகதை இல்லை!

வினோ, செல்வம் கடும் கண்டனம்

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய தெரிவித் திருக்கும் கருத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

விவரம் »

இறுதி யுத்த காலத்தில் மக்களை அநாதரவாக கைவிட்டு ஓடிய சீமான்கள் ;

தமிழர்களின் உரிமை பேசும் புளித்துப்போன தலைமையை வெறுக்கும் வன்னி மக்கள் !

தள்ளாதவயதில் அரசியல் இருப்பிற்காக அலைகிறார் சங்கரி

என்னைக் கத்துக்குட்டி என்று கூற ஐயாவால் எப்படி முடிகிறது என்கிறார் SLFP கிளிநொச்சி அமைப்பாளர் கீதாஞ்சலி

வன்னித் தமிழினம் இன்னமும் புளித்துப் போன பழம் அரசியல் தலைமைகளின் பின்னால் செல்லத் தயாராக இல்லையென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மீள்குடியேற்ற

விவரம் »

LLRC ஐ அமுல்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்துவது தமிழருக்கு ஆறுதல்!

ஆக்கபூர்வ விடயத்திற்கு ஒத்துழைப்பாராம் மனோ

அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டதே தவிர, இலங்கை அரச தலைவர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

விவரம் »

இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை;

நாட்டைக் காப்பாற்ற சகல முஸ்லிம்களும் ஒத்துழைப்பு

சபையில் அஸ்வர் ணி.ஜி பாராட்டு

வெளிநாட்டு சதிகாரர்களுடைய சதித்திட்டத் திலிருந்து எமது நாட்டை காப்பாற்றுவதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கை காலத்தைப் பொறுத்து மிக்க முக்கியத்துவம் பெறுகின்றது என அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. பாராளுமன்றத்தில் கூறினார்.

விவரம் »

அவசர தேவைக்கு வேண்டுகோள் விடுப்பு;

யாழ். வைத்தியசாலைக்கு தமது இரத்தத்தை வழங்கிய படையினர்!

அவசர இரத்த தேவை நிமித்தம், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோள்களுக் கிணங்க, யாழ். பாதுகாப்புப் படையினர் இரத்ததான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள இரத் தத்தின் தேவை போதாமையின் காரணமாக பல நோயாளிகள் காத்துக் கொண்டிருந்த வேளையில், ஆரியாலையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் 512ஆவது படைப் பிரிவின் 23ஆவது கஜபா படைப் பிரிவினரால் இவ் இரத்ததானம் வழங்கப் பட்டுள்ளது. இதைத்

விவரம் »

 

Advertisements______________________

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.