புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
‘ஏனிந்த கொலை வெறி கொலை வெறிங்கோ?’

‘ஏனிந்த கொலை வெறி கொலை வெறிங்கோ?’

இப்போதெல்லாம் இளையோரையும் வயது வந்தவர்களையும் ‘கொலை வெறி கொலை வெறி’ பாடல் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. மொழி புரியாவிட்டாலும் கூட இந்த வார்த்தைகளை முணு முணுக்கிறார்கள். இலங்கையில் தமிழ் புரியாத; தெரியாதவர்கள் எல்லாம் ‘கொலவரி.. கொலவரி’ என்கிறார்கள். பெரும் பாலானோருக்கு இது ‘கொலை வெறி’ என்பது தெரியாது என்பது பரிதாபம் தான்.

தமிழ் சினிமா வளர்ச்சிபெற்றுவந்த காலத்தில் எப்படி, ‘என்னடி ராக்கம்மாவும், காதலிக்க நேரமில்லையும் சிங்கள மக்கள் மத்தியில் அபிமானம் பெற்றனவோ அதேபோன்றதொரு நிலையை தனுஷின் ‘கொலை வெறி கொலை வெறி’ டி ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை.

அண்மையில் ஒரு நண்பர் கூறுகிறார். ‘எனக்கு கொலை வெறி என்பது தெரியாது நான் ‘கொலவரி என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அர்த்தம் புரிந்திருந்தால்...” என்று இழுக்கிறார். இசைக்கு மொழி கிடையாது என்பதற்கு இவர் ஓர் உதாரணம் தானோ! இன்னும் இந்தப் பாடலைப் பிற மொழிகளில் இயற்றியும் பாடியிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானவர்கள் இணையத்தின் ஊடாகக் கேட்டுவருகிறார்கள். இந்தப் பாடலின் மெட்டில் வெவ்வேறுவிதமான கற்பனைகளிலும் பாடல்கள் உருவாகியிருக்கின்றன.

இவற்றுள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கே. ஸ்ராலின் என்ற இளைஞர் பாடி வெளியிட்ட பாடல் தமிழர்கள் மத்தியில் பெரும் பிரபல்யத்தைப் பெற்றிருக்கிறது. அதாவது தமிழ் மொழியை ஏனடா இப்படி கொலை செய்கிaர்கள்? என்பது தமிழ் உணர்வாளர்களின் கருத்து, தனுஷ் தமிழ் மொழியைக் கொலை செய்து தனக்குப் பிரபலம் தேடியிருக்கிறார் என்கிறார்கள் அவர்கள். ஆயிரக் கணக்கான பாடல்களையோ, கவிதைகளையோ இவற்றினாலும் மக்களின் மனதை வெல்லக் கூடிய ஒரு படைப்புதான் நிலைத்து நின்றுவிடுகிறது. கானா உலக நாதனுக்கு “வாளைமீன்” தேடித்தந்ததை விட தனுஷிற்கும் கொலை வெறி. இதில் கவலை என்னவென்றால் அவர் தமிழை இப்படி கொலை செய்து சிதைத்துவிட்டாரே என்ற ஆதங்கம் மேலோங்கியிருப்பதுதான். அதுதான் ஸ்ராலின் எழுதிய ‘என் தமிழ் மொழி மீதுனக் கேனிந்த கொலை வெறிடா’ பாடல் இலகுவில் மக்களைச் சென்றடைந்திருக்கிறது.

ஆனால் தனுஷ் பாடிய கொலை வெறிப் பாடல், தமிழ் மக்களால் இன்னமும் நன்கு புரிந்துகொள்ளப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேநேரத்தில் தமிழ் மொழி அல் லாத திராவிடர்களும் எதிர்ப்பினை வெளிக்காட்டியிருக்கிறார் கள். அண்மையில் மலையாளத் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியொன்றில் நடுவராக பிரபல பின்னனி பாடகர் பி. ஜெயச்சந்திரன் கலந்துகொண்டார். அப்போது ஓர் இசைக் குழுவினர் ‘கொலை வெறி’ எனப் பாடத்தொடங்குகிறார்கள். உடனே ஜெயச்சந்திரன் கொதித்தெழுகிறார். ‘என்ன கொலைவெறி! என்ன பாடுற... இது சரிப்பட்டு வராது... நான் போறன்’ என்று நேரலை நிகழ்ச்சியிலிருந்து எழும்புகிறார் பின்னர் தயாரிப்பாளர்கள் அவரைச் சமரசப்படுத்தி அமரச்செய்கிறார்கள்!

எது எவ்வாறிருந்தாலும், தனுஷ் பாடல் தமிழரை அன்றி ஆங்கிலத்தையே கொலை செய்கிறது; கொச்சைப்படுத்துகிறது! என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா? அதாவது, ஆங்கிலம் தெரியாத ஒரு கிராமத்து இளைஞன் ஆங்கிலத்தில் பாட ஆசைப்படுகிறான். அதன் பிரதிபலிப்புதான் ‘வை திஸ் கொலைவெறி... அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் இளைஞர் பாடுகிறார். ‘வைற்று ஸ்கின்னு கேளு... கேளு... கேளு ஹாட்டு பிளக்கு’ என்பதன் மூலம் அவர் எந்தளவுக்கு ஆங்கிலம் புரியாமல் தடுமாறுகிறார். என்பதை எடுத்துக்காட்டு கிறது பாடல், என்கிறார் ஓர் அன்பர். இன்றைய தமிழக கிராமத்து இளைஞர்களின் நிலையை பாடல் எடுத்தியம்புகிறது என்கிறார் அவர். நீங்களும் ஆற அமர சிந்தித்துப் பாருங்களேன்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.