புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

இவ்வார பலன்

11.03.2012 முதல் 17.03.2012 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேடராசிக்காரர்களே 12ல் உங்கள் ராசிக்கு சூரியன் சஞ்சாரம் செய்வதால் இடமாற்றத்துக்கு வாய்ப்புண்டு. எதிர்பாராத செலவு ஏற்படலாம். தந்தையின் உடல் நலம் பாதிப்படையலாம். ஜென்மத்தில் உள்ள குரு அலைச்சலைத் தரும் குடும்ப ஸ்தானத்தில் உள்ள கேது வீண் குழப்பங்களை ஏற்படுத்தலாம். 7ம் இடத்து சனியினால் திருமணம் தடங்கலாகலாம். மேலும் 8ம் இடத்தில் உள்ள ராகு வைத்திய செலவுக்கு உள்ளாகலாம். 11ம் இடத்து புதனினால் மனதுக்கு ஆறுதலான மங்களகரமான செய்தி கிடைக்கும்.
 


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடபராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 11ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் சொத்துக்களால் லாபம் ஏற்படும். உடல் நலம் மேம்படும். தொழில்துறைகளால் லாபம் ஏற்படும். அரச உத்தியோகம் கிடைக்கலாம். 12ம் இடத்தில் உள்ள குரு சுபகாரியங்களுக்கு செலவுகளை ஏற்படுத்தலாம். ஜென்ம கேது காரணமாக ஒரு வித சோம்பல் தன்மை நிலவும் 6ம் இடத்து சனியினால் தேவைக்கு பணம் வந்து சேரும். மேலும் 7ம் இடத்தில் உள்ள ராகு திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத் தலாம். 10ம் இடத்து புதனினால் பெண்வழி ஆறுதலைத் தரும்.
 


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்ப+சம் 1,2,3ம் பாதம்

மிதுனராசிக்காரர்களே 10ல் உங்கள் ராசிக்கு சூரியன் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியளிக்கும் 11ம் இடத்தில் உள்ள குரு வேண்டியளவு பணம் வந்து சேரும், புதிய சொத்துக்களும் சேரும். 12 கேது காரணமாக பெருமளவு செலவும் ஏற்படலாம். 5ம் இடத்து சனியினால் பிள்ளைகளால் யோசனைகளைத் தரும். மேலும் 6ம் இடத்தில் உள்ள ராகு வழக்குகளில் பரீட்சைகளில் வெற்றியைத் தரும். 9ம் இடத்து புதனினால் வைத்திய செலவுக்கு வழிவகுக்கும்.
 


கடகம்


புனர்ப+சம் 4ம் பாதம், ப+சம், ஆயிலியம்

கடகராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9இல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பயணங்களின் போது மிகவும் கவனமாக அவ தானமாக நடந்து கொள்ளுங்கள். 10ம் இடத்தில் உள்ள குரு காரணமாக பதவி மாறுவதற்கு இடம் உண்டு. 11 கேது காரண மாக தேவைக்கு பணம் வந்து சேரும் 4ம் இடத்து சனியினால் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். மேலும் 5ம் இடத்தில் உள்ள ராகு பிள்ளை களால் மனதில் யோசனைகள் தோன்றும். 8ம் இடத்து புதனினால் குடும் பத்தில் மகிழ்ச்சி நிலவும் வெற்றியான செய்தி வந்து சேரும்.
 


சிங்கம்

மகம், ப+ரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் அரச வழி உத்தியோகத்தர்கள் எல்லா விதத்திலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். 9ம் இடத்தில் உள்ள குரு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 10 கேது காரண மாக உடல் நலத்தை ஓரளவு பாதிக்கும். 3ம் இடத்து சனியினால் வேண்டிய பொருளையும் பொன்னையும் தரும். மேலும் 4ம் இடத் தில் உள்ள ராகு பங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் 7ம் இடத்து புதனினால் மனதில் ஒரு வீத சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
 


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னிராசிக்காரர்களே 7இல் உங்கள் ராசிக்கு சூரியன் சஞ்சாரம் செய்வதால் திருமணத்தில் குழப்பம் ஏற்படலாம் உடல் நலம் பாதிப்படைலாம். 8ம் இடத்தில் உள்ள குரு காரணமாக பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் 9இல் கேது காரணமாக பெருமளவு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். 2ம் இடத்து சனியினால் குடும்பத்திலும் சச்சரவுகள் தோன்றும். மேலும் 3ம் இடத்தில் உள்ள ராகு, ஓரளவு உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வழிவகைகள் பிறக்கும். 6ம் இடத்து புதனினால் சில தடைகள் உங்களை விட்டு நீங்கும்.
 


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலாராசிக்காரர்களே 6ல் உங்கள் ராசிக்கு சூரியன் சஞ்சாரம் செய்வதால் புதிய சொத்துக்கள் சேரலாம். பண லாபம் ஏற்படும். எதிரிகளின் தொந்தரவு குறையும். உடல் நலம் மேம்படும். 7ம் இடத்தில் உள்ள குரு காரணமாக திருமணம் கைகூடி வரும். 8இல் கேது காரணமாக ஒரு வித, சோம்பல தன்மை உடலில் இருக்கும். ஜென்மசனியினால் அலைச்சல் மிகுதியாக இருக்கும். மேலும் 2ம் இடத்தில் உள்ள ராகு காரணமாக வீண் வார்த்தைகளால் சச்சரவு தோன்றும். 5ம் இடத்த புதனினால் குடும்பத்தில் சஞ்சலம் தோன்றும்.
 


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிராசிக்காரர்களே 5ல் உங்கள் ராசிக்கு சூரியன் சஞ்சாரம் செய்தால் எதிரிகளின் தொந்தரவு கூடும். உடலில் சோம்பல் தன்மை இருக்கும். 6ம் இடத்தில் உள்ள குரு காரணமாக உடல் நலமும் பாதிப்படையலாம். 7ம் கேது காரணமாக திருமண பேச்சுக்கள் குழம்பலாம். மேலும் 12ம் இடத்தில் சனிகாரணமாக பல வீத கவலைகள் இருக்கும். ஜென்ம ராகுகளினால் வீண் அலைச்சல் இருக்கும். 4ம் இடத்து புதனினால் குடும்பத்தால் மன நிம்மதி இருக்கும்.
 


தனுசு

மூலம், ப+ராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுராசிக்காரர்களே 4ல் உங்கள் ராசிக்கு சூரியன் சஞ்சாரம் செய்வதால் பெண்களால் கரைச்சல் தோன்றும். 5ம் இடத்தில் உள்ள குரு காரணமாக குழந்தைப் பாக்கியம் ஏற்படும். போதியளவு பணவரவு உண்டு. 6ம் திகதி கேது காரணமாக பொன் பொருள் சேரலாம். மேலும் 11ம் இடத்தில் சனிகாரணமாக பண அதிர்ஷ்டத்தைத் தரலாம். 12ம் இடத்து ராகுவினால் தூர தேசத்து பயணத்தை ஏற்படுத்தலாம். 3ம் இடத்து புதனினால் அரச உத்தியோகத்தர்கள் முன்னெரிச்சரிகையுடன் நடந்து கொள்ளவும்.
 


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகரராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 3இல் சூரியன் சஞ்சா ரம் செய்வதால் புதிய பதவிகள் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். போதியளவு பணவரவு உண்டு. எதிரிகள் பணிந்து விடுவர். உடல் ஆரோக்கியம் மேம்படும். 4ம் இடத் தில் உள்ள குரு காரணமாக திடீர் யோகத்தைத் தரலாம். 5ம் கேது காரணமாக பிள்ளைகள் பற்றிய யோசனை மனதில் இருக் கும். மேலும் 10ம் இடத்தில் சனிகாரணமாக வீண் பெயரைக் கேட்க வைக்கலாம். 11ம் இடத்து ராகுவினால் பெண்வழி சுகத்தை ஏற்படுத்தலாம். 2ம் இடத்து புதனினால் கோபத்தை ஏற்படுத்தலாம்.
 


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், ப+ரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்பராசிக்காரர்களே 2ல் உங்கள் ராசிக்கு சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையில்லாத அலைச்சல்களை ஏற்படுத்தலாம். பெருமளவு பணவிரயத்தையும் தரலாம். 3ம் இடத்தில் உள்ள குரு காரணமாக உங்கள் பதவிகளை மாற்றலாம். 4ம் இடத்தில் கேது காரணமாக உடல் நலத்தை பாதிக்கலாம். தேவையில் லாத அறிமுகம் ஏற்படலாம். உடல் நலமும் பாதிப்படையலாம். மேலும் 9ம் இடத்தில் சனிகாரணமாக எதிரிகளினாலே கரைச்சல் இருக்கும். 10ம் இடத்து ராகுவினால் உங்கள் பெயர் பாதிக்கலாம். ஜென்மத்தில் புதன் உறவினர்களிடையே கலகத்தையே ஏற்படுத்தலாம்.
 


மீனம்

ப+ரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீனராசிக்காரர்களே ஜென்மத்துக்கு சூரியன் சஞ்சாரம் செய் வதால் தேவையில்லாத அலைச்சல்களை ஏற்படுத்தலாம். சமூகத் தில் மதிப்பு குறையும் 2ம் இடத்தில் உள்ள குரு காரணமாகப் பெருமளவு பணத்தைத் தரலாம். எதிரிகளின் தொந்தரவும் குறையலாம். 3ம் கேது காரணமாக திடீர் அதிர்ஷ்டத்துக்கு இடம் உண்டு. மேலும் 8ம் இடத்தில் சனிக்காரணமாக மனதில் ஒருவித சஞ்சலம் இருக்கும். 9ம் இடத்து ராகுவினால் எதிர்பார்க்கும் முடிவுகள் நன்றாக அமையாது. 12ம் இடத்து புதனினால் உடல் நலம் பாதிப்படையலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.