புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
ஏடாகூடமான கேள்விகள்

ஏடாகூடமான கேள்விகள்

ஏடாகூடம் : மொழி

 

பதில் தருவது: எழுத்தாளர்
தம்பிஐயா தேவதாஸ்

கேள்வி: ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நீங்கள் படித்த போது யாருக்காவது 'சைட்' அடித்த அனுபவம் உண்டா?

பதில்: இல்லை; ஏனெனில் அங்கு என்னை விட மூத்த பெண்களே என்னுடன் படித்தனர்.

(ஓ... அப்போ உங்களுக்கு இளமை

ஊஞ்சளாடுவது போல...)

கேள்வி: நீங்கள் சினிமா பார்த்திருப் பீர்கள். நாடகம் பார்த்திருப்பீர்கள். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரே வரியில் சொல்லுங்கள் பார்ப்போம்.

பதில்: மனிதனை மனிதனாக காட்டும். மற்றது பெரிதாகக்காட்டும்.

(நாடகம் நடக்கும்; சினிமா ஓடும்!)

கேள்வி: ஆரம்பத்தில் மூச்சுவாங்கும் போது மனிதன் இருக்கும் இடம் எது? மூச்சு நின்ற பிறகு இருக்கும் இடம் எது?

பதில்: மேலே; கீழே

(ஆசிரியருக்கும் அடிசறுக்கும் போல்...)

கேள்வி: நீங்கள் வகுப்பில் ஆசிரியராக இருக்கும் போது உங்களுக்கு கோபம் வந்தால் மாணவிகளுக்கு பேன் பார்த்து விடுவீர்களாமே! உண்மையா?

பதில்: பக்கத்திலேயே போகமுடியாது. பின்பு எப்படிப் பேன் பார்ப்பது?

(பாவம் சேர்... நீங்கள் இவ்வளவு

வெகுளியாக இருந்தீங்களோ...!)

கேள்வி: கலாநிதிகளுக்கும் கலாநதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: படித்தவர்கள் கலாநிதிகள் படிக்காதவை கலாநதிகள்.

(இதைப்படித்து விட்டு கலாநிதிகள் எல்லாம் உங்களோடு சண்டைக்கு வரப்போகிறார்கள்)

கேள்வி: ஐயா வாத்தியாரே உங்களுக்கு ஏன் இதுவரை 'கலாபூஷணம்' பட்டம் கிடைக்கவில்லை?

பதில்: இன்னும் வயது வரவில்லை போலும்.

(ஆசை, தோசை, அப்பளம்)

கேள்வி: விஸ்கியை விட உங்களுக்கு பிராந்திதான் அதிகமாகப் பிடிக்குமாமே! காரணம் அதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்கள்தான் என்று உங்கள் நெருங்கிய நண்பர் சொல்லுகிறாரே. உண்மையா?

பதில்: நண்பருக்கு விருப்பமானதாக இருக்கலாம்.

(இருக்கும், இருக்கும். நீங்கள்தான்

உத்தமபுத்திராகிற்றே!)

கேள்வி: போதை தலைக்கேறி பாதை மாறி கீதை உபதேசம் கேட்ட அனுபவம் உண்டா?

பதில்: கீதை உபதேசம் கேட்பதுண்டு. ஆனால் போதை தலைக்கேறியதில்லை.

(தலைக்கு வந்தது தலைப்பாயோடு

போய்விட்டது போலும்)

கேள்வி: தமிழ் நாட்டில் உள்ள ஒரு அரசியல் தலைவரின் பெயரில் உள்ள கடைசி இரண்டு எழுத்துக்களை திருப்பி வாசித்தால் மங்களகரமான ஒரு பொருளின் பெயர்வரும். மங்களகரமான பொருளை தனது பெயருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் அந்த அரசியல் தலைவர் யார்?

பதில்: ஜெயலலிதா

(பதில்தேடி முடியைப் பிய்த்துக் கொண்டதாகத் தகவல்...)

கேள்வி: நீங்கள் தம்பிக்கு தாஸனா? 'ஐயா'வுக்கு தாஸனா?

பதில்: தம்பிக்கு யார்தான் தாசன் இல்லை.
(ம்... இருக்கட்டும்... இருக்கட்டும்...)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.