புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

அரசியல்வாதிகளின் பெயரால்

அரசியல்வாதிகளின் பெயரால்

ஆதரவாளர்கள் திருகுதாளம்

அரசியலில் குதித்து தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அம்மக்க ளின் பிரதிநிதிகளாகத் தெரிவாவோர் தமது கடமைகளை சேவையாகச் செய்ய வேண்டும் என்பதுவே பொதுவான நடைமுறை. ஆனால் இந்த நடைமுறையை எத்தனை பேர் தாம் அரசியல்வாதிகளாகியதும் மறந்து விடுகிறார்கள் என்பது அவர்களுக்கு வாக்களித்து விட்டு ஏமாறும் மக்களுக்கே நன்கு தெரியும். இந்த விடயத்தில் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் குற்றம் சாட்டிவிட முடியாது. தொகுதிக்கு ஒருவர், இருவர் எனும் அடிப்படையில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இவ்வாறு தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு ஏமாற்றும் அரசியல் வாதிகளுடன் இன்று அவர்களது ஆதரவாளர்ளும் இணைந்து மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப் பதாகவும், உள்ளூரில் நல்ல தொழில்வாய்ப்பை அல்லது வங்கிகளில் வேலை பெற்றுத் தருவதாகவும் கூறி இளைஞர், யுவதிகளிடம் பணத்தினை வசூல் செய்து ஏமாற்றி வரு கின்றனர்.

இந்த விடயம் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு தெரியுமோ அல்லது தெரி யாதோ என்பது தெரியாத விடயமாகவே உள்ளது. இவ்வாறு பணத்தைப் பெற்றுக் கொண்டு தொழில் பெற்றுக்கொடுப்பது என்பது குற்றமாகும். இருந்தாலும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் இவர்கள் தொழில் பெற்றுக்கொடுத்தால் அல்லது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தால் பரவாயில்லை. அவ்வாறு செய்வதில்லை. பணத்தைப் பெற்ற பின் னர் அவர்களைப் பின்னால் அலையவிட்டு இறுதியில் ஏமாற்றியே வருகின்றனர். ஆயி ரத்தில் இருவர் ஒருவாறு அதிர்ஷ்டத்தில் நன்மையடைந்து விடுவர்.

அண்மையில் கூட கனடா அனுப்புவதாகக் கூறி அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திப் பலரிடம் குறிப்பாக இளைஞர், யுவதி களிடம் பெருந்தொகைப் பணத்தை ஒருவர் சூறையாடியுள்ளார். இப்போது அவரைப் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களுக்கோ இதுவரை எந்தவிதமான மீள்கொடுப்பனவும் கிடைக்கவில்லை.

இவ்வாறு ஓரிரு சம்பவங்களே வெளியுலகிற்கு கசிகிறது. ஏனைய பல வெளியே வராது இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இன்று வடக்கு, கிழக்கில் இளைஞர், யுவதி களுக்குப் பல தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல கைமாற ப்படும் தொகையை வைத்தே அதனடிப்பையில் முன்னுரிமையளிக்கப்பட்டு வழங்கப் படுகிறது என்பது பலருக்கும் தனிப்பட்ட முறையில் தெரியும். ஆனால் வெளியே எவரும் கூறுவதில்லை. இவற்றில் பல, அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சிகளின் அங்கத் தவர்கள் எனப் பலதரப்பட்டவர்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் செயல்களால் நேர் மையாள அரசியல்வாதிகளின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு வருகிறது. அண் மையில் நெடுந்தீவில் பன்னிரெண்டு வயதே நிரம்பிய பருவமடையாத பாடசாலைச் சிறுமியை பாதகன் ஒருவன் வல்லுறவுக்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்துள் ளான். இதற்கு அப்பகுதி மக்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபரை ஊர்மக்கள் இணைந்து பிடித்து சிறிது நையப்புடைத்துவிட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நபரைப் பிடிக்காது விட்டிருந்தால் அப்பழி தீவகத்திலுள்ள பாதுகாப்புப் படையினர் மீது அல்லது ஜனநாயக ரீதியில் அரசியல் நடத்திவரும் ஈ. பி. டி. பி. கட்சியினர் மீதே விழுந்திருக்கும். இவ்வாறு பிடிபட்ட நபர் முன்னரும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பது இப்போது விசாரணைகளிலி ருந்து தெரியவந்துள்ளது. இவர் தனது குற்றச்செயல்களுக்கு தன்னை ஒரு கட்சியின் உறுப்பினர் எனக் காட்டமுற்பட்டுள்ளார்.

இவ்வாறு கட்சிகளதும், அரசியல்வாதிகளினதும் பெயர்களைப் பயன்படுத்தி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு வழங் கக் கூடாது. நெடுந்தீவில் குறிப்பிட்ட ஈனச் செயலுடன் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்யப் பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்ட ஈ. பி டி. பி. கட்சியின் உறுப்பினர் களைப் பாராட்ட வேண்டும்.

தீவுப் பகுதி மக்களுடன் நெருக்கமாகப் பழகி வருவதுடன். யுத்த காலம் முதல் இன் றுவரை அம்மக்களுக்குத் தேவையான உதவிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ. பி. டி. பி. கட்சியினரே செய்து வருகின்றனர். தேர்தல் காலத்தில் மட்டும் அம்மக்களின் வாக்குகளை அபகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு சென்று வருவது வழமையான விடயம்.

இவ்வாறு மக்கள் சேவை செய்துவரும் அரசியல்வாதிகளினதும், கட்சிகளினதும் பெயர்களைப் பாவித்துத் தமது காரியங்களை நிறைவேற்ற மக்களை ஏமாற்றிவரும் நபர்களை முதலில் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். வடக் கில் குடாநாட்டுக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள பிரதி பொலிஸ் மா அதிபரிடமும் அமைச்சர் டக்ளஸ் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் போன்று இவ்வாறு ஒவ்வொரு அரசியல்வாதிகளும், கட்சித் தலைவர்களும் நடந்துகொண்டால் இவர்களது பெயர்களைப் பாவித்து திருகுதாளங் கள் செய்வோரின் கொட்டம் அடியோடு அடக்கப்பட்டுவிடும்.

[email protected]

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.