புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது 2010

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது 2010

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழியல் வித்தகர் பட்டமும் தமிழியல் விருதும் பொற்கிழியும் வழங்கிக் கெளரவித்து வருகின்றது. இவ்வாண்டும் ஜம்பசி மாதத்தில் இவ் விருதுகளை வழங்குவதற்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் செயல்வடிவம் கொண்டுள்ளது.

உயர் தமிழியல் விருது

இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ. கே. பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கிக் கெளரவிக்கும்.

தமிழியல் விருதும் தமிழியல் வித்தகர் பட்டமும்

தமிழிலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மூத்த படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் 5 பேருக்கு தமிழியல் வித்தகர் பட்டத்துடன் தலா ரூபா 15,000 பொற்கிழியும் வவுனியூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா, கமலநாயகி தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.

சிறந்த நூல்களுக்கான தமிழியல் விருது

2009 ஆண்டில் வெளிவந்த சிறந்த 13 நூல்களுக்கு தலா ரூபா 10,000 பெற்கிழியுடன்,

சுவாமி விபுலானந்த அடிகள் தமிழியல் விருது

புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை தமிழியல் விருது

புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் தமிழியல் விருது

கல்விமான் க. முத்துலிங்கம் தமிழியல் விருது

புரவலர் நZம் ஹாஜியார் தமிழியல் விருது

சிவநெறிப் புரவலர் சீ. ஏ. இராமஸ்வாமி தமிழியல் விருது

நாவலாசிரியை பவள சுந்தரம்மா தமிழியல் விருது

கலைஞர் ஊ. கே. கணபதிப்பிள்ளை தமிழியல் விருது

பம்பைமடு நாகலிங்கம் தமிழியல் விருது

வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது

வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருது

செந்தமிழ்ச்செல்வர் சு. ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருது

கலாநிதி சந்திரமோகன் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.

குறுந்திரைப்படத்திற்கான தமிழியல் விருது

2009 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 3 குறுந்திரைப்படங்களுக்கு தலா ரூபா 10,000 பொற்கிழியுடன் டாக்டர் பூபாலரட்ணம் தமிழியல் விருது

கவிஞர் கல்லாறன் தமிழியல் விருது

துறையூர் வே. நாகேந்திரன் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.

சிறப்புத் தமிழியல் விருது

மிகச் சிறந்த வெளியீட்டகம்/ பதிப்பகம், நூல்வடிவமைப்பு/ அட்டை வடிவமைப்புக்கு தலா ரூபா 5,000 பொற்கிழியுடன்

புரவலர் ந. ஜெகதீசன் தமிழியல் விருது

புரவலர் எஸ். சோலைமலைத்தேவர் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.

ஓவியருக்கான தமிழியல் விருது

மிகச் சிறந்த ஓவியர் ஒருவருக்குத் தலா ருபா 5,000 பொற்கிழியுடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருது வழங்கிக் கெளவிக்கும்.

அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு தமிழியல் விருதுக்கான நூல்களையும் குறுந் திரைப்படங்களையும் தேர்வு செய்ய படைப்பாளிகளிடமிருந்து நூல்களையும் இறுவட்டுக்களையும் எதிர்பார்கிறது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற இலங்கையைத் தாயகமாகக் கொண்ட படைப்பாளிகள் 2009 ஆம் ஆண்டு தை 1ஆம் திகதி முதல் மார்கழி 31ஆம் திகதி வரை வெளிவந்த நூல்களையும் குறுந்திரைப்பட இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.

நாவல் சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், விடலை இலக்கியம் நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இன மத நல்லுறவு இலக்கியம், தொழில்நுட்பம் எனப் பல்துறை சார்ந்த நூல்களையும், 30 நிமிடங்களுக்கு உட்பட்ட பல்துறை சார்ந்த குறுந்திரைப்பட இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.

தேர்வுக்காக வந்து சேரும் நூல்களில் இருந்து 2009 இல் வெளிவந்த சிறந்த 13 நூல்களும், இறுவட்டுகளில் இருந்து 3 சிறந்த குறுந் திரைப்படங்களும் நீதியானதும் சுதந்திரமானதுமான துறைசார் நடுவர் குழுவினால் தமிழியல் விருது 2010க்காக தேர்வு செய்யப்படும்.

தேர்வுக்காக பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் உள்ளடங்கலாக சுயமாகத் தயாரிக்கப்பட்ட விபரப் பட்டியலுடன் நூலாயின் 4 பிரதிகளும் இறுவட்டாயின் 2 பிரதிகளும் 10-8-2010க்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரு படைப்பாளி எத்தனை வகையான படைப்புகளையும் அனுப்பி வைக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி

ஓ. கே. குணநாதன்,

மேலாளர்,

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்,

இல. 54 கதிர்காமர் வீதி, அமிர்தகழி,

மட்டக்களப்பு இலங்கை.

தொலைபேசி இலக்கம்: 0776041503

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.