புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

இளம் சாதனையாளர்களுக்கான விருதுகள் 2010

இளம் சாதனையாளர்களுக்கான விருதுகள் 2010

HSBC யும் ஜூனியர் சேம்பர் இன்டர் நஷனல் ஸ்ரீலங்காவும் (JCI Sri Lanka)  இணைந்து இலங்கையின் தலைசிறந்த 10 இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங் கும் நிகழ்ச்சியை (TOYP) 2010 ஒக்டோபர் மாதத்தில் நடத்தவிருக்கின்றன. 2005ஆம் ஆண்டிலிருந்து இத் திட்டத்துடன் தொடர் பினைக் கொண்டுள்ள HSBC அன்று முதல்  TOYP நிகழ்விற்குப் பிரதான அனுசர ணையை வழங்கி வருகின்றது.

ஆறாவது வருடமாக 2010இல் இடம்பெறவிருக்கும் இந்த நிகழ்வில், தனிப்பட்ட முறையில் அல்லது தொழில்சார்ந்த துறைகளில் அதிசிறந்த சாத னைகளைப் புரிந்த 10 இளைஞர்கள் பாராட் டிக் கெளரவிக்கப்பட இருக்கிறார்கள். ஹிலிவீஜி விருதினைப் பெறுபவர்களுக்கு இளம் செயற் படு பிரஜைகளின் உலகளாவிய அமைப்பி னூடாக சர்வதேச நன்மதிப்பும் கிடைக்கும்.

HSBC யின் இலங்கை மற்றும் மாலைதீவு பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் நிக்கொலாவ் இத்திட்டத்திற்கான பங்களிப்புப் பற்றிக் கருத்து வெளியிடுகையில் :

பல்வேறு முயற்சிகளில் முன்னேற்றத்தை அடைந்த இளைஞர்களைக் கெளரவிப்பதற் காக நடத்தப்படும் இந்த மதிப்பார்ந்த நிகழ்ச் சியில் ஆறாவது வருடமாகப் பங்குகொள்வது குறித்து சிஷிகிவி மகிழ்ச்சியடைகிறது. நாட்டி லுள்ள ஏனைய இளைஞர்களும் எதிர்காலத் திற்கான தமது கனவுகள் மற்றும் இலட்சியங்களை அடைவதற்கு ஊக்கமும் உற்சாகமும் பெற இந்த நிகழ்ச்சி ஒரு முன்மாதிரியாக அமையுமென்பது எமது நம்பிக்கையாகும்’ என்று கூறினார்.

வேலைத் திட்டம் 1980ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிலிருந்து, இலங் கையில் இளைஞர்களின் திறமைகளையும் சாதனைகளையும் இனங்கண்டு பாராட்டுவதில் JCI Sri Lankaசந்தேகத்திற்கிடமின்றி முன்னணி வகித்து வருகிறது.

விருதுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் தமக்குரிய பிரவேசக் கூப்பன்களை ஜுலை மாத நடுப்பகுதியிலிருந்து பிரசுரமாகும் தமிழ், சிங்கள, ஆங்கில தினசரி மற்றும் வார இறுதிப் பத்திரிகைகளில் இருந்து பெற முடி யும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வேலைத் திட்டத் தலைவர்/  TOYP 2010 செயலகம், மே/பா. டிஜிட்டல் பேஸ் பிறைவேட் லிமிட் டெட், 185/1, தர்மபால மாவத்தை, கொழும்பு 7 என்ற  TOYP 2010 ஒகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன் கிடைக்கத்தக்கதாக அனுப்பப்பட வேண்டும்.

 TOYP 2010விருதுக்கான விண்ணப்பப் வடிவத்தை  www.jcisl.org  என்ற இணையத் தளத்திலும் பெற முடியும்.

TOYP விருதுக்கான தேர்வு நடைமுறை மிகவும் கடினமானது. சமர்ப்பிக்கப்படும் விண் ணப்பங்கள் யாவும், விசேடமாக நியமிக்கப் பட்ட கண்காணிப்பாளர்கள் முன்னிலையில், தேர்ச்சிபெற்ற நடுவர்கள் குழுவினால் பரி சீலனை செய்யப்படும். ஜேசீஸ் சாசனத்தின் கோட்பாடுகளுக்கு அமைவான முறையிலும் மற்றையோருக்கு ஊக்கத்தைத் தூண்டக்கூடிய விதத்திலும் புரியப்பட்ட விசேட சாதனை களின் அடிப்படையிலேயே விருதுக்குரிய வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.