புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

படப்பிடிப்பில் திரி'h மாயம்

படப்பிடிப்பில் திரி'h மாயம்

கமல்ஹாசன், மாதவன், த்ரிஷா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. கே. எஸ். ரவிகுமார் டைரக்ட் செய்கிறார். படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2 வாரமாக நடந்து வருகிறது. தற்போது இத்தாலியில் படப்பிடிப்பு நடக்கிறது. கமல்ஹாசன், த்ரீஷா, மாதவன் நடிக்கும் காட்சிகள் அங்குள்ள பிரமாண்ட கப்பலில் படமாகி வருகிற. படப்பிடிப்பின் போது த்ரிஷா மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு கப்பல் பாதுகாவலர்கள் த்ரிஷாவை பத்திரமாக மீட்டனர்.

கப்பல் மொத்தம் 18 அடுக்குகள் கொண்டது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எலிவேட்டர், லிப்ட் வசதிகள் உள்ளன. நடுக்கடலில் கப்பல் செல்லும் போது காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கப்பலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படக்குழுவினரிடம் வரைபடம் (மேப்) தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் கமல், த்ரிஷா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு, பின்னர் லொகேஷன் மாற்றப்பட்டது. படக் குழுவினர் இடம்மாறினார்.

த்ரிஷாவுடன் அவரது அம்மா உமாவும் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார். இருவரும் படக் குழுவினரைப் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலில் திடீரென்று த்ரிஷாவை தவறவிட்ட அவரது அம்மா சுற்றும் முற்றும் தேடினார். த்ரிஷா வழிதவறி வேறுபக்கம் சென்றுவிட்டது.

 தெரியவந்தது. பட குழுவினருக்கும் பாதுகாவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து அடுக்குகளுக்கும் ஆட்கள் அனுப்பப்பட்டனர். இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகே த்ரிஷாவை கண்டுபிடிக்க முடிந்தது. ஏதோ ஒரு இடத்தில் ஷாப்பிங்கில் த்ரிஷா மூழ்கியது தெரிந்தது. அதன்பிறகே படக் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இத்தாலியிலிருந்து நேற்று சென்னை திரும்பிய த்ரிஷாவின் அம்மா இந்த தகவலை நமது நிருபரிடம் தெரிவித்தார்.

டைட்டானிக் படத்தில் வருவது போல பிரமாண்ட கப்பலில் மன்மதன் அம்பு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சாதாரண பயணிகளும் உண்டு. கோடீஸ்வர பயணிகளும் இருக்கின்றார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போல் 5 ஓட்டல்கள் இதில் உள்ளன. ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டும். கூட்டத்தில் த்ரிஷாவும் நானும் பிரிந்து சென்றுவிட்டோம். செல்போன் கூட வேலை செய்யவில்லை. மகள் மாயமானதில் கொஞ்சம் பயந்து விட்டேன். படக் குழுவினரும் பாதுகாவர்களும் நீண்ட சேரம் தேடி த்ரிஷாவை அழைத்து வந்தனர். அதன் பிறகுதான் நிம்மதி அடைந்தேன். இது போல 2 முறை நடந்துவிட்டது. அதன்பிறகு எங்கு சென்றாலும் படக்குழுவினருடனே சென்றோம். இன்னும் ஒரு மாதம் அங்கு ஷ¥ட்டிங் நடக்கிறது என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.