புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

.

அரசியலமைப்புத் திருத்தமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்

அரசியலமைப்புத் திருத்தமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்

அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்வது தொடர்பான முய ற்சி முன்னேற்றம் காண்கின்றது. பிரதான எதிர்க்கட்சிக் கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை யில் பல விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகத் தெரி கின்றது. அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் மக்கள் விடுதலை முன்ன ணியையும் அழைக்கப் போவதாகவும் அரச தரப்புக் கூறுகின் றது. எல்லாக் கட்சிகளினதும் பங்களிப்புடன் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என் பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை எவ் வாறு இருக்கும் என்பது தமிழ் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பது இயல்பானதே. கூட்டமைப்பின் அணுகுமுறை ஆக்க பூர்வமானதாக அமைவது தான் தமிழ் மக்களுக்கு நன்மை பய ப்பதாக இருக்கும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்தனவும் முற்போக்கானவையுமான சக லவற்றையும் எதிர்க்கும் பாரம்பரியத்தைக் கொண்டவர்களே தமி ழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் என்ற அபிப்பிராயம் பெரும்பாலான மக்களிடம் தோன்றியிருக்கின்றது. அரசியலமைப் பின் பதினேழாவது திருத்தம், அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் ஆகியவற்றுக்குக் காட்டிய எதிர்ப்பை உதாரணமாகக் கூறலாம். பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அமையும் அரசியலமைப்புச் சபையில் இலங்கைத் தமிழர், இந்திய வம்சா வளியினர், முஸ்லிம் ஆகிய இனங்களின் பிரதிநிதிகள் அங்கத் துவம் வகிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் அத்திருத் தம் தமிழ் மக்களுக்குச் சம்பந்தம் இல்லாதது எனக் கூறித் தமி ழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப் புச் செய்தது. இது கண்மூடித்தனமான எதிர்ப்பு மனோபாவத்தின் வெளிப்பாடு. இத்தகைய அணுகுமுறை எதிர்மறை விளைவைத் தருமேயொழியச் சாதகமான பலனைத் தராது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருத்தத்துக்கான அதன் முழுமையான கோரிக் கையை முன்வைக்கலாம். அக்கோரிக்கையை வலியுறுத்துவதும் தவறல்ல. ஆனால் அக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாவிட் டால் அரசியலமைப்புத் திருத்த நடைமுறையிலிருந்து முற்றாக ஒதுங்குவது சரியான அணுகுமுறையாகாது.

அரசியலமைப்பில் செய்யப் போவதாக இதுவரை அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் ஜனநாயகத் தன்மை கொண்டனவும் முற்போக்கான வையுமாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்பட்டுப் பாரா ளுமன்றத்துக்குப் பதில் கூறக் கூடிய நிறைவேற்றுப் பிரதமர் முறையைக் கொண்டு வருவதும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் திருத்தங்கள். இத்திருத்தங்களுக்கு ஆதரவு அளிக்காமல் ஒதுங்குவது அவற்றை எதிர்பார்த்திருக் கும் மக்களிடமிருந்து அந்நியப்படுவதாகிவிடும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்பதில் மாற் றுக் கருத்து இருக்க முடியாது. அரசியல் தீர்வின் இறுதி அங்கீ காரம் சர்வசன வாக்கெடுப்பு என்பதை மனத்தில் இருத்திச் செய ற்பட வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு. பெரும்பாலான மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு முர ணாகச் செயற்படாத வகையில் அரசியல் தீர்வுக்கான முயற் சியை முன்னெடுப்பதன் மூலமே சர்வசன வாக்கெடுப்பில் மக்க ளின் அங்கீகாரத்தைப் பெற முடியும். அரசியலமைப்புத் திருத்த விடயத்திலும் இவ்வாறான அணுகுமுறையே தேவையானது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.