புத் 63 இல. 29

விகிர்தி வருடம் ஆடி மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 05

SUNDAY JULY 18, 2010

 
.

டெஸ்ட் போட்டியில் இருந்து முரளி ஓய்வு

டெஸ்ட் போட்டியில் இருந்து முரளி ஓய்வு

இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணி சர்வதேச மட்டத்தில் கிரிக்கெட் துறையில் பிரபல்யம் அடைவதற்கு முத்தையா முரளிதரன் காரணம் என்று கூறினாலும் மிகையாகாது.

முரளிதரன் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 792 விக்கெட்டுகளை வீழ்த்தி எவராலும் முறியடிக்கப்படாத சாதனைக்கு சொந்தக்காரராகத் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.

முரளிதரன் 337 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 513 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

முரளிதரனின் ஓய்வில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சுழல் பந்துவீச்சில் தாக்கம் இருக்கும் என விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

முரளிதரன் தனது சொந்த அலுவல்கள் காரணமாகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முரளிதரன் அனைவரது நன்மதிப்பைப் பெற்றவராக திகழ்ந்தாலும் சரியான நேரத்தில் தனது ஓய்வை அறிவித்து இருப்பது அவரின் முன்மாதிரியை எடுத்துக் காட்டுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்திருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட்டில் இருந்து முரளிதரன் ஓய்வு பெற்றாலும் அவரை இலங்கை அணிக்கு சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.