வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

விரைவான 100 விக்கெட் தவறவிட்டார்

விரைவான 100 விக்கெட் தவறவிட்டார்

யசீர் ஷா

பாகிஸ்தான் அணியின் சுழற் பந்து வீச்சாளார் யசீர் ஷா விரைவாக 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாவது வீரராக சாதனை படைத்தார். அண்மையில் டுபாயில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய போது இம்மைல்கல்லை அவர் எட்டினார். அவரின் 100 வது விக்கெட்டாக மேற்கிந்திய அணி வீரர் கமின்ஸ் ஆட்டமிழந்தார்.

சுமார் 150 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1896 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜோர்ஜ் லேஹ்மன் 16 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தயிருந்தமையே சாதனையாகும். அண்மையில் இதை முறியடிக்கும் சநதர்ப்பத்தை யசீர் ஷா நெருக்கினாலும் மயிரிழையில் தவறவிட்டார்.

என்றாலும் ஆசிய மண்ணில் விரைவாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை நிலைநாட்டினார் யசீர் ஷா. இதற்கு முன் இந்திய சுழற் பந்து வீச்சாளர’ ஆர். அஸ்வின் 18 போட்டிகளில் இச்சாதனையைப் புரிந்திருந்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.