புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
ஆங்கில எழுத்து பரீட்சைக்கு மேலதிகமாக உரையாடல், கிரகித்தல் சோதனை

ஆங்கில எழுத்து பரீட்சைக்கு மேலதிகமாக உரையாடல், கிரகித்தல் சோதனை

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கில பாட வினாத்தாளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு எழுத்து மூல பரீட்சைக்கு மேலதிகமாக உரையாடல் மற்றும் கிரகித்தல் பரீட்சைகளும் நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.

எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். 2015 ம் ஆண்டிலிருந்து இந்த புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

சங்கீத பாட பரீட்சைக்கு எழுத்து மூல பரீட்சைக்கு மேலதிகமாக செயல்முறை பரீட்சை நடத்துவது போன்று ஆங்கில பாடத்துக்கும் செயல்முறை பரீட்சைகள் நடத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஆங்கில பாட செயல்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கு மேலதிகமாக 10 புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.