புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
புத்தாண்டின் உதயத்தோடு எண்ணங்களும் புதுமை பெறவேண்டும்

புத்தாண்டின் உதயத்தோடு எண்ணங்களும் புதுமை பெறவேண்டும்

பொருளாதாரத் துறையில் முன்னேறிய சமூகம் ஒன்றை உருவாக்குவதே அரசின் அடுத்த கட்ட இலக்காகும். புதிய நோக்குடன் நாட்டின் எதிர்கால பயணத்தில் பங்கேற்போம். ஊடக, தகவல் அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புத்தாண்டின் உதயம் புதியதானாலும் மனிதனின் எண்ணங்கள், கோட்பாடுகள் புதுமை அடையாவிட்டால் அத்தகைய மனிதர்களைக் கொண்ட சமூகம் வளர்ச்சி அடையாது. சமூகத்தில் சக வாழ்வை யும், நற்குண சீலங்களையும் உறுதிப்படுத்துவோம் உங்கள் சகல ருக்கும் சமாதானம், மகிழ்வு நிறைந்த செளபாக்கியமிக்க புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக என்றும் அமைச்சு கூறியுள்ளார்.

புத்தாண்டு காலம் புதிய எண்ணங்கள், புதிய உணர்வுகள் உருவாகும் மகிழ்வுமிக்க காலமாகும். மக்கள் சமூகத்தில் உருவாகும் புதிய எழுச்சி புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் அரசின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும். நாட்டின் மாபெரும் கலாசார நிகழ்வை தடையின்றி நடத்தக்கூடிய சுதந்திரச் சூழலை அரசு உத்தரவாதப்படுத்தியது.

பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி கண்ட சமூகத்தை உருவாக்குவதே அரசின் அடுத்தகட்ட இலக்காகும். துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் துப்பாக்கி ஒலிகளுக்கு மத்தியிலும் முப்பது ஆண்டுகளைக் கடந்த இலங்கை மக்கள் அந்த பயங்கரம் மிக்க காலத்தை மறக்க வேண்டும்.

அத்தகைய ஒரு நிலைமை மீண்டும் உருவாகாமல் இருக்க அரசு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். இது நாட்டுக்காக செய்யும் கடனாகுமென்றும் அமைச்சர் கூறியுள்ளார். (எப்.எம்.)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.