புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்கும் நல்ல தீர்வை அரசாங்கம் ஏற்படுத்தும்

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்கும் நல்ல தீர்வை அரசாங்கம் ஏற்படுத்தும்

அரசாங்கத்தின் மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சர்வதேச அரங்கில் சுமத்தும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.

சுமந்திரன் தெரிவித்த முறைப்பாடுகளுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தக்க பதிலைக் கொடுத்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் அரசாங்கம் குடியமர்த்தவில்லை என்ற சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திருமதி நகுலேஸ்வரன், அம்மக்களுக்கு இராணுவத்தினர் சேகரித்த பணத்தில் இருந்து இரண்டரை இலட்சம் பெறுமதியான கட்டுமாணப் பொருட்களை வங்கி இராணுவத்தினர் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார் என்று பதிலளித்தார்.

தயவு செய்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கத்தின் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட திருமதி நகுலேஸ்வரன் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல தீர்வை அரசாங்கம் ஏற்படுத்தும் என்ற அசையாத நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தினார்.

வடக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடனான சந்திப்பு ஒன்றின் போது சுமந்திரன் எம்.பி. வைத்த பொய் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சு.க. அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.