புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வேலையில்லா பிரச்சினையை மேலும் குறைக்க முடியும்

முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வேலையில்லா பிரச்சினையை மேலும் குறைக்க முடியும்

முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் 3.9 ஆகவுள்ள வேலை யில்லாப் பிரச்சினையை மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

கடந்த 50 மாதங்களாக பண வீக்கத்தை ஒற்றை இலக்கத்தில் தக்கவைத்துக் கொள்ள முடிந்ததாகத் தெரிவித்த அவர் கடந்த 50 மாதங்களிலும் பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் நிறைந்தே காணப்பட்டதெனவும் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஊடகப் பேட்டியொன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேசம் முழுவதும் எமது மத்திய வங்கி அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. அத்துடன் எமது கடன் வழங்கும் நாடுகளும் இந்த அறிக்கையில் திருப்தி கொள்ளும்போது இங்கு சிலர் அதை ஏற்றுக்கொள்ளாமை விந்தையானது.

இது சர்வதேச மட்டத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதால் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதன் படியே 6.4 பொருளாதார வளர்ச்சியை எம்மால் அறிவிக்க முடிந்தது. இதனை உள்ளூரிற்கு ஏற்றபடி தயாரிக்க வேண்டும் என எவராவது கூறினால் அது அவர்களின் அறியாமையாகும்.

1948லிருந்து 2005 வரை எமது பொருளாதார வளர்ச்சி வேகம் 7.8 ஆகும். 2006லிருந்து 2012 வரை இது 6.7 ஆக இருந்துள்ளது. யுத்தத்துக்குப் பின்னரான எமது பொருளாதாரத்தை நோக்கும் போது கடந்த மூன்று வருடங்களில் 7.5 ஆக வளர்ச்சி அடைந்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தில் இது சற்று குறைந்துள்ளது. அதனை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு சில காரணங்கள் உள்ளன. நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்வதானால் இத்தகைய நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.

6.4 என்ற பொருளாதார வளர்ச்சி என்பது உலக பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பானதாகும். அத்தகைய ஒரு நிலையை எம்மால் தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.

பீஎதிர்காலத்தில் நாம் 7.5 வீத பொருளாதாரத்தைத்தக்க வைத்துக் கொள்வதற்காக எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் நாம் வெளிப்படுத்தியுள்ளோம். சிலர் எமது நடவடிக்கை தொடர்பில் விமர்சிக்க முடியும். எனினும் இதன் பிரதிபலன்களை பின்னரே உணர முடியும். பொருளாதார விஞ்ஞானம் என்பது எதிர்காலத்தைப் பற்றி யோசித்து எடுக்கின்ற தீர்மானத்திலேயே அமைந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அவர்; ஒரு பொருளின் விலை அல்லது சேவைக்கான செலவு அதிகரிக்கும் போது பொருட்களின் விலை அதிகரிக்கிறது.

கொழும்பு நுகர்வோர் சுட்டெண்ணின்படி சாதாரண பாவனையாளர்கள் 300 அத்தியாவசிய பொருட்களை மாதமொன்றில் உபயோகிக்கின்றனர். இந்த 300 பொருட்களின் விலைகள் ஆராயப்பட்டே விலைப்பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.