புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
மலரும் புத்தாண்டில் இலங்கை மக்களின் வாழ்வு வளம் பெறும்

மலரும் புத்தாண்டில் இலங்கை மக்களின் வாழ்வு வளம் பெறும்

சோதிட மாமணி நவா ஆரூடம்

* புத்தாண்டில் நல்ல மழையும் தானிய விளைச்சலுடன் மக்கள் வாழ்வு வளமாக அமையும்
* சவால்களை முறியடித்து அரசாங்கம் தன் நற்பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளும்
* இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, இந்தோனேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

பிறக்கும் விஜய வருடம் இலங்கையை பொறுத்தவரை நாட்டில் சமாதான முன்னெடுப்புகள் மேலோங்கி நிற்கும்.

நல்ல மழையும் தானியங்களின் விளைச் சலும், கலை, கலாசார பண்பாடுகளின் உயர்ச்சியும் கொண்டதாக அமையும். எத்தகைய சவால்களுக்கும் இலங்கை அரசு முகம் கொடுத்து அவற்றை முறியடிப்பதுடன் நாட்டின் பொருளாதாரம் உயர்வடையவும் வழிசமைக்கும்.

அரசியல் மாற்றமோ, ஆட்சி மாற்றமோ ஏற்பட இடமில்லை. அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அது நன்மைக்கு வழிசமைக்கும். குறிப்பாக, இலங்கைக்கு நன்மை தரும் வருடமாகும் என சோதிட மாமணி நவா தினகரன் வாரமஞ்சரிக்கு அனுப்பியுள்ள ஜோதிடக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சோதிட மாமணி நவா உலக நாடுகள் பற்றி குறிப்பிடுகையில், பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட இடமுண்டு. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, இந்தோனேசியா என்பவை இதில் அடங்கும். அரபுநாடுகளில் அமைதியின்மை ஏற்படும்.

சீனா, யப்பான், ரஷ்யா நாடுகளில் வெள்ளம், புயல், பூமியதிரிச்சி என்பவைகள் ஏற்பட்டு அழிவுகளைத் தரும். அமெரிக்கா, ஜேர்மன், கனடா, பிரிட்டன் நாடுகளில் வெள்ளம், புயல் அபாயங்கள் வருட நடுப்பகுதியில் ஏற்படும். பொதுவாக நன்மையும் தீமையும் கலந்த வருடமாக விஜய வருடம் அமைந்திடும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.