புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
உள்ளங்கள் தோறும் நிம்மதி நிலைபெறும் ஆண்டாக அமையட்டும்

உள்ளங்கள் தோறும் நிம்மதி நிலைபெறும் ஆண்டாக அமையட்டும்

பிறக்கும் சித்திரைப் புத்தாண்டை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். ‘விஜய’ எனும் பெயரில் உதயமாகும் இவ் வாண்டில் மக்களின் அனைத்து எதிர் பார்ப்புகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்குண்டு என இ.தொ.கா.

பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தியி லேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும் ஏற்றத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது தம் பணியை தொடரும்.

பெருந்தோட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியில் ஒரு விமோசனத்தை ஏற்படுத்து வதற்காகவே புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் ஒரு நல்ல தருணத்தில் இப்புத்தாண்டு பிறந்திருக்கிறது.

மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதும், சாவல்களை சந்திக்கின்ற போதும் அரணாக காத்து நின்று துயர் துடைக்கும் பணியை நாம் மேற்கொண்டிருப்பதை வரலாறு சான்று படுத்தும். இதன் காரணமாகவே தெளிந்த சிந்தனையோடும், திடமான நம்பிக்கை யோடும் கொள்கைபற்றோடும் மக்கள் எம்பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

2013ம் ஆண்டு நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாகவும், மலையக மக்களின் தேவை களை நிறைவேற்ற வழிகாட்டும் ஆண்டா கவும் திகழ வேண்டும். மலையக மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம். இந்த ‘விஜய’ புதிய ஆண்டில் மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தமது புத்தாண்டு வாழ்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.