புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
சாணக்கியனிடம் கேளுங்கள்

சாணக்கியனிடம் கேளுங்கள்
 

எம்.ஐ அஹமட் வாசிம் புத்தளம்

நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை என்று கூக்குரலிடு கிறார்களே? இது குறித்து உங்களது கருத்து என்ன?

கூக்குரலிடுவது யாரென்பதை முதலில் உற்று நோக்குங்கள். தமது ஊடகங்களில் தேவையான அளவு சுதந்திரத்தைக் கையிலெடுத்துச் செயற்படுபவர்களே இவ்வாறு இல்லையென்றும் கூறுகிறார்கள். அப்பதானே வேண்டப்படாதவர்களுக்கு வேண்டியளவு சேறுபூசலாம். இவ்வாறனவர்கள்தான் இருக்கும் சுதந்திரத்தை இல்லையென்று கூறமுற்படுகின்றனர்.
 

பா.சுசிலா, நீர்கொழும்பு

இந்த உலகம் அழிவதற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிடுமா?

சுசி ஏன் இவ்வளவு கொலைவெறி, இதற்கு தடையாக இருக்கும் தமிழ்த் தரப்புக்கள் அழிந்துவிட்டாலே போதும் நிச்சயம் தீர்வு கிடைக்கும். அதற்காகப் போய் ஏன் வீணாக உலக த்தை விரைவாக அழிக்க முற்படுகிaர்கள். நீங்கள் வாழ வேண்டிய பிள்ளை.

க.வசீகரன், வவுனியா

சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்கிறதே இதனைத் தடுக்க என்னவழி?

அரபு நாடுகளில் களவெடுத்தால் கையை வெட்டிவிடுவது போன்று இதற்கு அதை வெட்டிவிடுவதுதான் ஒரே வழி. இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதன் மூலமாக எவர் குற்றமிழைக்கி றார்களோ அதை இருவருக்கு வெட்டிவிட்டால் அடுத்தவர்கள் பயப்படுவார்கள். என்ன வசீ, கேட்கும்போதே குலைநடுங்குதல்லவா?

பி.ரி. சின்னலெப்பை

வெலிகம

அண்மையில் தனியார் சொகுசு பஸ்ஸில் யாழ்ப்பாணம்

சென்றேன். சாரதி, நடத்துனரின் தொல்லை தாங்கமுடியவில்லை.

பயணிகளை இம்சிக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

என்ன செய்யலாமென்றால், அதுதானே அரசாங்கம் சிறிய கட்டணத்தில் நல்ல பஸ்களை ஓடவிட்டுள்ளது. சொகுசை புறக்கணித்து இதில் எல்லோரும் சென்றால் இவர்கள் வழிக்கு வருவார்கள் கொஞ்சம் பொறுங்கள், நம்ம யாழ்தேவி வந்ததும் இவர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம்மென்று ஓடுவார்கள்.

க.கருணாகரன், யாழ்ப்பாணம்

சம்பந்தன் ஐயாவிற்கு வயதாகிறதே? கூட்டமைப்பின்

பொறுப்பை வேறு எவரிடமாவது கொடுக்கலாமே?

வருடம் செல்லச் செல்ல வயதும் ஏறத்தான் செய்யும். கருணா உங்களுக்கும் அப்படிதான். அதற்காக வயதாகி விட்டது என்று குடும்பப் பொறுப்பை வயது குறைந்த விசயம் தெரியாத புரியாத ஒருவரிடம் ஒப்படைக்க முடியுமா? யாராவது ஒப்படைப்பார்களா? அதுபோலத்தான். கூட்டமைப்பின் அப்பா, குடும்பத் தலைவர் சம்பந்தன் ஐயாதான். இனி இந்தக் கேள்வியை எவரிடமும் கேட்டுவிடாதீர்கள். உங்களைத் தவறாக நினைப்பார்கள்.

ந.வேலுச்சாமி, அப்புதளை

மலையகத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகச் சிலர் குறை

கூறுகிறார்களே?

யார் அந்தக் சிலர் என்றும் அந்தக் குறைபாடுகள் என்னவென்றும் கூறுங்களேன்.குறை கூறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்னகள் ஏனென்றால் சிலருக்கு அதுதானே முழுநேரக் குலத் தொழில். நீங்களும் அதில் சேர்ந்து விடாதீர்கள் வேலுச்சாமி. நல்லவற்றை மட்டுமே நோக்குங்கள்.

வி. கந்தசாமி

கிராண்பாஸ்

புதுமணச் சோடி நடிகை சினேகாவும் தம்பி சரவணனும்

பிரிந்து விட்டார்களாமே?

இப்போது இது உங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். கிராண்ட்பாஸில் பல இடங்களுக்கு பகலில் தண்ணீர் வருவதில்லை என்று மக்கள் சிரமப்படுகினம். அது தெரியுமோ உங்களுக்கு? போய் தேவையான விடயங்களைப் பாரும் மிஸ்டர் கந்தசாமி. அவங்க பிரிவதுபோல நடிப்பதற்கு கோடி ரூபா பெற்றார்களாம். உமக்கு கோடிக்குள்ள நடக்கிற விடயங்கள் தெரியாமலுள்ளது.

எஸ்.எம்.மொகைதீன், அக்குறணை

மத்திய மாகாணத்தில ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்டம்

முடிவுக்கு வந்துள்ளதா?

வராமலிருக்குமா? நம்ம பைஸர் முஸ்தபாவும் காதர் ஹாஹியாரும் இப்ப யார் பக்கம்.ஐ.தே.க வின் அசைக்க முடியாத கோட்டையையே கடந்த முறை பைஸர் அசைத்துவிட்டார். இனி அவரது தொடரான சேவையால் அதை மீண்டும் எவராலும் அசைக்க முடியாது.

ஆ. வேலுபிள்ளை, நுவரெலியா

நுவரெலியாவில் ஒரு கோயில் இல்லையே என்று

அங்குள்ள மக்கள் கவலை கொண்டுள்ளார்கள். இதற்கு

நம்ம மலையகத் தலைவர்கள்

ஏதாவது செய்யக் கூடாதா?

அவங்களுக்கு இருக்கிற சோலி காணாதென்று கோயிலை வேறு கட்டச் சொல்கிaர்களா? இதெல்லாம் மக்கள், கொடைவள்ளல்கள், சமூக ஆர்வலர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய விடயம். வேலு, நீங்களே தலைமை தாங்கி ஒரு குழுவை அமையுங்கள்.

கூடிப் பேசுங்கள். நிதியைச் சேகரியுங்கள். பின்னர் அரசியல் தலைவர்களிடம் உதவி கேளுங்கள். நிதி விடயத்தில் கவனமாக இருங்கள்.

பாத்திமா ஜெஸ்மின், காத்தான்குடி

தினகரன் வாரமஞ்சரி கிழக்கு வாசகர்களை மறந்து விட்டதா?

எப்போது எமது பகுதியில் வாசகர் வட்டம்?

தினகரனால் கிழக்கை மறக்க முடியுமா? ஏனைய பிரதேசங்களில் ஒவ்வொரு நகரிலும் தான் அழைப்பு. கிழக்கிலிருந்து ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் அழைப்பு வருகின்றது. ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு வீதிகளி லிருந்தும் அழைப்பு வருகின்றது. அதனால் அதனை ஒழுங்குபடுத்தி வருகின்றோம். விரைவில் காத்தான்குடிக்கு வட்டம் வரும் ஆசிரியை பாத்திமாவிற்கு விசேட அழைப்பு உள்ளது.

உங்கள் கேள்விகளுக்கு சாணக்கியன் பதிலளிக்கிறார். வினாக்களைத் தபாலட்டையில் தெளிவாக எழுதி கீழ் வரும் கூப்பனை வெட்டியொட்டி அனுப்பிவையுங்கள்.

சாணக்கியனிடம் கேளுங்கள்

வாரமஞ்சரி தினகரன்

லேக்ஹவுஸ்

கொழும்பு-10

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.