புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
சவ+தி அரேபியாவில் ~pஆ முஸ்லிம்களின் கிளர்ச்சி

சவ+தி அரேபியாவில் ~pஆ முஸ்லிம்களின் கிளர்ச்சி

    சவூதி அரேபியாவில் உள்நாட்டு கிளர்ச்சிகள் வெடிக்கும் சந்தர்ப்பங்கள் மெதுமெதுவாக தலையெடுத்துவிட்டன. இஸ்லாத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் சவூதி அரேபியா உலக முஸ்லிம்களுக்குப் பொதுவான இரண்டு புண்ணியத் தலங்களையுடையது. மக்கா, மதீனா ஆகிய புண்ணிய நகரங்கள் இஸ்லாத்தின் வருகையோடு பிரபல்யமாகின. ஆரம்ப காலந்தொட்டு கடுமையான சட்டங்களையும், இறுக்கமான நடைமுறைகளையும் அமுலில் கொண் டுள்ள நாடு. ஐனநாயக தேர்தல் நடைமுறைகளோடு முற்றிலும் வேறுபட்டுள்ள அரசியல் முறைகளையும், சட்டங்களையுமுடையது. குறிப்பிட்ட குடும்பங்களிடமே ஆட்சி, அதிகாரங்கள் குவிந்து கிடக்கும் வகையில் மன்னராட்சி முறை பின்பற்றப்படுகின்றது.

பெண்கள் குறித்த விடயங்களில் அறபு நாடுகள் குறிப்பாக சவூதி அரேபியாவிலுள்ள சட்டதிட்டங்கள் இன்றைய காலங்களில் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளன. பெண்களின் சொத்துடைமைகள் திருமண விடயம் வாக்குரிமை. பர்தாவுடைய வாழ்க்கை முறை தேர்தலில் போட்டியிடும் உரிமைகள் மறக்கப்பட்டுள்ளமையென்பன சவூதி அரேபியாவில் நீண்டகாலமாக நடைமுறையிலுள் ளது.

அரபுநாடுகளில் தற்போது தொற்றிக் கொண்டு வரும் மக்கள் புரட்சி சவூதி அரேபியாவையும் விட்டு வைக்கவில்லை. சுன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டுப் பெண்கள் வாகனமோட்ட அனுமதி கோரப்பட்டதும் தேர்தல்களில் பங்குகொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்ததும் முக்கிய விடயங்கள்.

அதனையடுத்து பெண்கள் வாக்களிப்பதற்கான உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் வழங்கப்பட்டது. பின்னர் வாகனமோட்டுவதற்கான அனுமதியையும் தரவேண்டுமென்றும் பெண்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இவ்வாறு மக்களின் மனங்களில் தோன்றி வரும் விடுதலை உரிமை வேட்கைகள் நாளாந்தம் அரசின் செயற்திட்டங்களை சங்கடத்தில் ஆழ்த்தியதுண்டு. சுன்னி முஸ்லிம்களை மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியாவில் ஷியா முஸ்லிம்களும், வாழ்கின்றனர். ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம்களில் ஷியா முஸ்லிம்களின் கைகளே பொருளாதார அரசியல் ரீதியான செல்வாக்குகள் ஓங்கியுள்ளமை ஈரான், ஈராக், சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையுள்ள போதும் ஈரானைத் தவிர ஏனைய நாடுகள் பலமுடையதாக இல்லை.

ஈராக்கில் சுன்னி முஸ்லிமான முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ¥சைன் முப்பது வருடங்களாக ஷியா முஸ்லிம்களை அடக்கு முறையிலே வைத்திருந்தார். இப்போது நிலைமைகள் மாறி ஷியா முஸ்லிம்களைத் தலைமையாகக் கொண்ட நூரி அல்மால்கியன் அரசாங்கமுள்ளது. இதேபோன்று சவூதி அரேபியாவை அண்மித்துள்ள யெமனின் சிலமாகாணங்களில் ஷியா முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இப்போராட்டத்துக்கு ஷியா போராளிகள் சவூதி அரேபியாவைத் தளமாகப் பாவித்தமையும் ஷியா முஸ்லிம்கள் ஆதரவு வழங்கியமையும் சவூதி அரேபியாவை உள்ளச்சத்திற்குள்ளாக்கியது.

எவ்வாறாயினும் ஷியா முஸ்லிம்களின் போராட்டம் தனது நாட்டுக்குள் வெடிக்க கூடாது என்பதில் சவூதி அரசு கடும் எச்சரிக்கையுடன் செயற்பட்டது. யெமனின் எல்லைகளில் இராணுவத்தைக் குவித்து மேலதிக பயிற்சிகளையும் வழங்கியது. ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் கண்காணிப்புகள் தீவிரமாக்கப்பட்டன.

இற்றைக்கு ஓராண்டுக்கு முன்னர் ஷியா முஸ்லிம்கள் விடயத்தில் சவூதி அரேபியா விழித்துக்கொண்டதுடன் யெமனில் இடம்பெறும் ஷியா முஸ்லிம்களின் போராட்டம் சவூதி அரேபியாவில் வாழும் ஷியா முஸ்லிம்களை உசுப்பிவிடக் கூடாது என்பதில் சவூதி அரேபியா மிகக் கவனமாகவே செயற்பட்டது. ஆனால் ஷியா முஸ்லிம்களின் விடுதலையுணர்வுகள் சகல கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து சவூதி அரேபியாவை ஆட்கொண்டுவிட்டது. அண்மைக்காலமாக பெண்களுக்கான வாக்குரிமை வாகனம் ஓட்டும் உரிமை, தேர்தலில் பங்குகொள்ளும் வாய்ப்புகள் போன்ற கோரிக்கைகள் வலுவடைய ஷியா முஸ்லிம்களின் செயற்பாடுகளே மறைமுக காரணங்களாக இருந்துள்ளமை புலனாய்வுகளூடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 நிலைமைகளை இராணுவங்களைக் கொண்டு அடக்கினால் பாரிய மோதல்கள ஏற்பட்டு பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டுவரும் மன்னராட்சிக்கே ஆபத்தாய் முடியுமென சவூதி அரேபியா அஞ்சியது. இதனால் கோரிக்கைகள் வலுவடைந்து கொந்தளிப்பாய் மாறுவதை விட சில நிபந்தனைகளின் அடிப்படையில் சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இன்று மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் சவூதி அரேபியா பெண்கள் பங்குபற்றுமளவிற்கு சவூதி அரசு சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சட்டங்களில் நெகிழ்வுப் போக்கை கையாள்வதைக் காணலாம்.

இதற்கும் மேலாக அரசியல் கட்சிகள் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் முறைகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் சவூதி அரசாங்கத்தால் அடியோடு நிராகரிக்கப்பட்டதைக் காணக்கூடியதாகவுள்ளது. அண்மையில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்த பல பேர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலே ஷியா முஸ்லிம்களின் அரசுக்கெதிரான நிலைப்பாடுகள் தலையெடுத்துள்ளன. தொழில்வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதிகள் பொருளாதாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் ஷியா முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இவ்வருட பெப்ரவரி மாதமளவில் சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் வன்முறைகள் வேர்விட்டன. காஷ்ரிப் சுவாசிமியா போன்ற ஷியா முஸ்லிம்களின் நகரங்களில் இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஷியா முஸ்லிம்களால் மதிக்கப்படும் தலைவரான ஷேக் நிமர் அல்நிமர் என்பவரே இவற்றை ஏற்பாடு செய்வதாக கருதிய சவூதி அரசாங்கம் அவரைப்பல முறை கைது செய்து விடுதலை செய்தது. இதற்கு முன்னர் இவ்வாறான ஷியா முஸ்லிம்களின் போராட்டம் வெடிப்பதற்கு முன்னராக பல தடவைகள் ஷேக் நிமர் அல்நம்பி என்பவர் கைதாகி விடுதலையாகியுள்ளார். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னரே ஷியாக்களின் எழுச்சி உரிமைகள் தொடர்பாக இவர் சீரழிந்து வந்துள்ளமை இவரின் கைதுகளூடாகப் புலப்படுகின்றது.

சென்ற வாரமும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது சவூதி அரேபியா இராணுவம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டது. இதில் ஷியா முஸ்லிம்களின் தலைவரான ஷேக் நிம்பர் அல்நிம்பர் மீதும் துப்பாக்கி வேட்டுக்கள் பார்த்தன இதில் கடும் காயங்களுக்கான இவரை இராணுவத்தினர் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஷியா முஸ்லிம்களின் தலைவரது வாகனமும் சேதப்படுத்தப்பட்டதுடன் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தற்போது சவூதி அரேபியாவின் மன்னராகவுள்ள அப்துல்¡வின் வெற்றிக்குப்பின்னர் நயிப் அப்துல்லா அkஸ் என்பவர் மன்னராக பதவியேற்கவுள் ளார். மிக விரைவில் இவர் மன்னராக பதவியேற்க வுள்ள நிலையிலே ஷியாக்கள் மன்னராட்சி என்ற குடும்ப ஆட்சியை ஒழித்துக்காட்டுமாறு அமர்க்களம் செய்கின்றனர். சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சு இப்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை தொடர்பாக தெளிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எக்காரணங்களைக் கொண்டும் நாட்டையும், மக்களையும் பிழையான வழிக்குக் கொண்டு செல்லும் ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்களுக்கு இடமளிக்கப்படமாட்டது.

ஷியா முஸ்லிம்களின் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்புக்கென போதுமான நிதியொதுக்கப்பட்டுள்ளது. 40 மில்லியன் அமெரிக்க டொலர் சவூதியின் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.