புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
அல்லாமா பாகவி குடும்ப மகுடத்தில் தோன்றிய முத்து

அல்லாமா பாகவி குடும்ப மகுடத்தில் தோன்றிய முத்து

‘தர்ஜூமாவின்’ தொடர்கதை

வந்தார் - வென்றார் - சென்றார்...

பேராசிரியை பாத்திமா நம் நாட்டுக்கு வந்தார் மக்கள் மனதை வென்றார், மீண்டும் தாயகம் ஏவினார்.

அனைவருக்கும் அவர் ஒரு பேராசிரியை. பாத்திமா முஸப்பர் - எனக்கு மகள்-

சிராஜுல் மில்லத் ஆ.கா.அப்துஸ் ஸமத் அவர்களுக்கு இரு பெண் மக்கள். மூத்தவர் அலவியா; இரண்டாமவர்தான் நம் பாத்திமா.

மொட்டவிழ்ந்து பூவாகி மலர்ந்திருக்கும் பருவம் இது.....

மலர்ந்த பொழுதில் மனம் கமழும் பேச்சு. இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் ஆண்டுவிழாவில் பேருரை நிகழ்த்த வந்தார். ஆரம்பச் சொல் முதலே அற்புத பேச்சுவன்மையை வெளிப்படுத்தினார். மண்டபத்தைச் சூழ நிரம்பி வழிந்திருந்த நம் இலங்கை ஊடக அன்பர்கள் (ஆசனமற்ற பலர் நின்று கொண்டும் கூட செவிமடுத்தனர்) அனைவரினதும் மனங்களைக் கவர்த்தார்.

அடுத்து, மலைநாடு சென்றார். மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா வடதெனிய - வெலம்பொட கதீஜதுல் குப்ரா, தந்தெஸ்ஸ அல் - மனார், பாடசாலை மாணவிகள் ஆகியோர் மத்தியில் ‘தியலும’ ளிiyaluசீa- நீர்வீழ்ச்சியைப் போன்று பாத்திமாவின் நாவிலிருந்து வழிந்து சிதறிய சொற்பொழிவுகளின் நீர்த்துளிகளை - அல்ல, அல்ல முத்து மணிகளை அல்லி வாரி எடுத்துக்கொண்டனர்.

நீர்வீழ்ச்சியிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளைப் போன்று இந்த மாணவிகளின் கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகளை யார்தான் அவதானிக்காமல் இருந்திருக்க முடியும்.

நீ வாப்பாவின் மகள்தான், அம்மா....! தங்கத்தாத்தாவின் தங்கப் பேத்திதான், அம்மா....!

அல்யாமா அப்துல் ஹமீத் பாகவி தாத்தா; அப்பா (பாவா) மணிவிளக்கை தமிழுலகுக்குத் தந்த சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் இவரின் தந்தை,

இருபதாம் நூற்றாண்டின் அற்புத மனிதர் அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீத் (பாகவி) என்றேன் - என் முன் கட்டுரையில் பேத்தி பாத்திமாவுக்கு இயற்கையாகவே வாரிசு வழியில் அமைந்துவிட்ட அற்புத திறமை அவர் நா அசைவு. செம்மொழிமூலம், செந்நெறி மணி விளக்கோடு நம் சமூகக் கண் மணிகளுக்கு ஒளி பாய்ச்ச எம் மண் மிதித்தவர்தான் எம் பாத்திமா என்பேன்.

இந்நிலையில் அனுசரித்ததால் “செந்நெறி செம்மொழிச் செல்வி” என்று நான் பிறந்த மண்ணில் இவருக்குப் பட்டம் சூட்டி மகிழ்ந்தேன். இவர் நிழலாக நின்று பாதுகாப்பளித்துப் பக்குவமாக ஊர் ஊராக இவரை அழைத்துச்செல்ல வந்த துணைவர் முஸப்பர் எம் பாராட்டுதலுக்கு முழுசாக ஆளாகின்றார்.

எனவே பாகவி குடும்ப மகுடத்தில் தோன்றிய விrown நிலீwலீl - சிகர மணி பாத்திமா முஸப்பர்!

தொடரும் தர்ஜூமா கதை

பாத்திமாவின் தாத்தா அல்லாமா பாகவி அவர்களின் தமிழ் தாஜுமா பற்றிய கதையை இப் பந்திகளில் எழுதும் பொழுதுதான், அவர் பேத்தி எமது நாட்டுக்கு வந்துசேர்ந்தார்.

அல்லாமா அப்துல் நமது (பாகவி) கொழும்பு விஜயம் மேற்கொள் கிறார். ஆ.க.அ.அப்துல் ஹமீத் (பாகவி) அன்று எம் நாட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது நம் முஸ்லிம் தலைமைகள் எல்லாம் ஒன்று திரண்டு இப்பெரியாரை வாரி அணைத்து வரவேற்பளித்து பெருமைப்பட்டன.

இலங்கை ஈண்றெடுத்த கல்வியின் சிகரம் - தேசியப் போராட்ட வீரர் - தேசியத் தலைவர், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் டாக்டர் துலான் புர்தாத்தீன் ஜாயா, அகில இலங்கை முஸ்லிம் லீக் தலைவர் டாக்டர் எம்.ஸி.எம்.கலீல், ஸாஹிராவின் அதிபர் அறிஞர் செனட்டர் ஏ.எம்.ஏ.அkஸ் போன்ற தலைவர்கள் இவரை பேரார்வத்துடன் வரவேற்றனர். கொழும்பு மாநகரின் பல்வேறு இடங்களிலும் கூட்டங்களி லும் பொதுமக்கள் அல்லாமாவின் திருப்பணியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

ஆம். கூட்டங்களுக்குவந்த பொதுமக்களிடமிருந்து அல்லாமா இலட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டியிருக்கலாம். எனினும் கொழும்பில் அன்று பிரபல வர்த்தகராகத் திகழ்ந்த - டார்லிபேண்ட் ஹவுஸ், சிப்பிங் சப்லயர்ஸ், இங்கிலிஷ் பேண்ட், அமீனாஸ் இன்டர்நெஷனல் அல்தாஜ் கே.ஏ. முஹம்மத் அலி கொழும்பில் ஒரு வர்த்தகக் கோட்டையையே எழுப்பி இருந்தார். இவர் இலங்கை தப்லிஃ இயக்கத்தின் முதல் அமீருமாவார் முஸ்லிம் லீக்கினதும் ஒரு தூணாக விளங்கிய விசேடமாக இங்கு குறிப்பிட வேண்டும்.

முஹம்மதலி ஹாஜியாருக்கே ஏற்ற பாணியில் ஒரு மாற்று யோசனை அல்லாமா முன்வைத்தார். அல்லாமா இதற்கு உடன்பட்டார். அன்று கொழும்பில் பிரபல வர்த்தகராகத் திகழ்ந்தவர். புரொக்டர் என் எம்.எம்.ஹனீபா (கொழும்பு மா நகர சபை உறுப்பினரும் கூட), இவர் முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர், அமைச்சர், சபாநாயகருமாக பதவிப்படிகளில் மேலேறிச் சென்ற அல்ஹாஜ் எம்.எச்.முஹம்மத் அவர்களின் தகப்பனாவார்.

முஹம்மத் அலி ஹாஜியார் அல்லாமைவை புரொக்டர் ஹனீபாவிடம் அழைத்துச் சென்றார்.

அழகிய கடன்

உலகில் முதன் முறையாகத் தோற்றம் பெறும் தமிழ் தர்ஜுமாவை அச்சிடுவதற்காக செலவுத் தொகையை அழகிய கடனாக தந்துதவ முடியும் என பெருமனதுடன் முன்வந்தார் புரொக்டர் ஹனீபா.

லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் வசூலிப்பதைவிட தனது இலட்சியத்தைப் பூர்த்தி செய்வதுதான் அல்லாமா அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

எனவே அல்லாமா அவர்களை புரொக்டர் ஹனீபா அவர்களின் பெருமனதை மதித்துப் போற்றி அவர் தந்த பணத்தைப் பெற்று சென்னை திரும்பினார்.

“தர்ஜுமா” அச்சிடும்வேளையில் முன்பு ஏற்பட்ட சிலபல இன்னல்களைப்போன்று மேலும் ஒரு தடைக்கல் அல்லாமா முன் தோன்றியது.

தர்ஜுமாவின் 10 ஜூஸ்கள் கொண்ட முதல் பாகம் வெளிவந்த அக்காலையிலேயே புரொக்டர் ஹனீபா காலமாகி விட்டார். அல்லாமா அப்துல்ஸமத் பாகவி அவர்கள் 23.06.1955 ஹிஜ்ரி 1374 அல்லாஹ்வின் நாட்டப்படி இவ்வுலகைவிட்டும் விடைபெற்றார்.

“அவர் பெற்ற கடனை அழகிய கடனாக திருப்பி வழங்கினார்” என்று மணிவிளக்கு ஆசிரியர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.

மேலும் சொல்லமுடியாத தடைகள் - பொருளாதார சிக்கல்கள் - அல்லாமாவை எதிர்நோக்கின. தடைக் கற்களைத் தாண்டினால்தானே வெற்றிக்கம்பத்தை அடையலாம். அல்லாஹ்வை வேண்டி ஆரம்பித்த இப்புனித கடமைகளை அல்லாமா விட்டுவிடவில்லை, சஞ்சலப்படவுமில்லை, கலங்கி சேர்வடையவுமில்லை. இக்காலகட்டத்தில் அல்லாமா அவர்கள் எதிர்நோக்கிய இன்னல்களையும், இடுக்கண்களையும், சஞ்சலங்க ளையும் அன்புக்குரிய நண்பர் அல்லாமாவின் புதல்வர் சிராஜுல் மில்லத் அ.கா.ஆ.அப்துல் ஸமத், கொழும்பு வரும்போது எம்மிடம் ஒவ்வொரு முறையும் கூறுவார். அவரின் உடன்பிறவாச் சகோதரராக விளங்கிய கொழும்பு புறக்கோட்டையைச் சேர்ந்த சமூகச் செம்மல் எஸ்.எம்.சஹாப்தீன் (திருக்குர்ஆன் இயக்கத் தலைவர்) காகா எம்மோடு உடன் இருப்பார்.

“ஸமத் ஸாஹிப் சொன்னது போன்று இப்படித்தான் தடைக்கற்களை தாண்ட நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று நிதமும் என்னிடம் கூறுவார் சாபு காக்கா.

நான் கொண்ட பங்கு - ராபிதாவின் உதவி

‘ராபிதா’வின் உதவி

முழுத் தர்ஜூமாவை மீண்டும் பிரசுரிப்பதற்கு மக்காவிலுள்ள “ராபித்துல் ஆலமுல் இஸ்லாமீ” (உலக முஸ்லிம் லீக்) இன் உதவியை பின்னொருபோது அப்துல் ஸமத் ஸாதிப் அவர்கள் கோரினார்கள். புனித மக்காவிலுள்ள இப்பேரியக்கத்தின் ஸ்தாபக உறுப்பினராக விளங்கியவர். தொழில் அமைச்சராகவிருந்த அல்ஹாஜ் எம்.எச் முஹம்மத் அவரின் பிரத்தியேகச் செயலாளராக அன்று பணிபுரிந்த அடியேன் இந் நன்கொ டையை பெற்றுக்கொடுப்பதில் அன்று பெரும் முயற்சி எடுத்தேன். அல்லாமாவின் அரிய வசனங்களைத் தமிழ்பேசும் மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் முறையில் வெளியிடுவதற்கு நானும் ஒரு கருவியாக இயங்கினேன் என்று நன்றிகொண்ட நிறை நெஞ்சத்தோடு கூறினார்.

தர்ஜுமாவின் ஒரு நூலை அவர் எமக்கு அன்பளிப்புச் செய்த பொழுது அதன் அட்டை கவரில் 10.12.78ஆம் ஆண்டு ஆசிரியர் ஆ.க.ஆ.அப்துஸ்ஸமத் எமக்கு நன்றி தெரிவித்து இவ்விதம் எழுதித்தந்தார்:

“இந்த தர்ஜூமா வெளிவர பெரிதும் உதவிய அருமைநண்பர் தி.சி.ணி அஸ்வர் நிஜி அவர்களுக்கு அன்பளிப்பு....”

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.