புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
சென்னை டாக்டர் ரி.ஜி.கோவிந்தராஜனின் மருத்துவ பரிசோதனை நிலையம் இலங்கையில்

சென்னை டாக்டர் ரி.ஜி.கோவிந்தராஜனின் மருத்துவ பரிசோதனை நிலையம் இலங்கையில்

“வைத்தியத்துறை வியாபாரமாகி வருவதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது. ஒரு சிலர் அப்படி செயற்படலாம். ஆனால், ஒட்டுமொத்த மருத்துவர்களையும் ஒரே விதமாக எடைபோட முடியாது. பிறக்கும்போது எல்லாக்குழந் தைகளுக்கும் மூளை ஓரே அளவாகத்தான் இருக்கும். எனினும் வளர்ந்து பெரியாளானதும் வெவ்வேறுவிதமான துறைகளில் பரிண மிக்கிறார்கள்! அதற்கு என்ன செய்வது?!”

இப்படி ஆதங்கப்படுகிறார் சென்னை டாக்டர் காமாட்சி ஞாபகார்த்த மருத்துவமனையின் ஸ்தாபக மருத்துவ நிபுணர் டாக்டர் ரி.ஜி. கோவிந்தராஜன்.

சிகிச்சைக்காக பலர் இலங்கையிலிருந்து இந்தியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள். உண்மையில் இலங்கையில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. அதனால் எம்மால் இயன்ற உதவிகளைப் பெற்றுக்கொடுக்கு முகமாக இலங்கையில் சிறுநீரக நோய்க்கான பரிசோதனை நிலையங்களைத் திறக்கின்றோம் என்கிறார் டாக்டர் கோவிந் தராஜன்.

ஆசிய பிராந்தியத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவருகிறது. எனவே, மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப் புணர்வை ஏற்படுத்தி பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் ஓகஸ்ட் மாதமளவில் இந்தப் பரிசோதனை நிலையங்களை ஸ்தாபிக்க வுள்ளதாகவும் டாக்டர் கூறினார். மேற்கத்தேய நாடுகளில் மருத்துவம் வளர்ச்சியடைந் துள்ளதைப்போல் , ஆசிய நாடுகளில் இல்லையென்று கூறிய டாக்டர் கோவிந்தராஜன், இந்தியாவைவிட இலங்கையில் மருத்துவ உட்கட்டமைப்பு வளங்கள் போதுமானதாக இல்லையென்று குறிப்பிட்டார்.

“இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி மருத்துவ வளங்கள் யாவும் நகரங்களையே மையப்படுத்தி கிடக்கின்றன. 100 கிலோ மீற்றருக்கு அப்பால் சென்றால், எந்த மருத்துவ வசதியும் இல்லாத நிலைதான் காணப்படுகிறது. விசேடமாக 80% நீரிழிவு நோயாளர்கள் இருந்தால் குறைந் தது 40 வீதமான சிறுநீரக நோயாளர்கள் இருப்பார்கள். மருத்துவ பரிசோ தனை செய்வோரில் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப் படுகிறது. கடைசிக் கட்டத்தில் தான் ஏதாவது பிரச்சினை யென்றால் பரிசோதிக் கிறார்கள். இந்தியா, இலங்கைபோன்ற நாடுகளில் ஒரு மருத்துவர் 50 முதல் 100 நோயாளர்வரை பரிசோதிக்கிறார். மருத்துவ வளம் இல்லாமையே இதன் காரணமாகும். மேற்கத்தேய நாடுகளில் ஒரு மருத்துவர் சுமார் ஐந்து நோயாளிகளைத்தான் பரிசோதிப்பார்” என்று தெரிவித்த டாக்டர் கோவிந்த ராஜன், மருத்துவ செலவு அதிகம் என்று வறிய மக்களுள் சிலர் கூறினாலும் அரசாங்கத்தின் நிவாரண நிதியைச் சரியாகப் பயன்ப டுத்துவதில்லை.

5 வருடங்கள் நோயால் பீடித்த வர்கள் ஓரிரண்டு மாதம் பொறுத்திருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அதே நேரம், இவ்வாறு மருத்துவ வசதியைப் பெற முடியாதவர்களுக்கு உதவ அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.