புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 
வன்னி மாவட்ட 750 பட்டதாரிகளுக்கு நியமனம் அரச தொழில் வாய்ப்பில் இன்னும் ஒரு மைல் கல்

வன்னி மாவட்ட 750 பட்டதாரிகளுக்கு நியமனம் அரச தொழில் வாய்ப்பில் இன்னும் ஒரு மைல் கல்

30 வருட யுத்தம் இந்த நாட்டுக்கு பேரழிவையே கொடுத்தது. மக்கள் நல்வாழ்வுக்கு எதையும் அது செய்யவில்லை. வடக்கில் வன்னி மாவட்டத்தை பொறுத்த வரையில் அழிவுகளுக்கு மேல் அழிவினை கொடுத்து மக்களை நிம்மதியிழக்கச் செய்த இந்த கொடூர யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துணிச்சலான செயற்பாடு கள் இன்று மக்களை நிம்மதியாக வாழ வழிவ குத்துள்ளது. சமூகங்களுக்கி டையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க மீண்டும் சில கட்சிகள் முனைப்புடன் செயற்படுகின்றன.

நல்லவர்களை உருவாக்குவதற்கு மதத் தலைமைகள், கற்றவர்கள், புத்திஜீவிகள், என பல தரப்பாரின் பங்களிப்பும் இன்றியமையாதது, அதே போல் தான் அரசியல் தலைமைகளும் தமது காத்திரமான பங்களிப்பை நல்கி வருகின்றன.

இந்த வகையில் வன்னி மாவட்டம் என்பது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை கொண்டதாகும். இந்த மாவட்டத்தில் கடந்த காலத்தில் காணப்பட்ட யுத்த சூழல்களால், அரச நியமனங்கள் வழங்கப்படுவதில் பெரும் தடைகள் காணப்பட்டன. உரிய பரீட்சைகளுக்கு தோற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இவ்வாறான நிலையில் தமது அரச நியமனங்களை பெற்றக்கொள்ள முடியாமல் நம்பிக்கையிழந்த ஒரு சமூகமாக வன்னி பட்டதாரிகள் காணப்பட்டனர்.

அவ்வாறு வேதனையும், கவலையும் அடைந்திருந்த அந்த பட்டதாரிகளின் வாழ்வில் ஒளியேற்றும் தினமாக 2012.07.09 ஆம் திகதி அமைந்திருந்தது. வவுனியா கலாசார மண்டபம் நிறைந்து வழியும் அளவிற்கு வன்னி பட்டதாரிகள் தமது அரச நியமனங்களை பெற்றுக்கொள்ள வருகை தந்திருந்தனர். தமிழ் மொழி பேசும் தமிழர்களும், முஸ்லிம்களும் அங்கு இன ஒற்றுமையுடன் அமர்ந்தி ருந்ததை சிலாகித்து கூறலாம். சுமார் 750 பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனங்களுக்கான கடிதங்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வழங்கினார். இந்த நியமனங்களை வழங்கும் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹ¥னைஸ் பாருக், முல்லைத்தீவு மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம், வடமாகாண ஆளுநரின் வவுனியா ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன், மன்னார் ஆணையாளர் எஸ்.எல்.டீன்.அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங் களின் தலைவர்கள் உட் பட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இனவாதத்தையும், மத வாதத்தை யும் தோற்றுவித்து அதன் மூலம் அரசியல் லாபம் அடையலாம் என சில வங்குரோத்து அரசியல் வாதிகள் செயற்படுகின்றனர், அவர்களின் இந்த சதிகளில் இன்று நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகள், சிக்கிவிடக் கூடாது. தேவையுணர்ந்த மனிதனுக்கு பணி செய்வதில் இறை திருப்தியும், மனதுக்கு நிறைவும் கிடைக்கும், அதனை புரிந்து தம்மை நாடி வரும் மக்களுக்கு நன்மை செய்யுங்கள்.

இனங்களின் ஒற்றுமைக்கு முக்கியத் துவமளித்து பிரிவினைகளுக்கு அப் பால் செயற்பட வேண்டும் என்பது எனது அறிவுரையாகும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.