புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

சவுதிக்கு மேலதிகமாக 77 விமான சேவைகள்

புனித ரமழானை முன்னிட்டு

சவுதிக்கு மேலதிகமாக 77 விமான சேவைகள்

புனித றமழான் மாத காலத்தில் எமிரேட்ஸ் சவூதி அரேபியாவுக்கான அதன் விரிவான விமான சேவைகளுடன் மேலதிகமாக 77 விமானங்களை இணைத்துள்ளது.

இந்த மேலதிக சேவைகள் மூலம் ஜெத்தா மற்றும் மதீனா அல் முனவ்வரா நகரங்களே கூடுதல் நன்மை அடையவுள்ளன. சமய அடிப்படையிலான பிரயாணங்களை இந்த கால கட்டத்தில் மேற்கொள்ளும் பெருந்திரளான பக்தர்களின் நன்மை கருதியே இந்த சேவை இடம்பெறவுள்ளது. 2012 ஜூலை 20 முதல் செப்டம்பர் 1வரை இந்த மேலதிக சேவைகள் இடம்பெறவுள்ளன.

றமழான் முழுவதும் ஜித்தாவில் இருந்தும் ஜித்தாவுக்கும் 59 மேலதிக விமானங்கள் சேவையில் ஈடுபடும். இதே காலப்பகுதியில் மதீனா அல் முனவ்வராவுக்கு 14 மேலதிக சேவைகள் இடம்பெறும்.

போயிங் 777 மற்றும் தி 330 என்பன மூலம் மூன்று வகைப்படுத்தல் பிரிவுகளில் இந்த சேவைகள் வழங்கப்படவுள்ளன. எமிரேட்ஸ் சவூதியில் தற்போது ஜெத்தா, றியாத், தமாம், மதீனா ஆகிய இடங்களுக்கு சேவைகளை வழங்கிவருகின்றது.

உம்றா பயணிகளுக்கான இந்த விசேட சேவைகளுக்கான அனுமதியை சவூதியிடமிருந்து எமிரேட்ஸ ஏற்கனவே பெற்றுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.