புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

SMS Cash ஆகும M - Pesa

புத்தம் புதிய ஜPப் கொம்பாஸ் 2012: தற்பொழுது இலங்கைச் சந்தையில்

2012 யூலையில் சந்தையில் அறிமுகமாகிய ஜீப் கொம்பாஸ் 4X4 (JeepRCompass4x4) புதிய சரித்திரம் படைத்துள்ளது. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட Grand Cherokee மற்றும் Wrangler Rubicon Unlimited வாகனங்களுக்கு மேலதிகமாக ஜீப் கொம்பாஸ் 2012 வழங்கும் சொகுசாக பயணத்தை இலங்கையின் ஜீப் பிரியர்கள் தற்பொழுது அனுபவித்து மகிழக்கூடியதாகவுள்ளது.

2012 ஜீப் கொம்பாஸ், உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஒன்றுசேர்ந்த புதிய மீள வடிவமைப்பைக் கொண்டதுடன் முன்னைய மாதிரிகளில் காணப்படும் சிறந்த உபகரண வசதிகள், மலிவான தன்மை, உட்புற நெகிழ்வுத் தன்மை, சிக்கன தன்மை, மேம்படுத்தப்பட்ட உட்புற வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட செசி, முற்றிலும் புதிதான கபின் போன்ற தனிச்சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.

ஸ்பீக்கர்கள், 6 சீடிக்கள் போடக்கூடிய தட்டு, Mp3 வசதி, மொபைல் தொலைபேசிகளுக்கான ஓடியோ ஜக், 6.5 அங்குல தொடு திரை என்பன சிறப்பாக குறிப்பிடப்படக்கூடியவை. இதில் உள்ள 30 ஜிகா பைட் நினைவகத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை சேமித்து வைத்து விரும்பியவாறு கேட்க முடிவதுடன் படங்கள், வீடியோக்கள் முதலியவற்றையும் ரசிக்க முடியும்.

ஜீப் கொம்பாஸ் 2012, 2.4 லீற்றர் கொள்ளளவு கொண்ட மேம்பட்ட செயற்பாடுகளை கொண்ட பெற்றோல் என்ஜினுடன் (twin overhead camshafts) வருகின்றது. இலத்திரனியல் கட்டுப்பாட்டைக் கொண்ட இந்த ஏற்பாடு அதிக சக்தி, சிறந்த எரிபொருள் சேமிப்பு மற்றும் சீரான, அமைதியான ஓட்டத்தைத் தருகின்றது.

குடும்பத்தினரின் நாளாந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டது. அதிக சக்தி வாய்ந்த உருக்கிரும்பிலான பீம்கள் மற்றும் முன்புற தடுப்பு, கதவுகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுடன் உயர்தரமுடைய காற்றுப் பைகள் (Multi - stage front airbage) ஆகியனவும் இதில் உள்ளன. இலங்கையில் ஜீப் மற்றம் கிரைஸ்லர் வாகனங்களின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக விளங்கும் டீமோ நிறுவனத்திடமிருந்து ஜீப் கொம்பாஸ் 2012 ஐப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.