புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

முதலாவது ஆண்டு வெற்றிகரமாகப் பூர்த்தி

Gold Star Transport Lanka (Pvt) Ltd

முதலாவது ஆண்டு வெற்றிகரமாகப் பூர்த்தி

பிரித்தானியாவில் செயல்படும் மிகப்பெரும் பண்ட இடமாற்று கம்பனிகளில் ஒன்றான Gold Star Transport Limited இன் கூட்டு நிறுவனமான Gold Star Transport Lanka (Pvt) Ltd அதன் முதலாவது ஆண்டு செயற்பாடுகளை இந்த வருடம் மே மாதம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பொறுப்பு சொல்லும் தன்மையை வழங்கும் வகையில் ஒன்லைன் வசதிகள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு உட்பட அதி உயர் பொறிமுறைகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஈடுபடுத்தி கம்பனி படிப்படியாக வளர்ச்சி அடைந்து இலங்கையில் பண்ட இடமாற்று துறையில் ஒரு முன்னோடி நிறுவனமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இருந்து வருவதும் புதிது புதிதாக தோன்றுவதுமான வாடிக்கையாளர் தேவைகளை மிக கவனமாக கருத்துற் கொண்டு இந்த இலங்கை நிறுவனம் தரம்வாய்ந்த Mercedes Benze முதன்மை வாகனங்களை பயன்படுத்தி பண்ட இடமாற்று சேவைகளை நடத்தி வருகிறது. தொழிற்புலமையும் அர்ப்பணிப்பும் நிறைந்த குழுவினருடன் கம்பனி இலங்கையில் பண்ட இடமாற்றுத் துறையில் முன்னணி வகித்து வருகின்றது. கம்பனியின் வர்த்தக பிரிவு பிரதம முகாமையாளர் கமால் திஸாநாயக்க கம்பனியின் வெற்றி குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விபரிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ளதும் பெறுமதிவாய்ந்ததுமான சேவையை வழங்குவது தங்கள் ஒருங்கிணைந்த கலாசாரத்தின் ஒரு அம்சம் என்று கூறினார். சேவையை ஆற்றுவதிலும் செலவு கட்டுப்பாட்டிலும் மட்டுமன்றி தொடர்பாடலிலும் தாங்கள் அதிஉயர் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமானதும் தேவைக்கேற்றபடி மாற்றியமைக்கப்பட்டதுமான சேவையை வழங்குவதற்கான நிபுணத்துவம், தொழில்நுட்பம், வளங்கள் ஆகியன எம்மிடம் உண்டு என்பதையும் வாடிக்கையாளர்கள் அவர்களது பெறுமதிமிக்க நேரத்தை பண்ட இடமாற்றத்தில் செலவிடுவதிலும் பார்க்க அவர்களது சொந்த அலுவல்களில் கவனம் செலுத்தக் கூடியதாக இந்தச் சேவையை மேற்கொள்ளலாம் என்பதையும் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.