புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

செயற்பரப்பை விஸ்தரித்துள்ள குறொஸ் போர்டர் அகடமி

செயற்பரப்பை விஸ்தரித்துள்ள குறொஸ் போர்டர் அகடமி

மாணவர்களுக்கு சிறந்த தொழில்வாய்ப்பைப் பெற்றுத் தரும் கல்விநிறுவனம் என Wissen Academy விருது பெற்றுள்ளது. விருந்தோம்பல் துறையில் அதிகரித்துவரும் தேவையைக் கருத்தில் கொண்டு நடுத்தர மற்றும் குறைந்த தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைநெறியை (Hospitality Management programme) இலங்கையில் வழங்குவதற்கு Cross Border Academy முன்னிற்கிறது.

இந்த வருடம் மூன்றாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இக்கல்வி நிறுவகம் அதன் ஸ்தாபகர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரான யட்டில விஜேமன்னேயினால் உருவாக்கப்பட்டது. 1980 இல் சிங்கப்பூரில் ஸ்தாபிக்கப்பட்ட, புகழ்பெற்ற Dimensions Education Group of Singapore எனும் கல்வி நிறுவகத்துடன் இணைந்த இந்த கல்வி நிறுவனமானது, மேலும் குரொஸ் போர்டர் நிறுவனத்திற்கான அதிகாரத்தையும் தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் டைமென்சன் கல்வி குழுமத்தின் இணை கல்வி நிறுவனமான சிங்கப்பூர் வைசென் அகடமியுடன் மேற்கொள்கின்றது.

இலங்கை மாணவர்கள் உள்ளூரிலேயே சர்வதேசத் தரம் வாய்ந்த விருந்தோம்பல் முகாமைத்துவக் கற்கைகளைத் தொடருவதற்கு ஒரு விருந்தோம்பல் முகாமைத்துவக் கல்வி நிறுவனத்திற்கான தேவை இருந்தமையால் இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு குறொஸ் போர்டர் அகடமி முன்வந்தது.

நடுத்தர மற்றும் குறைந்த தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான விருந்தோம்பல் கற்கைநெறியானது சிங்கப்பூரில் உள்ள இக்கல்வி நிறுவனத்தின் கல்விப் பங்காளர்களின் உத்தரவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கற்று வெளியேறும் அனைத்து டிப்ளோமா தகுதி பெற்றவர்களுக்கும் துறைசார் நிறுவனங்களில் கொடுப்பனவுடன் கூடிய அனுபவப் பகிர்வுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் குறொஸ் போர்டர் அகடமி மேற்கொண்டுள்ளது. இவற்றை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்கள் பொருத்தமான பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

அதற்கான தகுதியையும் வழங்கும் ஒரு நிறுனவமாகும். இதனை ‘One Stop Institution’ என்று குறிப்பிடுவது மிகையல்ல.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.