புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

SMS Cash ஆகும M - Pesa

SMS Cash ஆகும M - Pesa

Safaricom என்ற கையடக்க தொலைபேசி நிறுவனம் மூலம் கிராமிய சமுதாயங்கள் மத்தியில் பரவியுள்ள பிரபலமான கென்ய தொலைபேசி மூலமான வங்கி நடவடிக்கைப் பிரயோகம் SMS Cash உருவில் இலங்கையில் அறிமுகமாகிறது. ஒரு தனி மொபைல் நிறுவனத்துடன் இணைந்து கொள்ள வேண்டிய தேவை இல்லாத தனித்துவமான அமைப்பு SMS Cash ஆகும். SMS உங்கள் போனில் செயற்பட்டால் SMS Cash உங்களுக்கு வேலை செய்யும்.

M மொபைல் எனப்படும் M-Pesa ஐப் போலன்றி Swahili யில் “Pesa” Money கென்யாவில் உள்ள Safaricom வலையமைப்பின் மூலம் மட்டுமே செயற்பட முடியும். Dialoog, Mobitel, Airtel, Etisalat போன்ற எந்தவொரு மொபைல் லைன் செயற்பாட்டிலும் SMS Cash இனால் இயங்க முடியுமென்பதால் அதற்கு வரையறை எதுவும் கிடையாது.

மேலும், symbion அல்லது android அரங்குகளில் இயங்குவதற்கான மென்பொருளையும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அடிப்படை பொறிமுறை ஒன்றையும் இந்தப் பிரயோகம் கொண்டுள்ளது.

அண்மையில், உலகில் மிகவும் சக்திவாய்ந்த வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வங்கிக் குழுமமான Rotjschild இன் பெயரை பிரதிபலிக்கும் புசல்லாவ தோட்டம் ஒன்றில் இந்த திட்டம் பெரு வெற்றியை தந்தது. நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் ராவண விஜேரத்ன நேரடியாக இந்த முயற்சியை மேற்கொண்டார். இதன் அனுகூலங்களை தோட்ட மக்களுக்கு தெளிவுபடுத்த பயனுள்ள ஊடகத்தையும் மொழிபெயர்ப்பாளர்களையும் ஈடுபடுத்திய குழுவினர் நான்கு கிலோ மீற்றர் நடந்து புசல்லாவ நகரை சென்றடைந்தார்கள்.

பணம் மீளப்பெறல், பொருட்கள் அல்லது சேவைக்கான கொடுப்பனவு அல்லது இலங்கையில் எந்தவொரு கணக்கிற்கும் மாற்றம் செய்தலுக்கான அனுமதியைப் பெற SMS Cash இலகுவில் வழிவகுக்கிறது. இந்த நிகரற்ற வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கு மொபைல் போன்களையும் பரஸ்பர மனித செயற்பாட்டையும் இணைக்கும் ஒரு வியத்தகு அம்சம் இதுவாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.