புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

வெளிப்பூச்சில் கவனம் செலுத்தும் ஏஸியன் பெயின்ட்ஸ்

கண்ணைக் கவரும் புதிய வர்ணஜால சேர்க்கைகளுடன்

வெளிப்பூச்சில் கவனம் செலுத்தும் ஏஸியன் பெயின்ட்ஸ்

கட்டடங்களின் கம்பீரத்தை வெளிப்படுத்துவதற்காக அவற்றின் வெளிப்பகுதியில் வர்ணங்களைப் பூசும் பணியை ஏஸியன் பெயின்ட்ஸ் இலகுவாக்கியுள்ளது. இதற்கென்றே பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டியின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

“இமேஜின் எக்ஸ்டீரியர்ஸ்” எனும் பெயரில் இது வெளியிடப்பட்டுள்ளது. வழமையான வர்ண நிரல் அட்டைகளுக்கு மாற்றமாக வீடுகளின் வெளிப்பகுதி மாதிரிப் படங்களுடன் 60 வர்ண கலப்பு இணைப்புக்களைக் கொண்டதாக இது வெளியிடப்பட்டுள்ளது. காட்சிகளையும் வர்ணங்கள் தொடர்பான முடிவுகள் எடுப்பதையும் இது மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

கம்பனியின் தயாரிப்பான ஏபக்ஸ் அல்டிமா வெலர் புரூப் எக்ஸ்டீரியர் எமஸ்ஸன் தயாரிப்புக்குத் துணையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வழிகாட்டியானது கைக்கு அடக்கமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் கம்பனியால் வெளியிடப்பட்டு மிகவும் பிரபலமான ஏஸியன் பெயின்ட்ஸ் வர்ண இணைப்பு வழிகாட்டியின் தொடராக இது வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டி ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், வெளிறிய பழுப்பு நிறம், பச்சை, நீலம், வெள்ளை என பல வர்ண விரிவுகளை அது உள்ளடக்கியுள்ளது.

இந்த ஒவ்வொரு வர்ணக் குடும்பத்துக்கும் பொருத்தமான பல இணைப்புக்களையும் அது வழங்குகின்றது. இவை இரண்டு முதல் நான்கு சாரல்களையும் கொண்டுள்ளன. இந்த இணைப்புக்கள் உண்மையாகவே வெளிப்பகுதியில் பூசப்பட்ட வீடுகளின் அதி உயர் தரம் மிக்க படங்களும் இதில் தரப்பட்டுள்ளன. இந்த வர்ண சேர்க்கைகளின் உண்மையான தாக்கத்தை பாவனையாளர்கள் கண்கூடாகக் காணும் வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகின்றது.

பல்வேறு கட்டிட வடிவமைப்புக்களுடன் இசைவுடையதாக இந்த வர்ண சேர்க்கைகள் பிரசித்திபெற்ற கட்டிட கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.