புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

மகத்தான அனுபவம் தரும் Bread talk

மகத்தான அனுபவம் தரும் Bread talk

Bread talk நிறுவனம் உலகளாவிய 600 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் பெருவிருட்சமாகத் தழைத்தோங்கியுள்ளதுடன், இலங்கையில் அமைந்துள்ள அதன் பிரதான விற்பனை நிலையமானது உலகின் மிகப் பாரிய அளவிலான பேக்கரி விற்பனை நிலையமாகவும் கருதப்படுகிறது. Bread talk நிலையத்தில் பணிபுரிபவர்களின் கடின உழைப்பும், தொழில் பக்தியுமே அந்த நிறுவனம் பாண், இனிப்பு வகைகள் மற்றும் இதர பேக்கரி உணவுகளை அதிசிறந்த தரத்திலான உற்பத்தி வடிவங்களில் மக்களுக்கு விநியோகிப்பதற்கு வழிகோலியுள்ளன. Bread talk பேக்கரி நிலையத்தில் உணவுப்பண்டங்களைத் தயாரிக்கும் இடத்தை பார்க்கும் வாய்ப்பு அங்கு வருகைதரும் எவருக்கும் கிடைப்பதுடன், அது வெறுமனே ஒரு பேக்கரி மட்டுமன்றி சமையற்கலையம்சங்கள் நிரம்பிய மகத்தான ஒரு இடம் என்பது புலப்படும்.

Bread talk அணியில் இடம்பெறும் ஒவ்வொரு பணியாளரும் முழுமனதுடன் திறம்படப் பணியாற்றிவருவதுடன் ஒருவருக்கொருவர் திறமைகளைப் பகிர்ந்துகொண்டும், அனைவரையும் தட்டிக்கொடுத்து திறம்படச் செயலாற்றியும் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒளிந்துகிடக்கும் விசேட திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இங்கே தனிப்பட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஹோகணவின் பயணங்கள் கடினமாக அமைந்தாலும் பணி அனுபவம் மகத்தானது Bread talk இலுள்ள தலைமை சமையல கலைஞர்களுள் ஒருவராகப் பணிபுரிகின்ற 36 வயது நிரம்பிய சமிந்த குமார் ஹோகண நான்கு கிலோமீட்டர் தூரம் நடையாகச் சென்று பேரூந்துவண்டியில் ஏறி தனது வேலைத்தளத்தை வந்தடைகின்றார். அவரது பயணம் இலகுவானதாக இல்லாதபோதும் நேரகாலத்திற்கே தனது பணியை ஆரம்பிக்கும் அவரது கடும் உழைப்பிற்கு நிகர் எதுவும் கிடையாது. இதற்கு முன்னர் வேறு பல பேக்கரிகளில் அவர் பணியாற்றியுள்ளதுடன், தனது சொந்த முயற்சியின் கீழ் தின்பண்ட கடையொன்றையும் அவர் நடாத்திவந்துள்ளார். அவர் Bread talk இல் இணைந்த பின்னர் தனது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் ஆவலுடன் கடும் உழைப்பை வெளிப்படுத்திவருகிறார். சிங்கப்பூரில் இடம்பெற்ற பயிற்சிகளின் போது முதற்தொகுதி அணியில் இடம்பெற்று அங்கு 3 மாதகாலம் தங்கியிருந்து சிறப்பான பயிற்சிகளைப் பெற்றபின்னர் அங்கு பெற்றுக்கொண்ட அனுபவத்தின் பலனாக சிறந்த முறையில் ஹோகன இங்கு பணியாற்றிவருகிறார். “இப்பயிற்சி எனது வாழ்க்கையில் கிடைக்கப்பெற்ற மகத்தான அனுபவங்களுள் ஒன்று. எனக்கு வழங்கப்பட்ட பயிற்சி மிக இலகுவானதல்ல. ஆனாலும் மிகக் குறுகிய காலத்தில் நான் கற்றுக்கொண்ட விரிவான விடயங்கள் உண்மையில் விலைமதிக்க முடியாத அனுபவங்கள். நாம் அங்கு முதலில் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது சிங்கப்பூரைச் சேர்ந்த தலைமைச் சமையல் கலைஞர்கள் 15.20 நிமிடங்களில் தயாரித்த ஒரு தின்பண்டத்தைத் தயாரிப்பதற்கு எமக்கு இரு மணித்தியாலங்கள் வரை தேவைப்பட்டிருந்தது. நாம் அனுபவமுடையவர்களாக இருப்பினும் பண்டங்களைத் தயாரிக்கும் அவர்களின் நடைமுறைகளும், துல்லியமான நுட்பங்களும் அவர்கள் மிக விரைவாக அவற்றைத் தயாரிப்பதற்கு இடமளித்திருந்தன. ஆனாலும் எமது பயிற்சியை நிறைவுசெய்த வேளையில் நாமும் அவர்களுக்கு ஈடாகக் கற்று எமது திறமைகளையும் வளர்த்துக்கொண்டோம்” என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.