புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

"களனி அன்டெனா வயர்'' அறிமுகம்

"களனி அன்டெனா வயர்'' அறிமுகம்

இலங்கையின் முன்னணி வயர் விநியோக வர்த்தக நிறுவனமாக திகழும் களனி கேபிள்ஸ் நிறுவனத்திடமிருந்து, ஜப்பானிய தரத்துக்கு அமைவாக (நியிஷி) “களனி பாதுகாப்பான அன்டெனா வயர்” வகையை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்நாட்டின் அன்டெனா பாவனையில் நிரந்தர பிரச்சினையாக காணப்படும் தொலைக்காட்சியில் தெளிவற்ற காட்சி தோன்றும் நிலைக்கு சிறந்த தீர்வாகவும், சந்தையில் காணப்படும் தரம் குறைந்த அன்டெனா வயர்களுக்கு நுகர்வோர்கள் ஏமாறுவதை தவிர்க்கும் வகையிலும் இந்த வயர் வகையை சந்தையில் களனி கேபிள்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

இந்த வயர் வகையை சுற்றி காணப்படும் தூய்மையான செப்பு கம்பி வலை மூலம் வெளிப்பகுதியி லிருந்து வரும் அலைவரிசைகளிலிருந்து பாதிப்பு ஏற்படாதவண்ணம் பாதுகாத்து, தொலைக்காட்சி அலைவரிசைக்கு 95 சதவீதத்துக்கும் அதிகமான தெளிவான விம்பத்தை வழங்குகிறது.

மேலும், “களனி பாதுகாப்பான அன்டெனா வயர்” இல் காணப்படும் விசேடத்துவம் யாதெனில், 75 ஓம் மீடிறன் அலைவரிசையை அந்தளவிலேயே பேணி, தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு தெளிவான விம்பத்தை வழங்கும் திறனையும் கொண்டுள்ளது.

இந்த அன்டெனா வயரின் மேற்பரப்பானது, புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், வயரிலுள்ள செப்புக் கம்பி வலையானது பாதுகாப்பு மற்றும் வயரொன்றில் காணப்படவேண்டிய அவசியமான வளைதிறன் சீராக காணப்படுவதுடன் ஹோட்டல்கள், தொடர் மாடிகள், பெரிய கட்டடங்கள் மற்றும் வீடுகளில் சுவர்களினூடாக அமையும் கண்டியுட் குழாயினூடாக வயர்கள் செல்லும் போது இலகுவாக வளைதிறனை கொண்டமைவதுடன், வினைத்திறன் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. மேலும் காலாகாலமாக இவற்றை மாற்ற வேண்டிய அவசியமும் தேவைப்பாடுமில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.