புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 
ஐ.தே.க.வினால் முடிந்தால் இந்த அரசை கவிழ்த்துக் காட்டட்டும்

ஐ.தே.க.வினால் முடிந்தால் இந்த அரசை கவிழ்த்துக் காட்டட்டும்

பாராளுமன்றில் அமைச்சர் நிமல் சவால்

”ஐக்கிய தேசியக் கட்சி முடிந்தால் அரசாங்கத்தைக் கவிழ்த்துக் காட்டட்டும்” என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன் றத்தில் நேற்றுச் சவால் விடுத்தார்.

”இன்றைய அரசாங்கம் சரிந்தாலும் அதனைத் தாங்கிப் பிடிக்க எமக்கு ஆட்களுண்டு” என தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பத்தா யிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய போதும் மக்கள் எதிர்க் கட்சிக்கன்றி அரசாங்கத்திற்கே ஆதரவு வழங்கி வெற்றி பெறச் செய்தனர் என்பதை எதிர்க் கட்சி மறந்து பேசக் கூடாது எனவும் தெரிவித்தார்.

உலகில் பலவந்த நாடுகளே கடன் பெறும் போது இலங்கை போன்ற வளர்முக நாடுகள் கடன் பெறுவது தவிர்க்க முடியாது என தெரிவித்த அமைச்சர் ஐ.தே.க.வின் விமர்சனங்கள் மக்களிடம் எடுபடாது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார். தேசிய, சர்வதேச ரீதியில் மிகவும் குறைந்த வட்டியிலேயே அரசாங்கம் கடன்பெற்றுள்ளது. இது தொடர்பில் எதிர்க் கட்சி முன்வைக்கும் விமர்சனம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அரசாங்கம் சர்வதேச ரீதியில் பெற்று வரும் கடன்களுக்குப் பெரும்பாலும் நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு வீத வட்டியையே வழங்குகிறது. எதிர்க் கட்சி இது தொடர்பில் தவறான தகவல்களை வழங்கி மக்களை திசை திருப்பப் பார்க்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.