புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 

NEW LANKA LEARNERS பயிற்றுவிக்கும் பாணி புதுமையானது!

NEW LANKA LEARNERS பயிற்றுவிக்கும் பாணி புதுமையானது!

“ஒரு தொழிலாவது குறைந்தது கற்றிருக்கவேண்டும் என்ற கரிசனையில் கார் ஓட்டப் பழகினேன். பல விதத்திலும் அது பலன் அளித்தது.

நம் நாட்டிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சாரதி தொழிலுக்காக சென்று கை நிறைய சம்பாதித்துவருகின்றனர். சாதகமான இந்தத் தொழிலைப் பார்த்ததும் ஓர் எண்ணம் எனக்குத் தோன்றியது. கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கவேண்டும் என்ற இலட்சியம்தான் அது.

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்களை ஓட்டப் பயிற்றுவிக்கும் இந்த NEW LANKA LEARNERS நிறுவனத்தை நம்பிக்கையுடன் ஆரம்பித்தேன். சம்பாதிக்கும் நோக்கம் என்று மட்டும் இல்லாமல் சமூகத்துக்கு உதவும் பணியாகவே இதனைத் தேர்வு செய்தேன்.

வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு விசேட சலுகை அடிப்படையில் கனரக வாகனம் முதல் நாளாந்தம் உழைத்து வாழ்வை ஓட்டும் ஆட்டோவரை பயிற்றுவிக்கும் பணியை முன்னெடுத்துச் செல்கிறேன்” இப்படி மகிழ்ச்சியுடன் தெரிவிப்பவர் சமூக சேவையா ளரும் ஆளும் கட்சியின் கொட் டிகாவத்தை பிரதேச சபை உறுப்பினருமான மெளலவி ஏ. ஸனீர்.

கடந்தபதின்மூன்று வருடகால சேவையில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்க ளும் சிறப்பான பயிற்சியைப் பெற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் புரிவது பூரிப்பை தருகிறது என்றும் நெகிழ்ந்து போகிறார். இலக்கம் 105/3, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் 13 ஆண்டுகளாக வாகனம் ஓட்டும் பயிற்சியை வழங்கிவரும் நிவ் லங்கா லேனர்ஸ் நிறுவனத்தார் ஒருவர் முழுமையான சட்ட விதிமு றைப்படி திருப்தியாக பயிலும் வரை அவருக்கான பயிற்சியை வழங்கிவருகின்றனர். நியாயமான கட்டணம் அறவிடப்படுவதால் அதிகமானவர்கள் பயிற்சிக்காக வந்து பதிவு செய்துகொள்கிறார்கள்.

வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சியுடன் இன்ஜின் சம்பந்தமான அடிப்படை விடயங்களையும் கற்றுக்கொடுக்கின்றனர். முழுமையான பயிற்சியின் பின் சாரதி பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளையும் செய்துகொடுக்கின்றனர். தங்கு தடையின்றி வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டவரின் முகத்தில் மலரும் புன்னகைப் பூக்கள் எமது ஆக்கபூர்வமான இந்தப் பணிக்கு வாசம் வீசிக்கொண்டிருக்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.