புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 
கல்முனை பிரதி மேயராக சிராஸ்

பல்வேறு ஊகங்களுக்கும் முற்று:

கல்முனை பிரதி மேயராக சிராஸ்

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப் பட்டுள்ளார். இதன் மூலம் கல்முனை பிரதி மேயர் சர்ச்சைக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. கல்முனை பிரதி மேயராகவிருந்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர் புதிய மேயராகப் பதவியேற்ற தையடுத்து பிரதி மேயர் வெற்றிடத்துக்கு நியமிக்க ப்படுபவர் பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவின. மேயராகவிருந்து இராஜினாமாச் செய்த சிராஸ் மீராசாஹிப் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியையும் துறப்பாரென ஹேஸ்யங்கள் வெளிவந்த போதும் அதற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் இந்த புதிய நியமனம் அமைந்துள்ளது.

கல்முனை மாநகர சபை மேயர் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு சர்ச்சைகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கியிருந்த போதும் தலைவர் ஹக்கீம் மேற்கொண்ட சாவதனமான நடவடிக்கையினால் சுமுகமான நிலைக்கு கட்சியை இட்டுச் சென்றுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். மு.கா. பிரதேசவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்காது என்ற செய்தியை இந்த நியமனங்கள் உணர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேயர் பதவியிலிருந்து இராஜினமாச் செய்த சிராஸ், துணை மேயராகவேனும் பதவி வகிக்க வேண்டுமென்று சாய்ந்தமருது பிரதேச மக்கள் சிராஸ¤க்கு அழுத்தங்கள் கொடுத்து வந்த நிலையில் சிராஸ் இந்தப் பதவியை ஏற்கின்றார். துணை மேயராகப் பதவியேற்கும் சிராஸ் தேர்தல் திணைக்களத்தின் ஆவணங்களிலும் நேற்று கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை, மேயராக இருந்த ஒருவர் துணை மேயராகவும் துணை மேயராக இருந்த ஒருவர் மேயராகவும் பதவியேற்று மாநகர சபை வரலாற்றில் ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசியல் வாதிகளுக்கு ஒரு முன்மாதிரி நடவடிக்கையாகவும் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி மேயராக இருந்து பல்வேறு சேவைகளைச் செய்த சிராஸ் துணை மேயராக பதவியேற்பதன் மூலம் தனது அரசியல் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.