புத் 65 இல. 47

விஜய வருடம் கார்த்திகை மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் பிறை 20

SUNDAY NOVEMBER 24 2013

 

 

சப்ரகமுவ தோட்டங்களை உல்லாசபுரியாக மாற்றலாம்

சப்ரகமுவ தோட்டங்களை உல்லாசபுரியாக மாற்றலாம்

மாகாணசபை உறுப்பினர் கே. இராமச்சந்திரன்

சபரகமுவ மாகாண தோட்டப்பகுதிகளில், உல்லாசப்பயணிகளை கவரும் பல அற்புதமான இயற்கை காட்சிகள் கொண்ட இடங்கள் காணப்படுகின்றன. இவற்றினை அபிவிருத்தி செய்வதன் மூலம் மலையக இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியுமென்று சபரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் கே. இராமச்சந்திரன் கூறினார்.

சபகரமுவ மாகாண சபையில் 2014 ஆம் வருடத்திற்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டு இது குறித்த குழுநிலை விவாதம் கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை இரத்தினபுரியிலுள்ள சபரக முவ மாகாண சபைக் கட்டிடத்தில் அவைத் தலைவர் காஞ்சன ஜெயரட்ன தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்று இளைஞர் விவகார உல்லாச பயணத்துறை, மாகாண வீதி அபிவிருத்தி கிராமிய அபிவிருத்தி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதம் நடைபெறுவதாக தெரிவித்தார், பெருந்தோட்டப்பகுதிகளில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த விளையாட்டு கழகங்களை உருவாக்க வேண்டும். அத்துடன் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெருந்தோட்ட வீதிகளில் பல சீர் செய்யப்பட்டுள்ள போதிலும் பல வீதிகள் பழுதடைந்து காணப்ப டுகிறது. அதனை செப்ப னிட வேண்டும். இவ்வாறு பழுதடைந்த வீதியில் பயணிப்பதனால் கர்ப்பினிப் பெண்கள் மற்றும் நோயா ளிகள் சொல்லொனா துய ரங்களை அனுபவிக்கின் றனர் என்றார்.

இங்கு உரையாற்றிய மாகாண அமைச்சர் அத்துல குமார ராகுபத்த கூறியதாவது,

எனது அமைச்சின் கடந்தகால குறை நிறைகளை உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர். இவற்றில் ஐக்கிய தேசியக் கட்சி சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளவில்லை. எமது அமைச்சின் சேவைகளை பெருந்தோட்ட மக்கள் உள் ளிட்ட அனைத்து மக்களும் தமது கட்சி பேதங்களுக்கு அப்பால் அனுபவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் முயற்சி காரணமாக சபரகமுவ மாகாண மக்கள் காபட் வீதிகளை (கிராம பகுதி மக்கள்) அனுபவிக்கின்றனர். அவர்களின் இம் முயற்சி இல்லாவிட்டால் நீங்களும் இது பற்றி இங்கு உரையாற்ற மாட்டீர்கள்.

எமது சேவை கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் செல்ல வேண்டும். அதன்படியே எமது அமைச்சு செயற்படும் அத்துடன் கடந்த காலங்கள் தொடக்கம் இன்றுவரை எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கு உரையாற்றிய ஐ.தே.க உறுப்பினர் இப்னார் மொஹமட், அமைச்சர் அத்துல குமார ராகுபத்தவின் அமைச்சுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் முயற்சி காரணமாக பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார் என்றார்.

இவ்வமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 17 மேல திக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.