ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

சர்வதேச கண்காணிப்பாளர் குழு வடக்கில் பணிகளை ஆரம்பித்தது

சர்வதேச கண்காணிப்பாளர் குழு வடக்கில் பணிகளை ஆரம்பித்தது

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நேற்று முதல் வட மாகாணத்தில் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. 12 நாடுகளைச் சேர்ந்த 30 சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபடுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் ரத்நாயக்க கூறினார். தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவதற்காக வடபகுதி செல்வதற்கு முன்னர் நேற்று முன்தினம் தேர்தல் கண்காணிப் பாளர்கள் தேர்தல் ஆணையாளரை சந்தித்தனர். அரசியல் கட்சிகளையும் இவர்கள் சந்தித்ததாக அறிய வருகிறது.

இந்திய முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையிலான 20 பேரடங்கிய குழுவும் பெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் வந்துள்ள 9 பேரடங்கிய குழுவும் வடக்கில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கிறது.

பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 5 பேரடங்கிய குழுவும் ஏனைய சர்வதேச கண்காணிப்பு குழுக்களும் மத்திய, வடமேல் மாகாண பகுதிகளில் கண்கா ணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி