ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

டெங்கு நோயை முன்கூட்டியே இனங்காணும் ஸ்கானர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகம்

டெங்கு நோயை முன்கூட்டியே இனங்காணும் ஸ்கானர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகம்

* அதிர்ச்சி

* இரத்தப் போக்கு

டெங்கு அதிர்ச்சி நிலைக்கு உள்ளாகும் நோயாளர்களை முன்கூட்டியே இனம் காணக்கூடிய விஷேட அல்ட்ரா செளன்டர் ஸ்கோனர் (Ultra Sound Scanner) இயந்திரத்தை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்குப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.

டெங்கு நோய்க்கு உள்ளாகின்றவர்கள் டெங்கு அதிர்ச்சி மற்றும் டெங்கு இரத்தப்போக்கு ஆகிய இரு நெருக்கடி நிலை களாலும் உயிரிழப்புக்கும் முகம் கொடுக்கின்றனர். இந்நிலைக்கு டெங்கு நோயாளர்கள் உள்ளாவதைத் தவிர்ப்பதற்காக இந்த அல்ட்ரா செளன்ட் ஸ்கேனர் இயந்திரம் உலகின் பல நாடுகளிலும் தற்போது பயன்படுத்தப்படுகின்றத.

இந்த இயந்திரத்தைப் போதனா ஆஸ்பத்திரிகளுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறுவர் நோயியல் நிபுணர்கள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடத்திருந்தனர்.

இதனடிப்படையில் இருபது மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட பத்து அல்ட்ரா செளன்ட் ஸ்கேனர் இயந்திரங்கள் நேற்று (16ம் திகதி) பத்து பிரதான ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டன. என்றாலும் டெங்கு நோய்க்கு உள்ளாகின்றவர்களுக்கு விசேடமான சிகிச்சை அளிக்கவென நூறு ஆஸ்பத்திரிகளில் விஷேட பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்த விஷேட இயந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி