ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

பல்வேறு விபத்துக்களில் ஏழு பேர் பலி

பல்வேறு விபத்துக்களில் ஏழு பேர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஏழு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர். தம்புள்ள, பகமூன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவரும், வேறு இரு விபத்துக்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். அநுராதபுரம், புத்தளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் பலியாகியுள்ளனர்.

தம்புள்ள, பகமூன 4 ஆவது மைற்கல் பகுதியினூடாக பயணித்த லொறியொ ன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளா னதில் மூவரும் இறந்துள்ளனர்.

இவர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளதாக அறிய வருகிறது. உபாலி ஜயசிங்க, 30 வயது, கயான் பிரசன்ன (21 வயது), செவ்வந்தி சந்தமாலி (28) ஆகியோரே இவ்வாறு இறந்துள்ளனர். வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ள பெல்வெஹர பகுதியில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில்

மொராயஸ் (45) என்பவர் இறந்துள்ளார். பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை கனரக லொறியொன்றின் பின் சில்லுக்குள் சிக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் இறந்த சம்பவமொன்று தம்புள்ள குருணாகல் வீதியில் நடைபெற்றது. பண்டார (60) என்பவரே இந்த விபத்தில் இறந்துள்ளார்.

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் வைத்து ‘ஐஸ்’ ஏற்றிச் சென்ற லொறியொன்றும் பஸ்ஸ¤ம் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகளும் கொல்லப்பட்டனர். தாயும் மகனும் காயமடைந்துள்ளனர். 3 1/2 வயது சிறுமியும் 32 வயதான இளைஞருமே இறந்துள்ளனர்.

பொலிஸ் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் மீது பின்னால் வந்த லொறி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. திருமண வீடொன்றுக்குச் சென்று விட்டு திரும்பிய பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி