ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

ரியல் மெட்ரிட் கழகத்தில் மேலும் மூன்று ஆண்டுகள் நீடிக்க ரொனால்டோ ஒப்பந்தம்;

ரியல் மெட்ரிட் கழகத்தில் மேலும் மூன்று ஆண்டுகள் நீடிக்க ரொனால்டோ ஒப்பந்தம்;

வருட சம்பளம் ரூ.143 கோடியாக நிர்ணயம்

போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல்மெட்ரிட் கழகத்தில் மேலும் 3 ஆண்டுகள் நீடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ரூ. 143 கோடி சம்பளமாகக் கிடைக்கும்.

போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த முன்னணி உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கழக அணியில் விளையாடி வந்தார்.

மான்செஸ்டர் கழகத்தில் இருந்து 2009ம் ஆண்டில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெயினை சேர்ந்த ரியல்மெட்ரிட் கழகத்திற்கு மாறினார். அதாவது உலக சாதனை தொகையான ரூ. 823 கோடிக்கு ஒப்பந்தமாகி எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். 6 ஆண்டுக்கான இந்த ஒப்பந்தம் 2015ம்ஆண்டுடன் நிறைவடைகிறது.

ஒப்பந்தம் முடிந்ததும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் கழகத்திற்கு திரும்புவார் என்றும் கத்தாரில் உள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கழகத்தில் இணையலாம் என்று செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் ரியல்மெட்ரிட் கழகத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மேலும் 3 ஆண்டுகள் நீடிக்க ஒப்புக்கொண் டுள்ளார். அதாவது 2017-18 ம் ஆண்டு பருவகாலம் முடியும் வரை ரியல் மெட்ரிட் கழக தலைவர் புளோரென்டினா பெரெஸ்சும் நேற்று முன்தினம் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சி ரியல்மெட்ரிட் கழக ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இதுவரை 203 கோல்கள் அடித்துள்ள 28 வயதான கிறிஸ்டியானோ ரொனால் டோவுக்கு, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 143 கோடி சம்பளமாக கிடைக்கும். இது உதைபந்தாட்ட விரர்கள் வாங்கும் சம்பளத்தில் அதிகபட்சமாகும். இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனின் அங்கமான வேல்ஸ் நாட்டு விரர் காரெத்ராங் பாலே ரூ. 872 கோடிக்கு ரியல் மாட்ரிட் கழகத்தில் ஒப்பந்தமாகி ரொனால்டோவின் உலக சாதனை தொகையை முறியடித்து உலகிலேயே விலை உயர்ந்த உதைபந்தாட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

புதிய ஒப்பந்தம் முடிந்த பின்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கருத்து தெரிவிக்கையில், 'மான்செஸ்டர் கழகத்தை மறக்க முடியாது. அதே நேரத்தில் ரியல் மாட்ரிட் கழகத்தில் நான் மிகவும் மகழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் நான் எல்லா கழகங்களையும் மதிப்பவன். வருங்காலம் எப்படி இருக்கும் என்று யாருக்கு தெரியும். ரியல் மெட்ரிட் கழகத்திற்காக கோப்பையை வெல்வதே எனது நோக்கம். ரசிகர்கள் இன்னும் என்னை விரும்புவதற்காக அவர்களைப் பாராட்டுகி றேன். எனது சிறந்த ஆட்டத்தை கழகத்திற் காக அளிப்பதுடன் சக வீரர்களுக்கு உதவியாக இருக்கவும் முயற்சிப்பேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி