ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221

சட்டத்தரணி நீலகண்டனுக்கு எதிராக கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்

* தமிழ் மக்களின் அமைதியை குழப்ப முயன்றதாகக் குற்றச்சாட்டு

* தனது கருத்துக்கு மன்னிப்புக்கோர வேண்டுமென
 ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம்

இலங்கையை இந்தியா கைப்பற்றி தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் கருத்து தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.தமிழ், சிங்கள மக்கள் அமைதியான சூழ்நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நிலையில், நீலகண்டனின் கருத்து நாட்டையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

விவரம்

புகையிரதத்தில் இருந்து இறக்கப்படும் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக புகையிரத நிலையத்தில் ஒரு பிரிவை அமைக்கின்ற அதேநேரத்தில் பண்டங்களைக் கொண்டு செல்லும் பணியில் புகையிரத சேவையை முதன்மையானதாக்குவேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அத்தனை சேவைகளையும் மலையகத்துக்கு தொடர்ந்தும் வழங்கத் தயார்

தேயிலை தோட்டங்களில் மீள் நடுகை இன்றேல் அதனை அரசு மேற்கொள்ள வேண்டிவரும்: தலவாக்கலையில் ஜனாதிபதி

தலவாக்கலையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், நோட்டன் பிரிஜ் தினகரன் நிருபர்மலையக மக்களுக்காக அமைச்சர் தொண்டமான் கேட்டுக்கொண்ட அத்தனையையும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்போம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

விவரம்

அமைச்சர் ஆறுமுகன் ஜனாதிபதியிடம் விடுத்த இரு வேண்டுகோள்கள்

மலையக தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு வசதிகளையும் தோட்ட மக்களைப் பாதிக்கும் மதுபானசாலைகளை மூடிவிடும் நடவடிக்கையையும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அமைச்சர் தொண்டமான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

விவரம்

வாக்களிக்க தவறியோருக்கு நாளையும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தவறியவர்களுக்கு நாளை (18) வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை தேர்தல்கள் திணைக்களம் வழங்கியுள்ளது.இதன்படி, நாளை (18) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள்ளாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் அல்லது கொழும்பிலுள்ள தேர்தல் செயலகத்திற்கு நேரில் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்ததன் பின்னர் வாக்களிக்க முடியுமெனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.

விவரம்