ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை

விசாரணை ஒத்திவைப்பு

சொத்துக்கள் விபரம் தொடர்பான பிரகடனத்தில் தேசிய அபிவிருத்தி வங்கியில் வைத்திருந்த இரு விசேட நடமாடும் கணக்குகளின் விபரங்களை மூன்று வருடங்களாக மறைத்து வைத்த விடயம் தொடர்பாக (நேற்று 16/9) கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜரான முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாய க்கவின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்து பிரதம மாஜிஸ்ரேட் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவு பிறப்பித்தார்.

வெளிநாடு செல்வதானால் நீதிமன்றத்துக்கு அறிவித்து நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இவருக்கு இந்த வெளிநாட்டு தடை, லஞ்ச ஆணைக்குழு சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெறும் வேளையில் பிறப்பிக்கப்பட்டதாகும்.

அது மாறாமல் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் பிரதம மாஜிஸ்ரேட் தெரிவித்தார். நேற்று ஷிராணி பண்டாரநாயக்க நீதிமன்றில் ஆஜரானார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்பான கணனித் தரவுகள் தொடர்பாக சாட்சியங்களை அழைக்க எதிர்பார்க்கிறோம். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் முன்னர் அதற்குத் தேவையான கால அவகாசம் வழங்குமாறு அரச சிரேஷ்ட வழக்குரைஞர் திலான் ரத்நாயக்கா கேட்டுக் கொண்டார். கணனித் தரவுகள் மீது சமர்ப்பணமாகும் குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பை தாக்கல் செய்யப்போவதாக சிராணி பண்டார நாயக்கவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நZன் லத்துவஹெட்டி சுட்டிக்காட்டினார்.

நூறு சட்டத்தரணிகள் வரை சிராணியின் சார்பில் ஆஜராகினர். அவர்களின் பெயர் அட்டவணையையும் வழக்கு கோவையில் உட்படுத்துமாறும் லத்துவஹெட்டி மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்கு எவ்வாறு விசாரிக்கப்படுகிறது. நியாயம் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஆர்வம் கொண்டுள்ள சட்ட அறிஞர்கள் சகல உறுப்பினர்களின் விருப்பில் நிறைவேற்றுச் சபையின் கண்காணிப்பாளர்கள் இங்கு ஆஜராகி இருப்பதாக சட்ட அறிஞர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

மூன்று வழக்குகளை இந்த நீதிமன்றில் விசாரிப்பது தொடர்பாக எதிர்ப்பு உண்டா? என மாஜிஸ்திரேட் கேட்டார். எவ்வித எதிர்ப்பும் இல்லையென்று லத்துவஹெட்டி தெரிவித்தார்.

சிராணிக்கு பிணை வழங்குவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்படா மையினால் மற்றைய வழக்கு தினத்தில் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

சிராணி பண்டாரநாயக்கவுக்கு குற்றப்பத்திரத்தை வாசித்துக் கொடுப்பதற்காக மீண்டும் பெப்ரவரி 19ம் திகதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. (எப்.எம்.)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி